முடிவுகள் எனும் ஆரம்பங்கள்!

This entry is part [part not set] of 50 in the series 20110515_Issue

ருத்ரா


10/5/2011

தேர் ஓடிய தடம்

……
உற்று உற்று பார்க்கிறோம்

இந்த தடத்தை

.
ஏதோ ஒரு

“ஆணை”
ஆனை போல‌

ஓடி ஓடி

ச‌ர்க்க‌ஸ் காட்டிய‌து

.
க‌ண்ணுக்கு தெரியாத‌

ஒரு சாட்டை

நான் ஆணையிட்டால்”
பாணியில்

அதை இய‌க்கிய‌து

.
அந்த ஆனை

வலம் வந்த போது
சில வெங்கலக்கடைகள்

கல கலத்தன

.
தேர்தல் காட்சிகளும்

களை கட்டின
.

சாதாரணமாய் இருந்த அதிகாரிகள்

ஜேம்ஸ் பாண்டு”கள் ஆகினார்கள்.
சினிமாக்களின்

நிழல் காட்சிகள் எல்லாம்

நிஜம் ஆகின

.
கார் துரத்தல்களும்

கற்றை கற்றையாய்

கரன்சிகளும்

காந்திப்புன்ன‌கைக‌ளின்

குவிய‌ல்க‌ளாய்

ச‌ந்தி
“சிரித்த‌ன‌”.

குற்ற‌ப்ப‌த்திரிகைக‌ள்

ம‌லைபோல்

ம‌றைத்துக்கொண்டிருக்கின்ற‌ன‌

இந்த‌

வாக்குச்சீட்டுக‌ளை
!

இது தூய்மையாக்கும்

ஒரு வேள்வி தான்

.
க‌ங்கைக்குள் ஒளிந்திருக்கும்

கூவ‌ங்க‌ளையும்

கூவங்களிலிருந்து

சம்ப்ரோக்ஷணம்” செய்ய‌வேண்டிய‌
க‌ங்கைக‌ளையும்

தேடி தேடி ஓடுகின்ற

இந்த‌

தாற்காலிகமான‌

ஒரு பொம்மை விளையாட்டுக்கும்

கீ கொடுத்தது

நம் ஜனநாயகம் தான்

.
ஜ‌ன‌நாய‌க‌த்திலிருந்து

கிளைத்தது தான்

இந்த

“அவசரநிலை” அதிகாரம்.
ஆனால்

இந்த நுனிக்கிளையிலிருந்து

அடிக்கிளையை வெட்டி

ம‌ர‌த்தை காக்க‌ வ‌ந்த‌

அதிச‌ய‌ அதிகார‌மா இது
?

“ல‌ஞ்ச‌ம்”

எனும் வெள்ளையானையை

பிடிக்க‌ வ‌ந்த‌

இந்த‌

“ஐராவ‌த‌த்தை”
ஏவிய‌ இந்திர‌ன்க‌ள் யார்

?
இந்திர‌னின்

ஆயிர‌ம் க‌ண்க‌ள் போல்

பொத்த‌ல் விழுந்த‌

புனித‌ தேச‌மே

ந‌ம் தேச‌ம்

.
ஊழ‌ல் ஊழ‌ல் ஊழ‌ல்

எனும் ஊதுகுழ‌ல்க‌ள்

எங்கும் ஒலித்தாலும்

இறைவ‌னை கூப்பிடும்போதே

ல‌ஞ்ச‌ம் கொடுத்தே

கூப்பிடுகின்றோம்

.
த‌ங்க‌ம் தான‌மாய் கொடுத்து

த‌ங்க‌த்தையே

அவ‌ன் வ‌டிவ‌ம் ஆக்கி

வ‌ண‌ங்குவோம் நாங்க‌ள்

.
அந்த‌

“ஹிர‌ண்ய‌ க‌ர்ப்ப‌னை”
ச‌ஹஸ்ர‌நாம‌ம் சொல்லி

ச‌ஹ‌ஜ‌மாக்கிக்கொள்ள‌ பார்ப்ப‌தே

ந‌ம் த‌த்துவ ர‌க‌சிய‌ம்

.
பாருங்க‌ள்

அந்த‌ ஆட்டு ம‌ந்தைக‌ளை

அட்ச‌ய‌ திதியில்”!
ந‌கைக்கடை எனும் கோவில்க‌ளில்

!
கூட்ட‌ம் பிதுங்கி வ‌ழிகின்ற‌து

என்ற‌ பெருமை ந‌ம‌க்கு

!

