இன்னும் ஓர் தீர்மானம்
கணேஷ் குட்டி

இதோ இன்னும் ஓர் தீர்மானம்
பிறக்க போகிறது இலங்கை தமிழருக்காக!!!!
போர் விமானங்களின்
இரைச்சல்களை மட்டும் கேட்டு வந்த
அவர்களின் செவிகள் இனிமேல்
பறவைகளின் சங்கீதங்களை கேட்கட்டும்!!!
குண்டு வீச்சுகளை மட்டுமே
பார்த்து சோர்ந்த அந்த விழிகள்
இனிமேலாவது இளைப்பாறட்டும்!!
ஆயுதங்களையே புத்தகங்களாய்
ஏந்திய குழந்தைகளின் கரங்களுக்கு
விடுதலை கிடைக்கட்டும்!!
இந்த திிர்மானத்திலாவது
அவர்களது வாழ்க்கையில்
வெளிச்சம் பிறக்கட்டும்!!!!!
**
ganeshkutty76@yahoo.com