விடியும்! (நாவல் – 1)

This entry is part [part not set] of 37 in the series 20030619_Issue

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்


1

மாரிகாலத்து மங்கிய பகல் போலவே இருந்தது இரவு. கோப்பிக்கு தடிப்பாக பால் கலந்த மாதிரி வெளுத்துக் கிடந்தது நிலம். பெளர்ணமி இரவில் வானமும் நிலமும் வேலையெல்லாம் முடித்த நிம்மதியில் ஓய்வெடுக்கச் சரிந்தது போல அப்படியொரு அடங்கிய அமைதி. அதற்கு மெலிதாக சுருதி சேர்க்க வந்தது போல் விட்டு விட்டுக் கேட்ட குருவிகளின் க்விக் க்விக் இராகம்.

விறாந்தையிலிருந்து கண்ணுக்குள் அகப்பட்ட வானத்தைப் பார்த்தான் செல்வநாயகம். மேனியில் மேகஉடுப்புகள் கொஞ்சமுமில்லாத வெட்கங்கெட்ட நிர்வாண வானம். நட்சத்திரக் கன்னிகள் கூச்சத்தில் கண்களை வெட்டி வெட்டி முழித்தார்கள். சந்திரனுக்கு இன்று தலைகால் தெரியாத நடப்பு. கடித்த லட்டு மாதிரி அரைகுறையாக இல்லாமல் முழுசாக வலம் வருவதென்றால் இருக்காதா பின்னே. நெரிசல் ஓய்ந்து போயிருந்த விசாலமான வீதியில் தனியாக வீறாப்புடன் வலம் வந்த பாதசாரியின் சிலிர்த்த ப+ரிப்பு!

சவுக்கு மரக் கிளையில் கீக் கீக் சத்தம் வந்த திசையில் கவனம் திரும்ப, ஒன்றையொன்று ஓடிப்பிடித்துத் துரத்தும் அணில்குஞ்சுகளின் சுதந்திர விளையாட்டைப் பார்த்தான்டி. மட்டான அந்த வெளpச்சத்தில் நீளமான பொன்னிற வால்களின் அசைவுகள் மட்டுமே தெரிந்தது. அணில்களின் ஓடிப்பிடிக்கும் விளையாட்டு ஊரில் அடிக்கடி கண்டு களித்த காட்சிதான். அப்போதெல்லாம் வேலை மினக்கெட்டு நின்று புகுந்து பார்த்து ரசிக்கத் தோன்றியதில்லை. இதுவரை வாழ்ந்த ஜீவிதம் இந்தக் குட்டி சிருடிடிகளின் ஓட்டங்களை அதனுள்ளே புதையலாய் மண்டியிருக்கும் அற்புதங்களை கவனியாமலே கழிந்திருக்கிறது.

பனியில் குளித்த மஞ்சள் ப+க்களைச் சுமந்து கொண்டு நிலத்தில் படர்கிற ப+சனிப் பற்றை மாதிரி மனம் முழுக்க ஒரு இனம் புரியாத இன்பப் ப+ரிப்பு மசமசவென ஊர்ந்து செல்கின்ற கிளுகிளுப்பு. பனி படர்ந்த தூரத்து பச்சை மலைக்காட்டிலிருந்து சுகந்தத்தை எப்போதும் அள்ளி வருகிற குளிர் காற்று இப்போது மட்டும் மிகவும் இதமாக உடலை வருடி உள்ளத்தை ஈர்ப்பதாக அவனுக்குப் பட்டது.

கண் வெட்டாமல் பார்க்கப் பார்க்க தம்பாட்டில் ஓடித் திரியும் அந்த குட்டி ஜீவன்களின் சுந்தரமும் சுதந்திரமும் நீருக்கடியில் இடைஞ்சல் ஏதுமின்றி வழுக்கியபடி இதமாக தன்னை இழுத்துச் செல்வது போல் உணர்ந்தான் செல்வம். நாளை என்ற கவலையற்ற அவைகளின் சீவியம் முதன்முறையாக அவனது மனதைத் தொட்டுத் தழுவிற்று. அடுத்த வேளை உணவுக்கு வகை என்ன என்ற எண்ணம் அவைகளை இழுத்துப் பிடித்து இருத்தி யோசிக்க வைப்பதில்லை. மனிதனுக்கேயுரிய மனமாயைகள் அவைகளிடமில்லை. அந்த உலகமே வேறு.

