காசாம்பு

This entry is part [part not set] of 35 in the series 20060127_Issue

எஸ்ஸார்சி


இப்படி எல்லாம் நடக்குமா அவன் கனவில் கூட நினைத்துப்பார்க்கவில்லை. தருமங்குடியில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்த குடும்பம் தானே அவனுடையது

ஆண்டுகள் எத்தனையோ முடிந்து போய் இப்போது அதுவும் இப்படியாய் இந்த சம்பா ?ணைக்கு இறக்கை சிருட்டித்து கொண்டுவிடும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.

தருமங்குடி கிராமத்து தெற்கு நஞ்சை வெளியில் அவன் மோட்டார் கொட்டகையில் கயிற்றுக் கட்டில் மீது படுத்துக்கொண்டிருந்தான். இந்த பம்ப் செட்டில் இருந்துதான் தண்ணீர் ஒரு பத்து ஏக்கர் நஞ்சைக்கு பாய்ந்து கொண்டிருந்தது. எல்லாம் அவன் பாட்டன் காலத்து சம்பாத்யம். கப்பலேறி வங்கக்கடல் கடந்து சிங்கப்பூர் சென்ற அவனுடைய பாட்டன் சலூன் கடை வைத்து பணமாய் மூட்டைக்கட்டி வந்ததாக தருமங்குடிக்கிழங்கள் பேசிக்கொண்ட பழைய சமாச்சாரம்.

சலூன் கடை வைக்கவில்லை. ஊதாக்கலரில் வட்ட வட்டமாய் துணி வெளுக்கும் சவுக்காரம் தயாரித்தார் என்று சொல்லிப்பார்த்தால் யாரும் கேட்பார்தான் இல்லை. அவன் பாட்டி சொல்லிவிட்டுப்போன கதைகளில் இதுவும் இதுமாதிரியும் இன்னும் எத்தனையோ உண்டு.

மோட்டார் ?ிவ்வென்று ஒடிக்கொண்டிருந்தது. மூன்று பல்புகள் எரிந்து மின்சாரம் தான் சரியாய் இருப்பதை அறிவித்தது. அவன்

புரண்டு புரண்டு படுத்தான். உலகத்து மக்களை பன்னிரெண்டு தினுசுகளாக்கி அவரவர்க்கு நல்லதும் கெட்டதும் சொல்லி பத்து நாளைக்கு ஒரு தரம் சீட் கிழித்து சீட் கிழித்து கிழித்து வீங்கலாகி பின் காலி யாகும் தினசரிக்காலண்டர்சுவரில்தொங்கிக்கொண்டிருந்தது.

மோட்டார் கொட்டகையின் வெளிப்புறமாக இருந்த நீர் விழும் தொட்டியில்பெண்கள்இருவர்குளித்துக்கொண்டிருந்தார்கள்.

மோட்டார் ஒடிக்கொண்டிருக்கும்போது அவர்கள் பேசுவது எல்லாம் இன்னது என்று அறியவே முடியாதபடிக்கே இருக்கும். ஆனால் திடாரென்று மோட்டார் நிற்கும் என்று யாருக்குத்தெரியும். மோட்டார் நின்றது.

?நெசமாதான் சொல்லுறயா ?. அவன் காதுகளை கூர்மையக்கிகொண்டான். இது ஏது விபரீதம். தொட்டியில் குளிக்கும் பெண்கள் யேதோ ரகசியம் பேசுகிறார்கள் போல என கவனிக்க ஆரம்பித்தான்.

