This entry is in the series 20090904_Issue

தினேசுவரி, மலேசியா


இன்னும்
முடிவாகவில்லை
புதைப்பதா..?
எறிப்பதா..?
சர்ச்சையில்
விழித்துக் கொண்டது
பிணம்..

ஓய்ந்து போனது….
பல வருடங்களாய்
ஏமாற்றி
கத்தி
கதறி
கடத்தி
கற்பழித்து
காதலித்து
கல்யாணம் செய்து
துரோகித்து
கொலை செய்து
கொண்டாடி
சுபமாய்
முடிவடைந்தது
சின்னத்திரை……

மறதி……
எச்1 என்1-கு
பயந்து
முகக்கவசத்தோடு
மோட்டார் சைக்கிளில்
சிறுமி….
தலைக்கவசம்
மறந்து…

– தினேசுவரி, மலேசியா

salthana82@yahoo.com.my

Series Navigation