இளம் பராயத்தில் அவனும் இப்படித்தானே இருந்தான். வெளடிளைச்சட்டை, நீல அரைக் கால்சட்டை அம்மா போட்டுவிட அவளின் தெண்டிமைக்காக புத்தகச்டிசுமையுடன் விருப்பமின்றி பள்ளிக்கூடம் போய் வந்த நாட்கள் அவை! வெறுங்காலோடு ஒழுங்கை முழுக்க புழுதியடித்த காலம் கவலையற்றுத் திரிந்த அந்த வரலாறு சொல்லும். பள்ளிக்கூடம் விடுவதற்கு எப்போது மணியடிக்கும், எப்போது விளையாடக் கிடைக்கும் என ஏங்கிக் களித்த காலங்கள்! புத்தகப்பையை மேசையில் விட்டெறிந்துவிட்டு நொறுக்குத்தீன் தேடி அம்மாவை நெருக்கிய இளமைப் பொழுதுகள்!

“அம்மா சாப்பிட என்னனை இருக்கு ?”

“ராசவள்ளிக்கிழங்கு கிண்டி வைச்சிருக்கிறன் சாமியறை மாடத்தில. எல்லாத்தையும் முடிக்காமல் தங்கச்சிக்கும் வை.”

கையில் அலுவலாக இருக்கும், அம்மா அடுப்படியிலிருந்தே கத்துவாள். சுவாமியறை படுக்கையறை, காசுகலஞ்சு வைக்கும் அறை, உடுப்பு மாற்றும் அறை என எல்லாத்துக்குமே அந்த ஒரு அறைதானென்றாலும் அம்மா அதனை சுவாமியறை என்று மரியாதை கொடுத்தே அழைப்பாள். வெளடிளி செவ்வாய்களில் மட்டுமே சுவாமிக்குக் காட்டுகிற சாம்பிராணியின் வாசம், அறையை எப்போது திறந்தாலும் தேயாமல் அப்படியே தங்கியிருப்பது போலிருக்கும். வாசம் தப்பியோடி விடாமலிருக்க அம்மா ஜன்னலைப் ப+ட்டியே வைத்திருப்பதுதான் அதன் இரகசியம் என எண்ணுவான் செல்வம்.

குண்டாளக் கோப்பையுள்ளே பட்டிடுப் போல மிருதுவான நாவல் நிற ஆடை பிடித்து கட்டி பத்தியிருக்கும் இராசவள்ளிக் கிழங்கில் அவனுக்கு எப்போதுமே ஒருவித கெலி. அம்மாவுக்கு பிள்ளையின் பின்னேரப் பசி தெரியும். மாலைத்தீன் தேடி வைக்காமல் விட்டாலோ அவனோடு சமாளிக்க முடியாதென்பதும் புரியும். அவனிடம் அம்மா பயப்பிடுகிற சில விசயங்களில் இதுதான் விசேடமானது.

உடம்பு அலுப்புக்கு கொஞ்சம் சரிந்து ஓய்வெடுக்க வேண்டிய நேரத்தில் அந்தப் பயத்தினாலேயே ஓவர்டைம் செய்வாள். கொஞ்சம் குறைந்தாலும் இவ்வளவுதானா என்று மல்லுக்கு நிற்பான்டி. தன் பங்கை வழித்துத் துடைத்து முடித்த பின்னர் தங்கச்சியின் பங்கிலும் கிள்ளிப் பாராமல் அவனுக்குப் பத்தியப்படாது.