?ஆமாந்தெ இந்த கரண்டு கொட்டா காரன பாத்தா தெரியல. செத்துப்போன நம்ப காசாம்பு ஒரு ஆம்பள புள்ளய வச்சுட்டுப்போனாளே அதே சாடை. அதே சுருட்டைமுடி எடம் வுட்ட பல்லு அந்த பயல பாரேன். ஆரு மாதிரி இருக்கு சொல்லு. அந்த பலான வெவரம் எல்லாம் ஆருக்குத்தெரி யப்போவுது காசாம்புக்கு மட்டுந்தான் அறிவா. அவ போய் சேந்துட்டா. அவ புருசன் ஒரு ரெண்டாலங்கெட்டது. அதுவுமே என்னாத்தக்கண்டது. மாட்டு மணியம்தான் பொழுதேனிக்கும். வைக்கோலு சாணம்தான்&nb sp; யாரு கிட்ட வந்தாலும் அப்பிடி நாறும்.

? காசாம்பு மொவனப்பாத்தா எனக்கும் கூடஅப்பிடிதான தோணுது புள்ள ?

?தலமுடி, கண்ணு, மூக்கு எல்லாம் கூடம் அப்பிடியே

ஏன் பயல் நடக்கறது பேசுனா கூடம் பாரேன் இந்த கரண்டுகொட்டாகாரனாட்டமேதான் ?

?ஆமாம்தெ ஆமாம்தெ ?

அவனுக்கு பட பட என்று வந்தது. சுழலும் பூஉலகம் ஒரு முறை குலுங்கி நிறுத்தியது. இந்த மோட்டார் ஏன் நின்றது. மின்தடை ஏன் வந்தது. படுத்திருந்த அவன் தூங்கி இருந்தால் காதில் விழாதிருந்து கூட தப்பித்து இருக்கலாமோ என்னவோ குடைச்சல் மனதிற்குள்ளாய் வி ?மாய்த் துளைத்து பரவிக்கொண்டிருந்தது.

மீண்டும் கட்டிலில் படுத்து கொண்டான். மனத்திரையில் ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்து முடிந்த கதை மீண்டும் பளிச்சென்று வெளிச்சம் போட்டுக்கொண்டது.

இந்த கரண்டு கொட்டக்காரனாகிய அவனுக்கு அப்போது இருபது வயதுக்குள் இருக்கும். தான் வைத்திருந்த ஒட்டை சைக்கிள் பின் சக்கர டயரில் காற்று குறைந்து காணப்படவே சைக்கிள் பம்பு சற்று கடனாய் வாங்கி வரலாம் ,காற்று கொஞ்சம் அடித்துவிடலாம் என்றுதான் அவன்அந்த காசாம்பு வீட்டிற்கு சென்றான். ஊரில் சைக்கிள் பம்பு உள்ள வீடு அது ஒன்றுதான். சைக்கிள் விடுவது ம ட்டும் எப்படியோ கற்றுக்கொன்டுவிட்டான் என்பது பெரிய விடயந்தான். தானிருக்கும் வீட்டிற்கும் ஒரு தெரு தள்ளி காசாம்பு வீடு. சைக்கிளை எப்போதும் உருட்டிக்கொண்டு சென்று தெருவில்நின்று செத்த பம்பு வேணும் ? என்பான். காசா ம்பு புருசனை காசாம்பு புருசன் என்று மட்டுமே ஊர் அழைத்துக்கொண்டிருந்தது. அவன் பெயர்தான் யாருக்குத்தெரிந்தது அவன் பம்பு எடுத்துத்தருவான். வேலை முடிந்தால் வாங்கி திரும்ப வைத்துவிடுவான்.

அன்றும் அதே மாதிரிதான் பம்பு பம்பு வேணும் காசாம்பு வீட்டு வாயிலில் நின்று இரண்டு முறை கத்தினான். கதவு தாளிடப் பட்டிருந்தது ஒற்றைக்கதவு பட் என்று திறந்துகொண்டது.

?ஆரு ஊட்ல கொஞ்சம் பம்பு வேணும் காசாம்பு புருசன் இருக்காபிலயா ?

அமைதி. ஆனால் வீட்டினுள் ஆள் இருக்கும் அரவம் மாத்திரம் கேட்டுக்கொண்டிருந்தது.

