‘வெடி மருந்து வீச்சமில்லாத தெருக்களில் நடக்கக் கனவு கண்டவன்’

This entry is part [part not set] of 57 in the series 20060317_Issue

என் கே மகாலிங்கம்


மார்ச் 12, ஸ்காபரோ சிவிக் சென்றாில் ஏற்கெனவே நடத்தவிருந்த காலம் சஞ்சிகை நிகழ்வு சி.புஸ்பராஜனுக்குாிய அஞ்சலி நிகழ்வாக ஆகியது சோகம். பாிஸில் மார்ச் 10 அவர் காலமானார். காலம் நிகழ்வில் நடக்கவிருந்த ராமய்யாவின் குடிசை என்ற ஆவணப் படமும், ஏகலைவன் நாட்டுக் கூத்தும் புஸ்பராஜனுக்குாிய அஞ்சலிக்குப் பின் நடக்க வேண்டி ஏற்பட்டது.

காலம் செல்வம் யாழ்ப்பாணத்திலும் பாிஸிலும் தான் சந்தித்த புஸ்பராஜனை நினைவு கூர்ந்தார். 1974 -1980 களில் புஸ்பராஜனின் இளைஞர் பேரவை, மாணவர் பேரவை காலப் பகுதியில் தமிழரசுக் கட்சித் தலைவர்களில் ஒருவரான அ.அமிர்தலிங்கம் புஸ்பராஜனைத் தோழமையுடன் நடத்தியதையும் அவர் இராணுவத்தினரால் சித்திரவதை செய்யப்பட்டு தூக்கியெறியப்பட்டிருந்தபோது ஈழவேந்தன் அவரை கழுவிச் சுத்தம் செய்ததையும் பிறவற்றையும் நினைவு கூர்ந்தார். பின்னர் பாிஸில் அவாின் செயற்பாடுகளையும் சபாலிங்கம் இறந்தபோது மற்றவர்கள் பயந்திருந்த வேளையில் துணிவாக முன்னின்று செயற்பட்டதையும், ‘தோற்றுத்தான் போவோமா ?’ என்ற தொகுப்பையும் சபாலிங்கம் நினைவாக கொண்டு வந்ததையும் கூறினார். அவருடைய ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற நூலில் எத்தனை சர்ச்சைக்குாிய விசயங்கள் இருந்தாலும் முக்கியமான நூல் என்றும் கூறினார். இறுதியில் ஜெயபாலன் விடை சொல்ல வருகின்றேன் என்று எழுதிய கவிதையின் சில பகுதிகளையும் வாசித்துக் காட்டினார்.

அதன் பின் பேசிய கற்சுறா, பாிஸில் புஸ்பராஜனை நன்றாகத் தொிந்தவர். அவருடன் கடைசியாக தொலைபேசியில் பேசியபோது, எனக்கு மரணம் பின் கதவால் வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அது முன் கதவால் வரப் போகின்றது’ என்று சொன்னதாகச் சொன்னபோது பலரும் நெகிழ்ந்து போயினர்.

இரண்டாம் கட்டத்தில்; முதலாவதாக நடந்தது, ராமய்யாவின் குடிசை ஆவணப் படம், கீழ்வெண்மணியில் நடந்த போராட்டத்தில் 44 குழந்தைகள், பெண்கள், ஆண்கள் உயிருடன் ஒரு குடிசையில் போட்டு எாித்ததையும் அதன் பின்னணியையும் அதற்கு இடதுசாாியினாின் போராட்ட முன்னெடுப்புக்களையும் தி.மு.க அரசின் அக்கறையின்மையையும், காவற் படையினர் பண்ணையார்களின் உறவு, அடாவடித்தனம் ஆகியவற்றையும் அக்காலாத்திருந்தவர்களின் நேரடிச் சாட்சியங்களை சந்தித்துப் பேட்டி கண்டமை மூலம், உண்மையானதொரு ஆவணமாக்கியுள்ளது இப்படம். அவ்வரலாறு பின்னர் பலவாறாக திாித்துக் கூறப்பட்ட கதை எமக்குத் தொிந்ததே. ஆவணப்படமாக, அதேவேளை உண்மையை பலாின் பேட்டிகளின் மூலமும் காட்டியுள்ளது இப்படத்தின் வெற்றி.

அடுத்து நடந்தது, ஏகலைவன் என்ற நாட்டுக் கூத்து. அது சிடியில் எடுக்கப்பட்டுள்ளது. புதிய தொழில் நுட்பம் பழைய நாட்டுக் கூத்தை விறுவிறுப்பாக அரை மணி நேரத்தில் அழகாகச் செய்து காட்டி வெற்றிபெறச் செய்திருக்கிறது. அதில் பங்குபற்றிய அத்தனை நடிகா;களுமே அழகாக, ஒழுங்காக, திறமையாக ஆடியும், பாடியும், அசைந்தும், அக்கூத்தை நடத்தி எங்களை வசியப்படுத்தினார்கள். அதைச் செவ்வனே பிடித்து, தொகுத்து அளித்த படப்பிடிப்பாளர்கள், எடிற்றர்கள் நன்றாகவே செய்து எங்களைப் பார்க்கத் தூண்டியுள்ளார்கள். அவர்களின் உடைகள், பின்னணி அமைப்புக்கள், உடல் மொழி அத்தனையும் நன்றாகவே இருந்தன. பல ஆண்டுகளின் பின் நல்லதொரு நாட்டுக் கூத்து நிகழ்ச்சியைப் பார்த்த அனுபவம் கிடைத்தது.