தங்கச்சி செல்வராணியும் இலேசுப்பட்டவளில்லை. என்ரேலயும் எடுத்திற்றானம்மா என்று அயல் அட்டைக்குக் கேட்கும் வண்ணம் ஒலிபரப்புவாள். சரி சரி கத்தாதை, அண்ணந்தானே, நாளைக்கு உனக்கு உளுத்தங்களி கிண்டித் தாறன் என்கிற அம்மாவின் சமாதானமெல்லாம் அவளிடம் இலேசில் – முதுகில் இரண்டு வைக்கும் வரை – எடுபடுவதில்லை. தங்கச்சி நாலு வீட்டிற்குக் கேட்க ஓலமிடும் நேரங்களில் அவளது இரட்டைப் பின்னலில் ஒன்றை இழுத்துப் பிடித்து தோள்ச் சதையில் நுள்ளத் துடிப்பான் செல்வம். அம்மா தென்படாத போது அதைச் செய்தும் விடுவான். அதனாலேயே தன் ரெளத்திரத்தை அடக்கி வாசிக்கக் கற்றுக் கொண்டாள் தங்கச்சி.

அவளைச் சமாதானப்படுத்த அவளுக்குப் பிடித்தமான உளுத்தங்களி, பிறகு அவனைத் திருப்திப்படுத்த பாலப்பம் என மாலைத்தீன்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும். அம்மா அலுக்க மாட்டாள். என்னதான் இல்லாவிட்டாலும் பிள்ளைகளுக்கு பின்னேரத்தீன் தேடாமல் விடமாட்டாள். அடுப்படியே கதியாக ஊதாங்குழலும் கையுமாக அடுப்புச் சூட்டில் வெந்து கொண்டிருப்பாள்.

பசி தீர்ந்த கையோடு பள்ளிக்குப் போட்ட சட்டையைக் கழட்டிக் கொடியில் விசுக்கிவிட்டு ஒழுங்கைக்குள் ஓடினால் குண்டடியும் கிட்டிப்புல்லும் ஜாடிப் பாய்ச்சலும் தூள் பறக்கும். தன்னோடொத்த பொடியன்களோடு இணைந்து கொண்டால் நேரம் மறந்து போகும். இருட்டுப்படமுதல் ஏழெட்டுத் தரம் தொண்டை ஈரம் வற்றிப் போக அம்மா குரல் கொடுத்திருப்பாள்.

“தம்பி விளக்கு வைக்கிற நேரமாச்சு, அப்பா வந்தா இக்கணம் அடி விழப் போகுது.”

அப்பாவைச் சாட்டி ஜாக்கிரதை காட்டினாலும் அடிக்கிறதென்னவோ அம்மாதான். தவணை விடுமுறை காலத்தில் அம்மா மொத்தமாக பொறுமை இழந்து போவாள். சேலைத்தலைப்பை இடுப்பில் சொருகிக் கொண்டு கறிமுருங்கை மரத்தில் எட்டி தடி முறித்து அவனைத் துரத்துவாள். அவனைப் பிடிப்பது அத்தனை சுலபமல்ல. ஏலாத போது, நோகாமல் அடிக்கவும் செய்வாள். அம்மாவுக்கு அப்பா நேர் எதிர். கூரையில் செருகியிருக்கும் கேட்டிக்கம்பை எடுத்து பயம் காட்டுவாரே தவிர அடிக்க மாட்டார். வேலையால் வந்து முற்றத்தில் நின்று ஒரு முறை கூப்பிட்டாலே போதும், உடனே கைகால் அலம்ப கிணற்றடிக்கு ஓடிப் போவான். அடிக்காவிட்டாலும் அப்பாவிடம் ஒரு பயம், மரியாதை.

அம்மாவிடம்!

அவன் கண்கள் திடாரென ஊற்றெடுத்துப் பொங்கின. அந்த அன்புச் சிறைக்குள்தான் எத்தனை சுதந்திரம். அம்மாதானே என்ற இளக்காரத்தில் உண்டான அபரிமித உரிமை. வாய்க்கு ருசியாய் அலுக்காமல் செய்து கொடுத்தாலும் காணாது என்ற புறணி. புழுதியடித்த உடலை ஆடாமல் நிற்க வைத்து ஊத்தை தேய்த்து சவர்க்காரம் போட்டு குளிக்க வார்க்கையில் கண் எரியுது என்று கத்தல். தலை இழுத்து பவுடர் போட்டு தோய்த்த உடுப்பு மாட்டி விட்ட அடுத்த கணமே காணாமல் போய் மீண்டும் ஊத்தையாக்கிக் கொண்டு வந்து நிற்கும் அசண்டைத்தனம்.. .. .. எல்லாத்தையும் கத்திக் கத்தியே தாங்கிக் கொள்வாள்.