பம்பு வேணும் பம்பு

?பம்பு ஒசக்க வச்சிருக்கு. எட்டுல செத்த வுள்ளார வருலாம்ல்ல ?

கையில் வெற்றிலையை எடுத்தவன் துளி சுண்ணாம்புக்கு வாய் திறந்து நெளிவதுபோல் அவன் உள் நுழைந்தான்.

?ஆரு கரண்டு கொட்டாகாரரு. ? சொன்ன காசாம்பு,

துப்புகெட்டது அலுப்ப சைக்கிளு பம்ப எடுத்து பரணைல வச்சிட்டு பூட்ட்டுது பாரு ? சொல்லிக்கொண்டே தெருக்கதவை பட்டென்று உள் தாளிட்டாள்.

?ஏன் ஏன் காசாம்பு கதவெல்லாம் எதுக்கு மூடுற ? என்று மிரண்டுபோய்ஆரம்பித்தான் அவ்வளவு தான் அவன் வாயை தன் கைகளால் அழுத்திப் பொத்தி ?பேசாத இருக்கணும் தெரிதா ?. காசாம்புவின் வீடு இருளாய் இருந்தது. அந்த இருவர் மட்டுமே. கடவுளுக்கு அவர்களிருப்பு தெரிந்தும் இருக்கலாம் அந்தகாரம் பதுங்கிக்கிடந்தது. சிருங்கார உணர்வை உச்சிக்கொம்புக்கு உந்திச்செலுத்தி தித்திக்கும் தீயாகி ப்போயின அந்தக்கணங்கள். .நொடியில் கசிந்த மனங்கள் உரசின. பற்றிக்கொண்டது அது. அவனுக்கு வானம் வசப்பட்டது. அவளுக்கு எட்டாக் கனவு மெய்ப்பட்டது.

உணர்வுகளின் கனி சுவைக்கப்பட்ட அந்திமத்தில் அவளின் கண்கள் நீர் அருவியாகிக்கொட்ட

?சாமி மன்னிச்சுடு என் தப்பு இது உன் தப்பு இல்ல ?

அவன் கைகளிரெண்டையும் பற்றிக்கெஞ்சினாள்.

?ஏன் இப்படி செஞ்சே ? பெரிய மனிதனாகிக்கேட்கிறான்

பேயறைந்தவனாய்க் கலங்கி நிற்கிறான்.

?செத்துட்டாகூடம் இனிமே வாழ்ந்துபூடுவேன் ? என்றாள். அவள் ஏன் அப்படிச்செய்தாள் என்பதற்கெல்லாம் அவனுக்கு விடை தெரிந்துகொள்ள அனுபவமோ பக்குவமோ இல்லை. அதிர்ந்துபோய் நிnறுகொன்டிருந்தான்.

அவள் ஆடை சரிசெய்துகொன்டாள். சீப்பெடுத்து அவன் தலையை சீர் படுத்தினாள். அவன் கன்னங்களைத்தடவிய கை விரல்கள்கொண்டு தன் கன்னங்களோடு தடவிப்பார்த்தாள்.

சைக்கிள் பம்பு தரையில் மல்லாந்து ஒரு மூலையில் கிடந்தது.

அதனையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தான். பரணையில் இருப்பதாய் பொய் சொன்னாளே என்று மனம் குசுகுசுத்தது.

போதும் உன் நியாயங்கள் வழங்கும் அகங்காரம் நிறுத்து என்றது அறிவு.

?டக் டக்டக் ? வாயில் கதவு தட்டும் சப்தம் கேட்டது.

அவன் வந்திருக்கலாம். இல்லை வேறு யாரேனும் அழைக்கலாம்.

சுதாரித்துக்கொண்ட காசாம்பு அவன் கையைப்பிடித்து அழைத்துச்சட்டென்று வீட்டின் தோட்டத்து க்கதவு அருகேசென்று, ? நீ போய் விடு ? என்றாள்.

