மோசடி மேற்கோள்கள் மூலம் ஒரு ஜிகாத்

This entry is part [part not set] of 42 in the series 20040930_Issue

அரவிந்தன் நீலகண்டன்


1. இப்னு பஷீர் வீரசாவர்க்கர் குறித்து வைக்கும் வாதங்களுக்கு பதில்:

தம்மாமின் செய்திலிருந்து சில வாசகங்கள் முதலில்: ‘கோல்கத்தாவிலிருந்து தினேஸ்தாஸ் குப்தா என்ற 92 வயது சுதந்திரப் போராட்ட வீரர் வந்திருந்தார். இவர் அந்தமான் சிறையில் 1933 முதல் 1938 வரை 5 ஆண்டுகள் சித்ரவதைப்பட்டவர்….“நானும் சாவர்க்கரும் ஒன்றாகத்தான் சிறையில் அடைபட்டோம். நானும் விடுதலை செய்யப்பட்டேன். சாவர்க்கரும் விடுதலை செய்யப்பட்டார். இப்படியிருக்க சாவர்க்கர் எப்படி தியாகியாவார் ?” என்று அவர் கேள்வி எழுப்பினார். ‘ தினேஸ்தாஸ் குப்தா சிறைப்பட்டிருந்த காலம் 1933 முதல் 1938 வரை – ஐந்து வருடங்கள். வீர சாவர்க்கரின் அந்தமான் சிறைக்காலம் 1910 முதல் 1921 வரை- பத்து வருடங்கள். அதாவது வீர சாவர்க்கர் அந்தமானில் பத்துவருடங்கள் சிறைவாசம் அனுபவித்து பின்னர் 1924 இலிருந்து 1937 வரை ரத்னகிரியில் வைக்கப்பட்டார். ஆனால் குப்தாவோ 1933 இலிருந்து 1938 வரை மட்டுமே அந்தமானில் இருந்தவர். ஆக, எப்படி 1910இலிருந்து 1921வரை சிறைவைக்கப்பட்டவருடன் 1933 இலிருந்து 1938 வரை சிறை வைக்கப்பட்டவர் ‘“நானும் சாவர்க்கரும் ஒன்றாகத்தான் சிறையில் அடைபட்டோம். ‘ என்று கூற முடியும் ? எப்படி தன்னைத்தானே தேசிய நாளேடு என்று பீற்றிக்கொள்ளும் ‘தி ஹிண்டு ‘ போன்ற நூறாண்டிற்கும் மேற்பட்ட பாரம்பரியமிக்க நாளேட்டின் நிருபர் இந்த முரணை கவனிக்காமல் விட்டார் ? வீர சாவர்க்கர் மீதான பகுத்தறிவற்ற காழ்ப்புணர்ச்சி கண்ணை மறைக்கிறது. விளைவு, படு அபத்தமான முரணைக் கூட அந்த நாளேடு வெளியிடத் தயாராகிவிட்டது. மார்க்சிஸ்ட்கள் எப்படி ஒரு பாரம்பரியமிக்க நிறுவனத்தைக் கூட கைப்பற்றி தங்கள் பிரச்சாரத்திற்கு எவ்வித தர வீழ்ச்சியைக் குறித்தும் கவலைப்படாது பயன்படுத்துவர் என்பதற்கு இது மற்றொரு அத்தாட்சி. மற்றொரு முக்கிய விஷயத்தை இப்னு பஷீர் மறந்துவிட்டார். வீரசாவர்க்கர் கால அந்தமான் சிறை வேறு. 1930களில் அது எவ்வளவோ கடுமை குறைந்த ஒன்றாக மாறிவிட்டது. உதாரணமாக வீர சாவர்க்கரின் அந்தமான் சிறைவாசத்தின் போது சிறைகைதிகள் மீதாக செய்யப்பட்ட பல சித்திரவதைகள் 1930களில் அறவே ஒழிக்கப்பட்டுவிட்டன. வீர சாவர்க்கருடன் உடன் சிறைவாசம் அனுபவித்த பல போராளிகள் தற்கொலை செய்ய முனைந்தபோது அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களுக்கு தெம்பூட்டியவர் வீர சாவர்க்கர்.

2. குருஜியின் ‘Bunch of Thoughts ‘ vs ‘Bunch of Fraudulent quotes ‘

இப்னு பஷீர் ஒரு சிறந்த சுற்றுப்புறச் சூழலியலாளராக வரலாம். குப்பைகளை மறு சுழற்சி செய்வது நல்ல சூழலியல் உக்திதான் ஆனால் புழுத்துப்போன பிரச்சாரப் பொய்க்குப்பைகளை மீண்டும் மீண்டும் கூறுவது நல்ல வாதமாகாது. இப்னு பஷீர் என்ன கூறுகிறார் ?

கோல்வால்கர் சொல்லும் இந்து ராஷ்டிரத்தின் இலக்கணம் என்ன தெரியுமா ? இதோ படியுங்கள். “தென்னாட்டில் ஒரு ஆங்கிலேய அதிகாரி இருந்தார். அவருக்கு உதவியாளராக அந்த மாநிலத்தைச் சார்ந்த ஒருவர் இருந்தார். அவர் நாயுடு வகுப்பைச் சார்ந்தவர். அந்த ஆங்கிலேய அதிகாரியின் பியூனாக இருந்தவர் ஒரு பிராமணர். ஒருநாள் அந்த ஆங்கிலேய அதிகாரி தனது ‘பிராமண ‘ பியூன் பின் தொடர வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே அவரது உதவியாளராக இருந்த அந்த நாயுடு சமுதாயத்துக்காரர் வந்தார். ஆங்கிலேய அதிகாரியைப் பார்த்து கைகுலுக்கினார். ஆனால் பிராமண பியூனைப் பார்த்தவுடன் காலைத்தொட்டு வணங்கினார். அதைப்பார்த்து வியப்படைந்த ஆங்கிலேய அதிகாரி ‘நான் உன்னுடைய பெரிய அதிகாரி. என்னிடம் நீ கைதான் குலுக்கினாய். ஆனால் என்னுடைய பியூனின் காலைத்தொட்டு கும்பிடுகிறாயே. இது என்ன பிரச்னை ? ‘ என்று கேட்கிறார். அதற்கு அந்த உதவியாளர் பதில் சொல்கிறார். நீங்கள் என்னுடைய பெரிய அதிகாரியாக இருக்கலாம். ஆனால் நீங்கள் ஒரு மிலேச்சர். அவர் ஒரு பியூனாக இருக்கலாம். ஆனால் நாங்கள் வணங்கக்கூடிய பிராமண சமூகத்தைச் சார்ந்தவர். அவரைத் தொழவேண்டியது எனது கடமை என்று பதில் சொன்னார். இதுதான் இந்து தர்மம்” (குரு கோல்வாக்கர் எழுதிய Bunch of Thoughts நூல் பக்கம் 138-139)

இப்போது இந்த மேற்கோளே ஒரு சரியான மோசடி வேலை. ஏன் ?

ஒன்று குருஜி கோல்வால்கர் மேற்கண்ட உதாரணத்தை ஹிந்து ராஷ்டிரத்தின் உதாரணமாக தரவில்லை. ஹிந்து ராஷ்டிரம் குறித்து Bunch of Thoughts பல இடங்களில் explicit ஆக பேசுகிறது அங்கே சாதி குறித்து ஏதும் இல்லை. மாறாக மேற்கண்ட உதாரணம் ‘The British Game ‘ என்கிற தலைப்பின் கீழ் வருகிறது. அதுவும் குருஜியே தரும் விவரணமாகவும் இல்லை. மாறாக, லாலா ஹர்தயாள் எனும் விடுதலைப்போராட்ட வீரர் பிரிட்டிஷ் ஆவணங்களிலிருந்து கொடுப்பதாக வருகிறது. இதோ இப்னு குறிப்பிட்ட மேற்கோள் முழுமையாக:

‘There is an incident narrated by Lala Hardayal, one of our great revolutionaries. In the South, there was an English officer. His assistant was a local person, probably a Naidu. The orderly of that Englishman was a Brahmin. One day, when this Englishman was walking in a street, followed by his orderly, the assistant came form the opposite side. The two officers greeted each other and shook hands. But when the assistant officer saw the orderly, he took off his turban and touched his feet. The Englishman was amazed. He queried, ‘I am your senior officer, but you stand erect and just shake hands wih me, whereas he is only my peon and you prostrate before him on this busy road. What is the matter ? ‘ The Assistant officer replied, ‘You may be my officer, but you are a mlechha. He may be a peon, but he belongs to that class of my people which is held in great respect all down the centuries, before whom it is my duty to bow down. ‘ Letters are available, written by that Englishman to the India Office in England, relating all this and saying that unless the Englishman ousted the Brahmin from that position and occupied it himself, i.e., became as respectable or even more, his empire could not last long. With that end in view, the Englishman began training us systematically in various ways. The first thing he taught was that this was one great ‘continent ‘ and not a country. ‘ பிரிட்டிஷார்கள் ஏன் ஆரிய-திராவிட இனவாதத்தை பரப்பினார்கள் என பின்னர் விரிவாக பேசுகிறார் குருஜி. இதில் கவனிக்க வேண்டியவை இப்னு பஷீரின் விஷமத்தனமாக இரண்டு மோசடி வேலைகள்.

ஒன்று. மேற்கண்ட சம்பவம் அந்தணனுக்கு சமுதாயத்தில் இருந்த மரியாதையை பார்த்துவிட்டு அந்த இடத்தில் தான் வர விரும்பி ஆங்கிலேயன் சூழ்ச்சி செய்தான் என்பதை விளக்க பிரிட்டிஷ் ஆவணத்தில் இருந்ததாக லாலா ஹர்தயாள் கூறியதை குருஜி கூறுவதை ஹிந்து ராஷ்டிரத்தின் இலக்கணமாக குருஜி கூறினார் என்பது

இரண்டு. இப்னு பஷீரின் சொந்த சரக்கான ‘இதுதான் இந்து தர்மம் ‘ எனும் வாக்கியத்தை இடை செருகிய விஷமத்தனமான மோசடி வேலை. குருஜியின் உண்மையான மேற்கோளையும் பஷீரின் மோசடியாக உருவாக்கப்பட்ட மேற்கோளையும் ஒப்பிட்டு நோக்க இது தெளிவாகவே தெரியும். இப்படிபட்ட அப்பட்டமான மோசடி வேலைகளை செய்ததற்காக இப்னு வருந்துவார் என்கிறீர்கள் ? வாய்ப்பே இல்லை. வேண்டுமானால் அடுத்த வாரம் பாருங்கள். (ஒருவேளை இப்னு மற்றொரு இடத்தில் கூறப்பட்ட மேற்கோளை அப்படியே இங்கு மறு-சுழற்சி செய்திருக்கலாம் அதிலுள்ள திருகல் வேலைகளை தெரியாமலே இது நடந்திருக்கலாம். அதாவது Bunch of Thoughts நூலையே இப்னு படிக்காமல் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு எதிரான இதழ்கள் அல்லது இணையதளங்களிலிருந்து ^C+^V செய்திருக்கலாம். அவர் இதை ஒத்துக்கொள்ளும் பட்சத்தில் அவர் மேற்கோளில் மோசடி வேலை செய்தார் என்றதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். அவர் மோசடி வேலை செய்தது மேற்கோளில் அல்ல. ஒரு நூலை படிக்காமலே படித்த பாவனையில் அதிலிருந்து மேற்கோள்களை அடுக்கினாரே அந்த மோசடிவேலையை மட்டுமே அவர் செய்திருக்கிறார்.)