இப்போது போல இருக்கிறது. சித்திரை லீவுக்குள், இனியில்லையென்ற கோர வெய்யில் எறித்த ஒரு வெக்கை நாளில் அது நடந்ததாக ஞாபகம். அவனது பிரளி தாங்க முடியாமல் அம்மா கோள் மூட்டிவிட, அப்பா கண்கடை தெரியாமல் அடித்த அடியில் தலை தவிர்ந்த இன்னோரன்ன உறுப்புகள் எல்லாத்திலும் கேட்டிப்பிரம்புத் தழும்புகள். சட்டையில்லாமல் நின்றதால் பாரபட்சமில்லாமல் எங்கும் பிரகாசமாய் பிரம்பின் வீச்சு. இராத்திரி அவனை மடியில் கிடத்தி எண்ணை தடவினாள் அம்மா. இரத்தம் கண்டிப் போன தழும்புகளில் கை படப்பட அவன் நோவில் கைகாலை இழுத்துக் கொண்டு சினுங்கினான். அம்மாவுக்குச் சகிக்கவில்லை.

மாட்டுக்கு அடிக்கிற மாதிரி இப்பிடியும் அடிக்கிறதா என்ர பிள்ளைக்கு, படாத இடத்தில பட்டா என்ன செய்யிறது என்று அப்பாவிடம் கண்ணீர் சிந்தி முகத்தை நீட்டினாள். தானே கோள் மூட்டியிருந்தாலும் இப்படி அடிக்கக் கூடாதென்பது அவள் வாதம். அன்றிரவு சாப்பிடாமல் மறியல் செய்து சுவாமியறை ஓரமாகப் பாய் போட்டு ஒதுங்கிக் கொண்டாள். அம்மா முகம் சுருக்கினால் அப்பாவின் மனம் சுருங்கிப் போகும். நீ சொல்லித்தானே நான் அடித்தேன் என்கிற வாதத்திற்கெல்லாம் அவர் போக மாட்டார். சரியடாப்பா மூஞ்சையை நீட்டாதே, இனி உன் குலக் கொழுந்தில் ஜென்மத்துக்கும் நான் கை வைக்கமாட்டன் என்ற உறுதிமொழி வாங்கிய பின்தான் சமாதானமானாள். தன்னைத் தவிர யாரும் பிள்ளைக்குக் கை நீட்டக் கூடாது, அப்பாவாக இருந்தாலும்.

கணக்கு மாஸ்டர் கண்மண் தெரியாமல் அடித்ததற்காக வரிந்து கட்டிக் கொண்டு அம்மா பள்ளிக்கூடம் வந்தது இன்னும் வீடியோப் படமாய் நெற்றிக்குள் ஓடும். வழக்கத்தில் பள்ளி மாஸ்டர் என்றால் பக்குவமாய் ஒதுங்கி நின்று மரியாதை காட்டுகிற அம்மா – பத்ரகாளியாய் மாறியதை அன்றுதான் கண்டிடான். அடிக்கடி ரீவைண்ட் பண்ணிப் பார்க்கும் காட்சி அது.

வேறெதுக்கும் அப்பாவோடு அம்மா முகம் நீட்டி அவன் கண்டதில்லை. அவனது பிரளி தலைகால் தெரியாமல் அத்து மீறுகிற போது, நீங்க குடுக்கிற செல்லந்தான், இது இப்படித் தறுதலையாய்த் திரியுது என்று புறுபுறுத்து குற்றம் சுமத்துவாள். அம்மாவின் குணம் அப்பாவிற்கு அத்துபடி. ஒன்றும் சொல்லாமல் வெறுமனே சிரிப்பார். அந்த நேரங்களில் அப்பாவைப் பார்க்கப் பாவமாயிருக்கும்.