?இங்கு எதுவும் நடக்கவில்லை ? அவன் தலை மீது அழுத்திக் கை வைத்தாள்.

சத்தம் ஏதும் இல்லாமல் தாழ்ப்பாள் கொக்கியைத்திறந்து உலகம் காட்டி ? போய்விடு நீ ? என்றாள். கதுவு சத்தம் ஏதுமே இல்லாமல்

அடைத்துக்கொண்டது. வெளியில் வந்தவன் கீழே என்ன ஏது என்று பார்க்கவும் இல்லை. இரண்டு ஆள் உயரம் இருந்த வேலிக்கருவை தோட்டத்து வேலியை அலாக்காக தான்டினான். அத்தோடு சரி.

மனம் என்றோ நடந்து போனவைகளை ஒடவிட்டு அவ்வளவுதான் போ என்றது. காசாம்பு அவனுக்கு ஒரு பிரதியை விட்டுச்சென்றிருக்கிறாள் அடிமனம் அறிவைக்குழைத்து விடைசொல்லத் தயாராகிக்கொண்டிருந்தது.

அவன் கட்டிலை விட்டு எழுந்து நின்றான். மின்சாரம் வந்து விட்டதை மூன்று பல்புகள் ஒளிர்ந்து நான் தயார் நீதயாரா என் றது.

மோட்டர் கொட்டகையின் அறைக்கதவு திறந்துகொண்டு வெளியில் வந்தான். தண்ணீர் தொட்டி பரிதாபமாக களை இழந்து காணப்பட்டது. மனம் அவனை நிற்க விட்டால் தானே, காசாம்பு வீடு நோக்கி வேகு வேகு என நடந்தான். மனத்துக்குள்ளாக இடி இடித்து மின்னுவதை முதல் முறையாக அனுபவித்தான். காசாம்பு வீட்டு முன்பாக நின்று.

?ஆரு வூட்டுல ? என்றான்

வெளியில் வந்தவன் காசாம்பு மகன்தான்.

தானே இன்னொரு உரு எடுத்து தனக்கு முன்பாக நிற்பதைக்கண்டான்.

அப்பா இல்லை,வெளியெ போயிருக்கு

என்னா சொல்லுணும்

அவரு கிட்டதான் சொல்லுணும்னு பாத்தேன்

பொசாய அப்பன் வரும் வந்தா சொல்லுறேன்

?சரி ?

அவன் தன் தெரு நோக்கி நடந்தான்.

இன்று தான் நான் அவனைச்சந்தித்தேன்.

ஏன் ஊருல இல்ல நீ ?

நா ஊர விட்டு வந்து வெகு காலம் ஆயி போச்சி தம்பி அப்புறம் என்னா செய்ய. பாப்பாவுக்கு நல்ல பள்ளிக்கூடம்னு பாத்தா தருமங்குடியில என்னா செய்யுவ சொல்லு. அதான் நெலபொலம் ஆடு மாடு கரண்ட்டுகொட்டா சாடா

எல்லாத்தயும் தொலைச்சிப்புட்டு இந்த ஊரோட வந்து செட்டிலாயிபுட்டேன். அரிசி வெயாபாரம் பாக்குறன்.

ஒரு பொண்னுதானா

?ஆமாம். பெரிய பள்ளிக்கூடம் படிக்குது. பேரு காசாம்பு ? புன்னகை செய்தான்.

என்னா பேரு ரெம்ப பழசா இருக்குதுபோல

ஆமாம். பேரு காஞ்சனா தான் நானு காசாம்புன்னு கூப்புடுவேன்.

சாவுகாசமாப்பேசுவும் பெறகு ? என்றான்.

நேரம் கிடைத்தால் அவனைச்சென்று பார்க்கலாம். நமக்கு எங்கே நேரம் கிடக்கிறது. நம் நாக்கை பிடுங்கிக்கொள்ளவே தான் சரியாக இருக்கிறது

—-

essarci@yahoo.com

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி