முனைவர், புலவர் த.கோடப்பிள்ளை

This entry is part [part not set] of 38 in the series 20090820_Issue

முனைவர் துரை.மணிகண்டன்.


முத்தமிழ் மூதறிஞராகிய கோடப்பிள்ளை, திருச்சிராப்பள்ளி மாவட்டம்
சாலக்காடு என்னும் சிற்றூரில் தோன்றியவராவர். தந்தை தம்மனான். தாய்
வள்ளியம்மை. தோன்றிய ஆண்டு 1934.

திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ் பயின்றவர். திருச்சிராப்பள்ளி,
நெய்வேலி,கல்லக்குடித் தால்மியாபுறம் அகிய இடங்களில் உயர் நிலை,
மேனிலைப்பள்ளிகளில் முப்பதைந்தாண்டுகள் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி
வந்தவர்.

கல்லூரியில் படித்தக் காலத்திலேயே நாடகம் எழுதும் போட்டியில் பரிசு பெற்ற
இவர் இளமையிலிருந்தே நாடகங்கள் எழுதியுள்ளார்.

வானொலியில் பல நாடகங்களை ஒலிப்பரப்பியுள்ளார். மேடை நாடகங்கள் சிறிதும்
பெரிதுமென முப்பத்தொரு நாடகஙகளை வெளியிட்டுள்ளார். கதை, கட்டுரை, கவிதை,
ஆய்வுக்கட்டுரை பலவும் படைத்துள்ளார். மேடை சொற்பழிவாற்றலும் மிக்கவர்.
ஆராய்ச்சி வல்லுனர். தமிழ் எழுத்து சீர்த்திருத்தம் பற்றிக் கோலாலம்பூர்
ஆறாவது உலகத் தமிழாராச்சி மானாட்டில் கட்டுரைப் படித்து, அதை நூலாகவும்
வெளியிட்டவர். உலகத்தமிழர் கருத்தருங்குகளில் ஆராய்ச்சிக் கட்டுரகளையும்
படித்துள்ளார்.

மலேசிய, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் இலக்கியப்
பணியாற்றியுள்ளார்.அங்குள்ள வானொலி நிலையங்களில் சொற்பொழிவாற்றியுள்ளார்.

இவரது படைப்புகளான அன்புத்தங்கை, அம்மை ஆண்டாள், தமிழ் எழுத்தமைப்பு,
வான்வழி வள்ளுவம், மருத நாயகம் என்னும் கம்மந்தன் பூசுபுகான், வான்வழி
விருந்து, வான்வழி நாடகங்கள், நாடக நருமலர்கள், சிந்தனைச் செல்வர்
சாக்கரட்டீஸ், எளிமைத் தமிழ், தமிழ்ப்பூக்கள், பூவே பூவே, மனக்குரங்கு,
கோடப்பிள்ளை குறள் ஆவேரா உரை/ கதிரேசனார் உரை நடைச்சிறப்பு ஆகிய நூலகளைப்
படைத்துள்ளார்.

பேரும் புகழ்பெற்ற எழுத்தாளர் அன்மையில் திருச்சியில் காலமானர். இவரது
படப்புகள் படைப்புலகில் நிலைத்த இடத்தைப் பிடித்திருக்கும்.

அன்புடன்
முனைவர் துரை.மணிகண்டன்.

Series Navigation

முனைவர் துரை. மணிகண்டன்

முனைவர் துரை. மணிகண்டன்