எல்லாரும் காற்றோட்டமாய் விறாந்தையில் படுக்க பாய்களைச் சேர்த்து விரித்து விடுவாள் அம்மா. அப்பா அம்மாவுக்கிடையில் இடத்தைப் பங்கு போட்டுக் கொண்டு பிள்ளைகள் துயில்வது அந்தப் பகுதியில் பழகி வந்த மரபு. தங்கச்சியின் இடத்தையும் ஆக்கிரமித்துக் கொள்வான் அவன்டி. எல்லைச் சண்டை மூழும். இழுபறியில் எப்போதும் போல் அவனுக்கே ஜெயம். தோல்விக்காகச் சினுங்கினால் இரகசியத்தில் அவனிடம் நுள்ளுகள் வாங்க வேண்டிவருமாதலால் அவள் மெளனம் காப்பாள். இருந்தாலும் இடையிலே எப்படித்தான் சண்டைநிறுத்தம் வருகிறதோ! திடாரென ஒற்றுமைப்பட்டு ஆளுக்கு மேல் ஆள் கால் போட்டு கட்டிப் பிடித்து அப்படியே உறங்கிப் போவார்கள்.

பிரச்னை என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் ? அதன் பிரமாணங்கள் புரியாத ரம்மியக் காலம் அது! அன்றைய அவனுக்கும், இந்த அணில்களுக்கும் என்ன வித்தியாசம் ? அவைகளின் ஆட்டம் பாட்டம் ஓட்டம் சுதந்திரம் எல்லாம் அப்போது அவனிடமும் இருந்தன.

இப்போது!

புறம்போக்கான கரும்பச்சைப் புல்வெளpயில் தலை நிமிரத் தோன்றாமல் கருமமே கண்ணாயிருக்கும் கறவைப் பசுவாய், பசுமை மாறாத பத்தாம் பழைய நிகழ்வுகளை மனம் மேய்ந்து கொண்டிருக்க, சவுக்கு மரக்கிளை நுனிக்கு வந்த அணில் அவனை நிகழ்காலத்திற்கு மீட்டு வந்தது. குந்தியிருந்து வாயை விரித்து மூக்கைச் சுருக்கி அது பார்த்த விதம் அவனிடம் என்னவோ கேட்பது போலவே இருந்தது.

என்னைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறதா ?

அணில் பேசுமா!

நாலைந்து மழைப்பொட்டுகள் விறாந்தையில் தீர்த்தம் தெளpத்தன. டொறொன்டோவில் இது சகஜம். இப்போதுதான் தூறும் என்றில்லை. எப்போதும் தூறும். திடாரென சோவென்று உரக்கும். சொல்லாமல் கொள்ளாமல் ஓயும். அலுங்காமல் குலுங்காமல் அடுத்த முறையும் வரும். அப்படியொரு சீதள சீதோடிணம். அவனுக்கு ஈரம் பிடிக்கும், அதிலும் மாரிமழையென்றால் மெத்தவும் பிடிக்கும். ஈரம் அளைந்து தடிமன் கட்டும் அளவுக்குப் பிடிக்கும்.

“தம்டிபி ஈரத்தில அளயாதயடா தடிமன் கட்டப் போகுது.”

அம்மாவின் எச்சரிக்கைகளை அவன் எப்போது கணக்கில் எடுத்தான் ?

மார்கழி விடுமுறைக்குள் அடைமழை பிடித்து வெளடிளம் போட்டிருந்த ஒரு நாளில் அது நடந்தது. அம்மா அடுப்படியிலிருந்தாள். கருவாட்டுக்குழம்பு அடுப்பிலிருந்தது. தலைப்பால் விட்டு இறக்குகிற நேரம். அவன் கூரைப்பீலியில் தலை கொடுத்து குத்துக்கல்லாட்டம் நின்று கொண்டிருந்தான். தொண்டையெடுத்துக் கத்தியும் அசையவில்லை. சுளகைத் தலைக்குப் பிடித்தபடி ஓடி வந்து இழுபறிப்பட்டு கூட்டிச் சென்றாள் அம்மா. தலை உணர்த்தி சூடு பறக்க திருநீறு தேய்த்து விட்டாள்.

