This entry is in the series 20090820_Issue

பா.சத்தியமோகன்


என் நாடு வேறொன்றைச் செய்கிறது

விவசாயநாடு என்று சொல்லுகிறது

விவசாயமோ பின்னுக்குச் செல்கிறது

நெல்மணிகள் காணுமிடத்தில்

கார்களை நடவு செய்யும் போக்கு

தரப்போகும் பலன் என்ன?

கார்காலம் நோக்கிப்பயிரிட்ட விவசாயிக்கு

இது இன்னொரு கார்காலம் ஏமாற்றுவதா?

நெல்மணிகள் தரும் அரிசியில்

பசியாறி நீர் பருகி

காரில் ஏறிச் செல்ல இயலும்

ஆனால்-

இரும்பு பாகங்களை உண்டு விட்டு

ரசாயன நீர் குடித்து

நெல் பயிர் நடவு செய்ய இயலுமா?

ஏங்கித் தொழுது எங்கே என் கார்காலம் என்கிற

விவசாயி எழுப்பிய கேள்விக்கு

அளிக்க வேண்டிய பதில்

கார்சாவியில் இல்லை

இந்தியாவின் நுரையீரல் அவர்கள்.

*****

Series Navigation