என்ன உலகமோ

This entry is part [part not set] of 55 in the series 20031211_Issue

சத்தி சக்திதாசன்


விந்தையான மனிதர்
வித்தியாசமான உள்ளங்கள்
துள்ளி எழுவர் – பின்
துவண்டு விழுவர்

காகிதங்களில் கிறுக்குவர்
கசங்கிய உள்ளங்களின்
வெதும்பலை என்றுமே
வெளிப்படையாய்
ஏற்றுக்கொள்ளார்

இதுதான் இன்றைய
இருபத்தியோராம்
நூற்றாண்டாம் என்னடா
நிச்சயமாய் இதில் ஓர்
நிதர்சனம் என்றுமே
தெரியவில்லை

கலர் கலராய் டாவீகள்
கச்சிதமாய் அவைகளிலே
தினம் ஒரு சீரான
கருத்துப் போராட்டம்
‘என்று மடியும் இந்த
போலிப் போரட்டம்
என்று தணியும் இவர்
வாய்ச்சொல்லு சீர்சிருத்தம் ‘

பல வழிகள் உண்டு உலகில்
பணியாமல் வாழவே – ஆனால்
அத்தனையும் உங்கள் கொள்கையை
அனுசரிக்கும் வழிமுறையா ?
சமுதாயச்சந்தையிலே நாமெல்லாம்
சல்லிக்காசு பெறாத
சதைப்பிண்டங்கள் தான்

என்னைப்பெற்றதொரு அம்மாதான்
நான் பெறப்போகும் வாழ்விற்கு
இன்னொரு அம்மாவின்
இன்பத்தை அடகு வைக்கின்றேன்
நான் ஒரு சகோதரன் தான்
நல்ல வாழ்க்கைக்காக-இன்னொரு
சகோதரனின் கண்களில்
சமுத்திரத்தை ஏன்
உருவாக்குன்றேன்.

உலகம் இனிமையானதுதான்
உறவுகள் என்றுமே
தித்திப்பையானவைதான்
வெறும் நாவினால் மென்று
வழியைத் தவறவிடாமல்
நேராகச் செல்லும் ஓர்
நெஞ்சத்தின் துணையுண்டு.

பெண்களின் வாழ்வை-வீணே
பைத்தியக்காரத்தனமான
சிதனச்சுவாலையின் மாலை
சித்திரம்போல் கழுத்தில்
சூடி மகிழும் ஓர்
சுயம்வரத்தை நடாத்தும்
பொய்யான நிலை மாறவேண்டும்.

என்ன உலகம் இது
எப்படியான ஓர்
சிதறித் தெறித்த
தேங்காய்ச் சில்லைப்போலே
வலியின் வேகத்தைத்தன்
விவேகத்தினால் தாங்கிக்
கொண்டு

உண்மையை மூலதனமாய்
உணர்ச்சியை
வியாபாரமாய் நன்றியை
லாபமாய் கொண்ட
நம் உண்மை நண்பர்கள்
உலகில் நிச்சயம்
அன்பான,அடிப்படையுடன்
கூடிய
நேரான நெடுஞ்சாலை
என்றுமே திரும்பவும்
வளைவான பாதைகுள்
செல்லாது கண்டாரோ ?

பிச்சை கேட்கும் கூட்டமொன்று
எங்கே நானென்று பார்த்து
என்னைத்துரத்தின
அறிவாரா நானும்
தமிழெனும் உலகத்தில்
தள்ளாடும் ஓர்
ஓடமென்று

உலகம் பின்னிய இந்த
உதவாத வலையினுள்ளே
சிக்கிக் கொண்ட மகா
முட்டாள் இவன்
ஒன்றுமட்டும் உதிக்கிது இவன்
மூளையிலே
என்ன உலகமிது
எப்படி
காண்பார் உலகில்
சமத்துவத்தை
—————-
sathnel.sakthithasan@bt.com

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்