புத்தி
Published March 2, 2003 • By
புகாரி
புகாரி, கனடா

தோழா !
உன்
உபதேச தேசத்தில்
கர்ணனும் நீயே
கையேந்துபவனும் நீயே…
இருந்து கொடுத்தாய்
இருந்தே தவிக்கிறாய்…
உன்
கண்களின் திறவுகோல்
உன்னிடமே இருந்தும்
பிறர்தாம்
திறக்க வேண்டும்…!
இது
உனக்கு மட்டுமல்ல
எல்லோருக்குமே
தலையெழுத்து!
*
புகாரி, கனடா
buhari2000@hotmail.com