சுவாமி மாடத்து திருநீறுதான் சர்வரோகத்திற்கும் அம்மாவின் முதல்சிகிட்சை. அவனது அலுவலை முடித்துக் கொண்டு வருவதற்குள், அடுப்பில் குழம்பு பொங்கி வழிந்து அடிப்பத்திவிட்டது. பற்றிக் கொண்டு வந்தது அம்மாவுக்கு.

“இனி முத்தத்தில் இறங்கினியோ முதுகுத்தோலை உரிச்சுப் போடுவன் வடுவா.”

அவன் விறாந்தைக் கட்டிலிருந்து முற்றத்து வெளடிளத்தில் கடதாசிக் கப்பல் விட்டு நீரோட்டம் பார்க்கத் தொடங்கினான். சும்மாயிருந்த தங்கச்சியை துணைக்குச் சேர்த்துக் கொண்டான். தனக்கும் கப்பல் கேட்டு அண்ணனின் நாடி தடவினாள் அவள். தனதிலும் சிறியதாக கப்பல் இழைத்துக் கொடுத்தான்டி. அதை வெளடிளத்தில் மூழ்க விட்டு அவள் சினுங்கியதும், தேவைக்குதவும் என்று கூரைக்கிராதியில் அம்மா மடித்துச் செருகி வைத்திருந்த மாட்டுப் பேப்பரில் பென்னம் பெரிய கப்பல் கட்டிக் கொடுத்தான். செருகி வைத்திருந்த பேப்பரைக் காணவில்லையென்று அம்மாவிடம் பேச்சு வாங்கிக் கட்டிக் கொண்டாள் தங்கை.

மாரியின் முதல் மழைக்கே அவனுக்குத் தடிமன் கட்டிவிடும். மடியில் குப்புறப் போட்டு முதுகு நெஞ்செல்லாம் விக்ஸ் தேய்ப்பாள் அம்மா. அடுத்த நாளும் நனைந்து கொண்டு தடிமனை முட்டுத் தடிமனாக்கிக் கொண்டு வருவான். இரவில் மூச்சு எடுக்க முடியாமல் அம்மாவின் மடிக்குள் புகுந்து கொள்வான்.

அம்மா வசம் பல கைமருந்துகள் இருந்தன. தேயிலை விக்ஸ்இலை வேப்பமிலை சேர்த்துப் போட்டு அவித்து ட்றங்குப் பெட்டியிலிருந்து கம்பளிப் படங்கு எடுத்து தலையை மூடி வேது பிடித்து விடுவது அதில் முக்கியமான சிகிட்சை. கம்பளிப் படங்கின் ப+ச்சிக்கட்டி வாசம் அவனுக்குப் பிடித்தாலும் ஆவிவெக்கை தாங்க மாட்டாமல் சட்டியிலிருந்து அடிக்கடி தலை கிளப்புவான்.

“மேனே நல்லாக் கிட்டப் பிடியனை, நெஞ்சுச் சளியை வெட்டுமனை. என்ர குஞ்சல்லோ, ராசாவுக்கு சுடச்சுட ஊதுபால் காய்ச்சித் தாறனனை.”

பிள்ளைகளுக்கு வருத்தமென்றால் உயிரை விட்டு விடுவாள் அம்மா. முட்டுத்தடிமனுக்குக் கூட முத்துக்குமாரசுவாமி கோயிலில் மூன்று வேளையும் அர்ச்சனை சாற்றுவாள்.