அசுர‌ன் தான் முத‌லில் வ‌ந்தான்

அத‌னால் தான்

ஆயுத‌ங்க‌ளுடன் ஆண்டவன்

அப்புற‌ம் வ‌ந்தான்

…..
ஆயுதங்களின்

விஸ்வ‌ரூப‌ம் த‌ந்தான்

.
அசுரன்களை படைக்காமலேயே

இருந்திருக்கலாம்

!
ஆண்டவனுக்கு கூட‌

சின்ன சின்ன ஆசை

அசுரனாய் கொஞ்சம்

இருந்து பார்ப்போமே என்று

!
அந்த ஆசையின்

அசுர விருட்சமே

ஊழல்


எங்கும் ஊழல்

!
பிறகு

அவனையே

அவன்

வதம் செய்யும்

அவதாரங்கள்

சொல்ல வருவதெல்லாம்

மனிதா
நீயே தான்

எல்லாவற்றையும்

(

எங்களையும் சேர்த்து தான்)
படைத்து வைத்திருக்கிறாய்

.
அப்புறம்

ஏன் இந்த ஆசைகளில் வேட்டை

?”
என்பது தான்

.
மனிதன் சொல்லுவதை

இறைவனும் கேட்பதில்லை

!
இறைவன் சொல்லுவதை

மனிதனும் கேட்பதில்லை

!
ஹிரண்யம் எனும்

பொன் போன்ற‌ ஒளியே

இங்கு க‌ருவானது

!
உயிர் ஆன‌து

!

