This entry is in the series 20040902_Issue

தாஜ்


பாசிக்கிணற்றுத்

தவளைகளின்

பாதாளக் குரலை

ஒன்றுமில்லை என்றாக்கும்

குட்டைத் தவளைகளின்

சகதி சப்தம்

கும்பிக் குளத்துத்

தவளைகள்

கெக்கலிக்கத் துவங்க

ஏனைய சப்தமும்

விண்ணை முட்டும்

ஊர் அடங்கும்

நிசப்த வெளியில்

சமதளவாசிகளை நித்தம்

காதடைக்க வைப்பதே

இந்தத் தவளைகளின்

பிழைப்பாய் போனது

தவளைகளை முன்வைத்து…

மிகுந்த வணக்கத்துடன்,

தாஜ்

tajwhite@rediffmail.com

Series Navigation