பழம் நினைவுகளில் ஈரலித்து குளிர்ந்து கொண்டே போனான் செல்வம். கொஞ்சம் கொஞ்சமாய் வலுத்த மழைக்குள் இறங்கி தலைகொடுத்து நிற்க ஆசை வந்தது. பிரம்பு எடுத்து சத்தம் போட்டு மறிக்க அம்மா உயிரோடு இல்லை. பிரம்பை விடவும் உறைப்பான கண்ணசைவால் எச்சரிக்கை செய்ய அப்பாவும் பக்கத்திலில்லை.

நெடுங்காலமாய் இப்படியொரு அருமையான சுகத்தை அவன் அனுபவித்ததில்லை. சுற்றியிருந்ததெல்லாம் அவனோடு மிக நெருக்கத்தில் சொந்தம் கொண்டாடின. நீலவானமும் நிலமும் நண்பர்களாய் நட்டுவாங்கம் செய்தன. தன்பாட்டில் திரியும் அணிலும் மெதுமெதுவாய் பெரிதான மழையின் இரைச்சலும் நெஞ்சை நிறைத்தன. எதிரேயிருந்த மரத்தில் மழையில் நனைந்து சிறகுகளைச் சிலுப்பி விட்ட ஏதோ ஒரு பெயர் தெரியாத சின்ன மண்நிறப் பறவையின் அருகாமை உற்சாகத்தைக் கிளறியது. இயற்கையின் சிருடிடிகள் எல்லாம் அவனுக்காகவே அமைக்கப்பட்டது போல உள்ளுர ஒரு கிளர்ச்சி.

மீண்டும் கீக் கீக் சத்தம் வர, சவுக்கு மரத்தைப் பார்த்தான்டி. ஓடிப்பிடித்துத் துரத்தும் அவைகளின் விளையாட்டு மழைக்குள்ளும் நின்றபாடில்லை. உற்றுப் பார்த்தான். துரத்துவது ஆண் அணிலாகத்தான் இருக்க வேண்டும். அதுதான் இத்தனை மகிழ்ச்சியாய் கீக் கீக் என்று ஒலிக்கிறது. இன்பத்தின் உச்சம் பெண்ணிடம் புதைந்து கிடப்பதை அந்த ஆண் அணில் புரிந்து கொண்டிருக்க வேண்டும். மன்மதக்கலையை அணிலுக்கு யார் சொல்லிக் கொடுத்தது ?

ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் அவசியம் என்ற இந்தச் சிருடிடி சிந்தாந்தத்திற்கு எந்த சீவராசி விதிவிலக்கு ? அணிலுக்கும் அதுதான். அவனுக்கும் அதுதான். ஆனாலும் அவன் இதுவரை அதற்கு ஆட்படாமலேயிருந்தான். இந்த வகை ஆசாபாசங்களுக்குள் அகப்பட அவகாசமில்லாமலிருந்தான். ஐந்து ஆண்டுகள்! இதயத்தின் அடி ஆழத்திலிருந்து அடிக்கடி குரலெழுப்பும் மெல்லிய சிருங்கார உணர்வுகளை கேட்டும் கேளாத செவிடனாயிருந்தான். வாய்வரை வந்துவிடுகிற சாமான்ய விருப்பங்களை வெளpப்படுத்தாத ஊமையாயிருந்தான். டொறொண்டோவிற்கு வந்ததிலிருந்தே அவன் இப்படித்தான்.

குடும்பத்தை உயர்த்திவிடும் லட்சியத்தில் முக்கால்வாசித்திட்டம் தாண்டியாயிற்று. இன்னும் கொஞ்சக் காலம் கடிடப்பட்டால் போதும். பிறகு! குடும்பம் பிள்ளைகுட்டியென்று செட்டிலாகி விடலாம் என்று பொறுத்திருந்தவனுக்கு இதுவரை இல்லாத மாற்றம் திடுதிப்பென்று இப்போது வந்திருக்கிறது. வாழ்வின் சந்தோசமான கூறுகளை இப்படி ஆறுதலாக இருந்து கற்பனையில் மென்று ரசிக்கும் மாற்றம் நிச்சயமாக வந்திருக்கிறது. ஐந்தாண்டுகளாக இல்லாத சபலம் இப்போது மட்டும் எப்படி பிடித்துக் கொண்டது ?