இனி தெளிவுக்காக ஒரு நியாயமான ஐயத்திற்கு போகலாம். இந்த உதாரணத்தைக் கூறியதால் இத்தகைய ஒரு சமுதாய அமைப்பினை குருஜி விரும்பினாரா ? ‘Bunch of Thoughts ‘ தீண்டாமை மற்றும் நலிவுற்ற நம் சகோதரர்கள் மத்தியில் சேவை ஆகியவை குறித்து ஒரு முழு அத்தியாயமே உள்ளது. இப்னு கூறுகிறார், ‘சமுதாயத்தில் அண்ணன் தம்பிகளாய் ஒற்றுமையாக இருந்தவர்களை பிரித்துஎடுத்து ஒருவனை ஒருவன் தொடக்கூடாது. தெருவில் நடமாடக்கூடாது. வேதநூல்களை படிக்கக்கூடாது. அதை கேட்கக்கூடாது. அப்படி கேட்பவர்களின் காதுகளில் ஈயத்தை ஊற்ற வேண்டும் என்றெல்லாம் எழுதி வைத்திருக்கக் கூடிய மனுஸ்மிருதியை பற்றி இவர்கள் கூறும்போது அது கடவுளை வணங்குவதற்கு என்று சொல்வது எவ்வளவு பெரிய துரோகம்.. ‘ இதற்கு அவர் மேற்கோள் காட்டும் ‘வர்ண வியாவஸ்தா என்று சொல்வதையே – நமது மக்கள் இழிவு என்று நினைக்கிறார்கள். அது ஒரு சமூக அமைப்பாகும். சமூக ஏற்றத்தாழ்வு அல்ல. பிற்காலத்தில்தான் இது திரித்துக் கூறப்பட்டது. பிரித்தாளும் சூழ்நிலையை விரும்பிய பிரிட்டிஷார்தான் இப்படிப் பிரச்சாரம் செய்தனர். நான்கு சமூகப் பிரிவுகளும் – அவரவர்கள் சக்திக்கேற்ற கடமைகளைச் செய்வதன் மூலம் கடவுளை வணங்கலாம் என்பது தான் இதன் தத்துவம். ‘பிராமணர்கள் ‘ தங்கள் அறிவுத்திறமையால் உயர்ந்தவர்கள். ஷத்திரியர்கள் எதிரிகளை அழிப்பதில் வல்லவர்கள். வாணிபம் விவசாயம் செய்பவர்கள் வைசியர்கள். தங்கள் தொழிலைச் செய்வதன் மூலம் சமூகத்திற்கு சேவை செய்பவர்கள் சூத்திரர்கள். இந்த நான்கு பிரிவுகளிலும் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது. இது ஒரு சமூக அமைப்பு. இதைப் புரிந்து கொள்ளாமல் இந்த அமைப்பு முறைதான் வீழ்ச்சிக்கே காரணம் என்று பிரச்சாரம் செய்கிறார்கள்” (Bunch of Thoughts 8-வது அத்தியாயம் பக் – 107-108)

