மனம் உயர வழி!

This entry is part [part not set] of 42 in the series 20030615_Issue

கவியோகி வேதம்


எத்தனை கவலைகள் இருந்தாலும்

..எங்கோ என்மனம் பறக்கிறது;

எத்தனை கிளைகள் இழுத்தாலும்

..இலையோ தென்றலில் சிரிக்கிறது!

..

செடியின் மனமும் உயரேதான்;

..சிந்தைத் துடிப்பும் மேலேதான்;

துடிக்கும் துன்பம் வந்தாலும்,

..துள்ளி உயரே வருவேன்நான்!

..

உள்ளே உள்ளே சென்றால்தான்,

..உயர்ந்த குடிநீர் கிடைக்கிறது;

உள்ளே உள்ளே குடைந்தால்தான்,

..ஒளிரும் வைரம் கிடக்கிறது!

..

பள்ளம் வீழ்ந்தோம் என்றபயம்,

..பாவம் செய்தோம் எனும்புலம்பல்,

கள்ளம் இல்லா நமக்கில்லை;

..கல்லைக் கண்டா அருவிஅஞ்சும் ?

..

என்ன தடைகள் வந்தாலும்,

..என்ன முடைகள் இருந்தாலும்,

மின்னும் ‘தடையே ‘ படியாகும்;

..மேலே கோவில் -வழியாகும்.

..

எங்கோ தாழ்ந்து போனாலும்,

..எதுவோ ‘ஒன்று ‘ பார்க்கிறது;

பொங்கிக் கேள்நீ ‘அதை ‘ஒன்றி!

..பூப்போல் உன்னை நிமிர்க்கிறது!

***(கவியோகி வேதம்)
sakthia@eth.net

Series Navigation

கவியோகி வேதம்

கவியோகி வேதம்