ரகசிய அறை
Published June 19, 2003 • By
செல்வி
செல்வி

என் வீட்டிற்குவரும்
ஒவ்வொருவராலும்
எனது ரகசிய அறை
தேடப்படுகிறது
ரகசிய அறை
கண்டுபிடிக்கப்பட்டதும்
எனது ரகசியங்கள்
தேடப்படுகின்றன.
ரகசியங்கள்
கிடைக்காதபோது
கிடைத்தவைகளே
ரகசியமாக்கப்படுகின்றன.
sellurs@yahoo.com