பணமில்லா அழகு பாழ்
Published August 9, 2003 • By
அனந்த்
அனந்த்

o
தளதள எனவுடல் தங்க நிறம்பெறத்
தகதக எனஎழில் தேங்கி உரம்பெறத்
திகழும் அவள்மதுக் கிண்ணம் – அவள்
செவியில் தினம்விழும் வண்ணம்
சளசள வெனஅவர் தெருவினில், திண்ணையில்
‘கொடுபண மெதுமிலா ஏழைஇப் பெண்கரம்
எவன்பற் றிடமனம் இசையும் ‘ – என
இயம்பும் கனல்தெறி வசையில்
மளமள வெனஅவள் உள்ளம் ஒடிந்திட
மடமட வெனஇள மேனி வடிந்திடச்
சிரித்து மகிழ்ந்திடும் உலகம் – இதைச்
செப்பின் வரும்பெரும் கலகம்!
o