மீண்டும் அதே மோசடி வேலை. ஏனெனில் மனு ஸ்மிருதி குறித்து இப்னு குறிப்பிட்ட அத்தியாயம் பேசவில்லை. மாறாக பகவத் கீதையிலிருந்து ஒரு வரியை குருஜி மேற்கோள் காட்டுகிறார். அவ்வளவே. பகவத் கீதை எவ்விடத்திலும் ‘ஒருவனை ஒருவன் தொடக்கூடாது. தெருவில் நடமாடக்கூடாது. வேதநூல்களை படிக்கக்கூடாது. அதை கேட்கக்கூடாது. அப்படி கேட்பவர்களின் காதுகளில் ஈயத்தை ஊற்ற வேண்டும் என்றெல்லாம் ‘ கூறவில்லை என்பதுடன் அவ்வாறு கூறும் மனுஸ்மிருதியை அவர் எவ்விடத்திலும் நியாயப்படுத்தவில்லை. இதோ அவரது வார்த்தைகளை அப்படியே கொடுக்கிறேன்: ‘The other main feature that distinguished our society was the Varna-vyavastha. But today it is being dubbed ‘casteism ‘ and scoffed at. Our people have come to feel that the mere mention of Varna-vyavastha is something derogatory. They often mistake the social order implied in it for social discrimination. The felling of inequality, of high and low, which has crept into the Varna system, is comparatively of recent origin. The perversion was given a further fillip by the scheming Britisher in line with his ‘divide and rule ‘ policy. But in its original form, the distinctions in that social order did not imply any discrimination such as big and small, high and low, among its constituents. On the other hand, the Gita tells us that the individual who does his assigned duties in life in a spirit of selfless service only worships God through such performance. Society was conceived of as the fourfold manifestation of the Almighty to be worshipped by all, each in his own way and according to his capacity. If a Brahaman became great by imparting knowledge, a Kshatriya was hailed as equally great by for destroying the enemy. No less important was the Vaishya who fed and sustained society through agriculture and trade or the Shudra who served society through his art and craft. Together and by their mutual interdependence in a spirit of identity, they constituted the social order. Looking at its present decadent and perverted form and mistaking it for its original form, there are some who never tire of propagating that it was the Varna-vyavastha that brought about our downfall down these centuries. ‘ மேலானவன்-கீழானவன் எனப்பார்ப்பதை ‘வக்கிரம் ‘ என்கிறார். இந்த வக்கிரமே பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சி வலுபெற மேலும் உதவியது என்கிறார். மேலும் வர்ண அமைப்பினை பகவத் கீதையின் பார்வையிலேயே அவர் காண்கிறார். பகவத் கீதை மிகத்தெளிவாக வர்ண அமைப்பினை குண கர்ம அடிப்படையில் கூறுகிறதே ஒழிய பிறப்பினடிப்படையில் ஏற்பட்டதாக கூறவில்லை. அவ்வளவு ஏன் ஸ்ரீ மத் பகவத் கீதை எதன் அங்கமோ அந்த மகாபாரதமே ஒரு பிராம்மணன் ஒரு கசாப்புக்கடைகாரனை பணிந்து ஞானத்தை பெறுவதாக கூறுகிறது. எனவே மிகத்தெளிவாகவே இப்னு கூறியுள்ள வார்த்தைகளான ‘சமுதாயத்தில் அண்ணன் தம்பிகளாய் ஒற்றுமையாக இருந்தவர்களை பிரித்து எடுத்து ஒருவனை ஒருவன் தொடக்கூடாது. தெருவில் நடமாடக்கூடாது. வேதநூல்களை படிக்கக்கூடாது. அதை கேட்கக்கூடாது. அப்படி கேட்பவர்களின் காதுகளில் ஈயத்தை ஊற்ற வேண்டும் என்றெல்லாம் எழுதி வைத்திருக்கக் கூடிய மனுஸ்மிருதியை பற்றி இவர்கள் கூறும்போது அது கடவுளை வணங்குவதற்கு என்று சொல்வது ‘ எனும் வார்த்தைகளுக்கு மனு ஸ்மிருதி அடிப்படையிலான வர்ண அமைப்பினை குருஜி புகழ்கிறார் என்பது ஒருவேளை இப்னு அறியாமல் செய்த தவறு அல்லது அறிந்தே செய்த மோசடி. நான் கூறுவதெல்லாம் ‘Bunch of Thoughts ‘ உடன் நான் நூற்றுக்கு நூறு உடன்படுகிறேன் எனக் கூறமுடியாது. (அதற்கு காரணம் எனது அறிவின்மையாகக் கூட இருக்கலாம்.) ஆனால் அரைகுறை மேற்கோள்கள் முதல் மோசடி மேற்கோள்கள் வரையாக குருஜியை ஏதோ சாதி வெறியராக காட்டமுற்படும் அரைகுறைகள் அதே ‘Bunch of Thoughts ‘ -இலிருந்து எடுக்கப்பட்ட பின்வரும் மேற்கோளையும் படியுங்கள்: ‘Let our workers keep their minds free from such tendencies and work for our people and our Dharma in the right spirit, lend a helping hand to all our brethren who need help and strive to relieve distress wherever we see it. In this service no distinction should be made between man and man. We have to serve all, be he a Christian or a Muslim or a human being of any other persuasion; for, calamities, distress and misfortunes make no such distinction but afflict all alike. And in serving to relieve the sufferings of man let it not be in a spirit of condescension or mere compassion but as devoted worship of the Lord abiding in the heart of all beings, in the true spirit of our dharma of surrendering our all in the humble service of Him who is Father, Mother, Brother, Friend and Everything to us all. ‘ (Bunch of Thoughts III:29) அடுத்ததாக இப்னு குரானிலிருந்து சில வரிகளை தருகிறார். வாழ்க. அனைவரும் ஆதமிலிருந்து வந்தவர்கள் என்பது போன்ற மூடநம்பிக்கைகளின் அடிப்படையில்தான் அவருக்கு சமூக நீதி எழுப்பப்பட முடியுமென்பது வருத்தமான விஷயம். என்றாலும் ‘அனைவரையும் அல்லா ஆதமிலிருந்து உருவாக்கியதால் சக-மனிதனை நீங்கள் அடிமைகளாக வைக்காதிருப்பீர்களாக ‘ எனும் குரான் வரியை (அப்படி ஏதாவது இருந்தால்)அவர் நிச்சயம் காட்டுவார் என நம்புகிறேன். நிச்சயமாக நபியாக நம்பப்படும் முகமது ‘தேர்ந்தெடுக்கப்பட்ட குரேஷி இனத்தில் ‘ உதித்ததார் எனக்கூறும் ஹதீஸ்கள் ஏதும் இருக்காது எனவும் நம்புவோமாக. ஆமாம் இப்னு சார், சூடானில் இஸ்லாமிய மெளல்விகள் ஆதரவுடன் அடிமை வியாபரங்கள் நடக்கிறதாமே சல்மான் ரஷ்டிக்கு எதிராக பத்வா போடுவதைப் போல ஏன் சூடான் மெளல்விகளுக்கு எதிராக ஒரு பத்வாவையும் காணோம் ?

—-

Series Navigation