திரும்பவும் சி. புஸ்பராஜனை பற்றி. அவரும் அவர் சார்ந்தவர்களும், கடந்த இரண்டு மாதங்களாக, வைத்தியர்கள், சித்திரபுத்திரனாாின் கணக்கேட்டை தங்கள் கையில் எடுத்து விாித்து வைத்துக் கொண்டு காட்டிய பின்னர், அவரைக் காலன்; முன் கதவால் வந்து கயிற்றை வீசிக் கொண்டு செல்ல வருவான் என்று காத்திருந்தது உண்மை. அவரும் இராணுவத்திடம் சித்திரவதைப் பட்டவர். காலன் சித்திரவதை செய்ய மாட்டான் என்ற நம்பிக்கையுடன் அல்;லது அதைவிட பயங்கரம் நடக்காது என்ற துணிவில் காத்திருந்தவர் தான். ஆனால், அவாின் குடும்பத்தாரும் நண்பர்களும் வாசகா;களும் காலனின் வருகையை பாிஸ் வந்து இரண்டாம் நாளே எதிர்பார்க்கவில்லை. கவிஞர் ஜெயபாலனும் ‘காத்திரு நண்பா, கட்டாயம் விடை சொல்ல வருவேன்’ என்று கவிதையில் சொன்னார். அவரும் போய் விடை கொடுக்கு முன்பே ஈழப் போராட்டத்தை ஆயுத போராட்டமாக திசை திருப்பிய முன்னோடிகளுள் ஒருவரான புஸ்பராஜன் போய் விட்டார் என்பது தான் சோகம்.

அவர் எழுதிய ‘ஈழப் போராட்டத்தின் எனது சாட்சியம்’ என்ற ஈழப் போராட்ட வரலாறு பற்றிய நீண்ட நூல் தன்னளவில், அவருடைய வரலாற்றுக் கோணத்தில் ஒரு முழுமையான, முக்கியமான ஆவணமே. ஈழப் போராட்ட வரலாற்றை ஒழுங்குபடுத்தி சமகால ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றை எழுதியது அவாின் பங்களிப்பு. அவருடைய, அவர் சார்ந்தவர்களின் பங்களிப்பையும் தொட்டுக் காட்டியதில் அந்நூல், அவரைப் போலவே ஒரு முன்னோடி. அவர் எழுத இருந்த ஈழப் போராட்டத்தில் பெண்களின் பங்கும், சில தமிழ்த் தலைவர்கள் ஈழப் போராட்டத்திற்கு எதிரான ஆற்றிய பங்கும் ஈழப் போராட்டத்தின் எனது சாட்சியத்;தின் பதிவிற்கு துணைப்பங்களிப்பாக இருந்திருக்குமே அல்லாது அவரது முன்னைய நூல் ஏற்படுத்திய ஆவலையும், வாசிப்பு விறுவிறுப்பையும், பதிவுகளின் ஓரளவான முழுமையையும் ஏற்படுத்தி இருக்காது என்பதே என் கணிப்பு. இருப்பினும். அவற்றை அவர் எழுதிய அளவாவது வெளிவரும் என்று நான் எதிர்பார்க்கிறேன். அது பயனளிக்கும்.

இந்நூல்களைத் தவிர, கடைசியாக –அதுதான் கடைசியாக எழுதிய கதை என்பது என் அனுமானம்- உயிர் நிழலில் எழுதிய ‘தஸ்லிமாவின் காதலன்’ கதை நன்றாகவே எழுதப்பட்டுள்ளது. அவர் ஈழப் போராட்ட போராளியாக இயங்கிய காலத்திலேயே அவருள் ஓர் எழுத்தாளள் ஒளிந்திருந்திருக்கிறான். அவர் பாிஸ் வந்த பிறகு. இலக்கியம், எழுத்து, அரசியல் செயற்பாடு என்று இயங்கியிருக்கிறார். அது இலக்கியத்திற்கு ஒரு நல் வரவு.

அனுபவ அடிப்படையில் எழுதப்படும் எந்த எழுத்துமே சத்தியமான, அழியாத எழுத்தாகி விடுகிறது. அதற்கென்று ஒரு மொழியும், வடிவமும், வரலாறும், ஆயுளும், தாிசனமும் கிடைத்து விடுகிறது. அது அவருக்குக் கிடைத்த கொடை. அதற்காக அவர் செய்த தியாகம் நினைத்துப் பார்த்;து வியக்கக் கூடியதொன்றே. மரணத்துடன் நோ;நின்று முகம் கொடுத்து போராடியவர்களின் வாழ்வு அற்புதமான காவியம். அவர்களின் எழுத்துக்கள் வரலாற்றில் நிலைத்து நிற்பவை. அதனால் அவர்களின் மரணமும் அழிவற்றது.

என்,கே.மகாலிங்கம்.

—-

chelian@rogers.com (மூலம் பெறப்பட்டது)

Series Navigation

என்.கே. மகாலிங்கம்

என்.கே. மகாலிங்கம்