எல்லாம் இந்த டானியலால் வந்தது. தான் பிடித்த முயல் தப்புகிறதாவது என்று அடிக்கடி பிரகடணப்படுத்தும் மூர்க்கன் அவன். இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடுவான். அநேகமாக வெற்றியோடுதான் வருவான்.

நம்பிக்கை உறுதிப்பட்டபோது செல்வம் வெட்கத்தில் கொடுப்பிற்குள் சிரித்தான். பிறக்கப் போகும் இரண்டாயிரமாம் ஆண்டு பங்குனியில் அவனுக்கு முப்பத்தேழு முடியப் போகிறது. இந்த வயதில் கோளாறு வரலாமா ? கோளாறுகளுக்கு இடம் கொடாமல் தானுண்டு தன் லட்சியமுண்டு என்று எதற்கும் அசையாமல் அம்மி போலத்தானே இருந்தான். இந்த ராஸ்கல் டானியல் தான் எல்லாத்திற்கும் கால். அடிக்கு மேல் அடி அடித்து அம்மியை அரக்கி விட்டிருக்கிறான்.

மகனே ஐஞ்சு வருசம் ஓயாமல் ஓடியாடி உழைச்சாச்சு. அதுகளும் ஒரு மாதிரி நல்லா வந்திற்றுதுகள். உனக்கென்றும் ஒரு வாழ்க்கையிருக்கு என்பான் டானியல். அவனை ஒருநேரம் மகனே என்றழைப்பான். இன்னொரு நேரம் மச்சான் என்பான். அதே வாயால் மடையா என்றும் அழைப்பான். அவ்வளவு உரிமை கொண்டாடுவான்.

அவனுடைய தர்மபத்தினி, சியாமளா விரலுக்கேற்ற மோதிரம்டி. புருசனின் நாயனத்திற்கு ஒத்து ஊதுகிறவள். செல்வத்தை அவனை குடும்பச் சிறைக்குள் சிக்க வைக்க அவர்கள் போட்டி போட்டுக் கொண்டது மனதை ஈர்க்கத்தான் செய்தது. மசியாதவன் போல் பேசுவான் செல்வம்.

“கடைசித் தங்கச்சியின் பேச்சுக்கால் நடக்குது. வீடு கட்டித் தாறதென்று சின்னம்மா சொல்லியிருக்கிறா. தம்பியும் ஆவணியில ஏலெவல் எடுத்திற்றான். இன்னம் ஒரு வருசம்.”

“செல்வம், நாப்பது வயசானா நாயுந் தேடாது. நீ நினைச்சு வந்த கடமையை முடி. ஒன்றும் மறுப்பில்லை. ஆனா, கிடைச்ச நல்ல இடத்தைப் பார்த்து வைக்கிறதில என்ன பிழை ?”

டானியலின் நியாயம் அவனுக்குப் புரிந்தது. புரியாதவனாக வேடமிட அவன் முயற்சிக்கவில்லை. ஏற்கனவேயிருக்கும் தோள்பாரம் குறைந்து விட்டால் புதிய பாரத்தை குழப்பமில்லாமல் தூக்கலாம் என்கிற பரம்பரை பரம்பரையாக வந்த பொறுப்புணர்பு.

ஆனாலும் டானியல் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள். விடவே மாட்டான்.

“மச்சான் இங்கே எங்களைவிட்டால் உனக்கு ஆருமில்லை. உன்னை விட்டால் எங்களுக்கு ஆருமில்லை. குழந்தைகுட்டியோடு நீ குடித்தனமாயிருக்கிறதை நாங்கள் பார்க்க வேனும். உன்னில் அக்கறை எடுப்பது பிழையென்றால் சொல்லு விட்டு விடுகிறோம்.”

இந்தப் பயலை நினைத்தால் கண் ஓரங்களில் அவனுக்குப் பனித்துவிடும். யார் இந்த டானியல்டி ? யார் இந்த சியாமளா ? இவர்களுக்கும் அவனுக்கும் என்ன தொடுசல் ?

(தொடரும்)

Series Navigation

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்