யாராவது காப்பாற்றுங்கள்

This entry is part [part not set] of 36 in the series 20101017_Issue

யூசுப் ராவுத்தர் ரஜித்.


தூக்கத்தில் கனவு அன்று
கனவில் தூக்கம் இன்று

சந்தைச் சரக்கானது
இருதயம் நீரகம்

தொட்டுக் கறியானது
மாத்திரைகள்

தேடலே தொழிலாகி
வலைத் தளங்களானது
வாழ்க்கை
ஒவ்வொரு நாளும்
வெவ்வேறு தேடல்கள்

மறைச் சொல்லை
மறக்கிறோம்
முடமாகிறது தொடக்கம்
தொடக்கூடாததைத்
தொடுகிறோம்
குப்பையாகிறது கோப்பு
விரல் நுனிகளில் வைரஸ்
புற்றாகிறது பூக்கள்
அடுத்த கிரகம் அலைகிறோம்
‘ஆண்ட்டி வைரஸ்’ தேடி

விஞ்ஞான எல்லையை
எட்டிக் கொண்டே
பயணிக்கிறது அறிவு
அறிவைக் குட்டிக் கொண்டே
பயணிக்கிறது விஞ்ஞானம்

குடம் தேனாய்
விஞ்ஞானம் கண்டோம்
குடத்துக்குள்ளேயே
வீழ்ந்தோம்
‘யாராவது காப்பாற்றுங்கள்’
யூசுப் ராவுத்தர் ரஜித்.

Series Navigation