த‌ட்சிணை” உருவில் அது
த‌ங்க‌ம் ஆன‌ போது

த‌த்துவ‌ங்க‌ள் யாவும்

க‌ரைந்து போன‌து

ப‌ஞ்ச‌ பாண்ட‌வ‌ர் பூமியென்றாலும்

அடிப்ப‌டையில் இது

ல‌ஞ்ச

(த்தால்)ஆண்ட‌வ‌ர் பூமி தான் இது!
ஆயிர‌ம் ஆயிரம் ஆண்டுகளாய்

அழுக்கேறிய‌ இந்த‌ துணியை

அல‌ச‌

அன்னா ஹ‌சாரேக்க‌ள்

எனும் சில‌ சோப்புக்க‌ட்டிக‌ள்

வ‌ந்த‌ போதும்

அவ‌ற்றின் பார்வையில்

முதுமை ம‌ட்டுமே இருந்த‌து

முழுமை இல்லை

.
பார‌த‌ ம‌க்க‌ள் தெரிவ‌தைவிட‌

அவ‌ருக்கு

பார‌த‌ மாதா” மட்டுமே
தெரிந்த‌து

!
அவர் கோபம் தூய்மையானது

.
மக்களின்

ஊமைத்தனமான

எரிமலைகளின்

உருவகம் தான் அவர்

.
அதிலும்

சந்தேகம் இல்லை

!
அந்தக்காலத்து

மதியில்லாதா முத்தண்ணா
அல்ல அவர்

“!
வெஸ்டட் இன்ட்ரெஸ்ட்

எனும்

சில ஆதாயக்கும்பல்கள் தான்

அவ‌ர் உண்ணாவிர‌த‌ப்ப‌டுக்கையை

த‌யார் செய்த‌தோ

எனும்

ம‌யிரிழை அள‌வு ஐய‌த்துக்கு

அவ‌ர் அப்பாற்ப‌ட்ட‌வ‌ர் அல்ல‌

!
இந்த‌

“ராம‌ர்க‌ள்”
எப்ப‌டிவேண்டுமானாலும்

இருந்துவிட்டுப்போக‌ட்டும்

!
ஊழ‌ல் ஒழிக்க‌

தீக்குளித்த‌

இந்த‌ ஜ‌ன‌நாயக

(ஆண்) சீதையின்
நோக்க‌ம் வெல்ல‌ட்டும்

!
ஊதி ஊதிப்பெருக்கி

க‌ரையான் புற்றையே

க‌யிலாய‌ ம‌லை ஆக்கும்

இந்த‌ ப‌லூன் வியாபாரிக‌ளின்

ப‌த்திரிகை வியாபார‌மும்

சூடாக‌வே ந‌ட‌க்கிற‌து

.
நீதிமன்றங்களின்

தராசு முள் எல்லாம்

தங்கள் கைக்குள்

என்று

தினந்தோறும்

பரபர‌ப்புகளின்

சயனைடு தடவிய

பத்திரிகைகளின்

பக்கங்களால்
பந்தல் போடுவதும்

ஊடக”லொள்ளுகள் மூலம்
சம்பவங்களின்

தள்ளுமுள்ளுகளை

அரங்கேற்றம் செய்வதும் ஆன‌

சவடால்களை

ச‌ரித்திர‌மாக்க‌ப்பார்க்கும்

ச‌தியை முறிய‌டிப்ப‌தும்

நீதி தேவ‌னின் க‌ட‌மை

!
இந்த‌ மேக‌ங்க‌ள் க‌லைய‌ட்டும்

.
நீதி சுட‌ர‌ட்டும்

.

இந்திய‌ன்” தாத்தாக்களுக்கும்

அந்நிய‌ன்” சீற‌ல்க‌ளுக்கும்
தேசிய‌ விருதுக‌ள் கிடைக்க‌லாம்

.
ஆனால்

இந்த

அவ‌ச‌ர‌ நிலை”ச்சிசுக்க‌ள்
சொடுக்கிய‌

நான் ஆணையிட்டால்…”
ச‌வுக்குக‌ள்

வாக்குப்பூச்சிக‌ளிடையே

வ‌ல‌ம் வ‌ந்த‌ போது

சில‌ நேர‌ம்

“அவ‌தார‌ங்க‌ளாயும்”
ப‌ல‌ நேர‌ம்

“அரிதார‌ங்க‌ளாக‌வும்”
காட்சி கொடுத்த

காட்சிக‌ளைத்தான் க‌ண்டோம்

.
ஊழ‌ல் எனும்

பிர‌ம்மாண்ட‌

திமிங்கில‌த்தின் முதுகு

இங்கே

சில‌ ப‌த்திரிகைக‌ளுக்கு

ஒரு தீ

(ர்)வு ஆக‌
தோற்ற‌ம் த‌ந்த‌தே

கோமாளித்த‌ன‌ங்க‌ளில்

வ‌டிக‌ட்டிய‌

கோமாளித்த‌ன‌மாக‌ தெரிந்த‌து

!
முடிவு

எப்ப‌டியும் இருக்க‌ட்டும்

.
ஆனால்

ஒரு புதிய‌ ஆர‌ம்ப‌த்தின்

ரம்பம் ஒன்று
வாய் பிளந்து நிற்பதே

இப்போதைய‌

ஜ‌ன‌நாய‌க‌த்துக்கு

நேர்ந்திருக்கும் பேராப‌த்து

.
மே

12 வ‌ரை
தூங்கிக்கொண்டிருக்கும்

இந்த‌ வாக்குப்பெட்டிகள்

சில‌ கட்சிக‌ளுக்கு

ச‌வ‌ப்பெட்டிக‌ள்

.
சில‌ க‌ட்சிக‌ளுக்கு

ந‌கைப்பெட்டிக‌ள்

.
முடியாத

“முடிவும்”
விடியாத‌ இர‌வுமே

ந‌ம் சுத‌ந்திர‌விழாவின்

தோர‌ண‌ங்க‌ள்

.
அந்தோ

! ர‌ண‌ங்க‌ள்!
வ‌லிக‌ள் தீர‌ட்டும்

.
வ‌ழிக‌ள் பிற‌க்க‌ட்டும்

.
வாக்குப்பெட்டிக‌ள்

தூங்குகின்ற‌ன‌

.
அவை விழிக்கும்போது

தெரியும்

அந்த‌ பெட்டிக‌ள்

ஜ‌ன‌நாய‌க‌ம் நிர‌ந்த‌ர‌மாக‌வே

தூங்கிப்போக‌

த‌யார் செய்ய‌ப்ப‌ட்ட‌தா

இல்லையா என்று

!
இருப்பினும்

இது

“முடிவுக‌ள்” அல்ல!
புதிய‌ ஆர‌ம்ப‌ங்க‌ளின்

முத‌ல் மைல் க‌ல் இது

!
===============================================

ருத்ரா

Series Navigation

ருத்ரா

ருத்ரா