மகிழ்ச்சியின் வலிகள்
கு முனியசாமி

—————
இளமையாய் இருப்பதைவிட
இருப்பதாய் மற்றவர்கள்
சொல்லும் போது
இன்னும் மகிழ்ச்சி.
மகனின் கடவுச் சீட்டு
தொலைந்து விட்டது.
காணவில்லை
என்று சொல்ல
காவல் நிலையம் சென்றோம்
நான் மகன்
மற்றும் மனைவி.
குடும்ப அட்டையை
மேலும் கீழும்
பார்த்துவிட்டு
எதையோ தேடுவதாய்
நினைத்து
மகளின் பெயர்
அட்டையில் இல்லயா
என்ற நோக்கில்
பாப்பா யரென்று
வினவினார் ஆய்வாளர்.
மனைவி என்றேன்
மகனின் மனைவி
என்று எண்ணி
இப்போ தெல்லாம்
மகள் மருமகள்
எல்லாம் ஒன்றுதான்
என்று சொன்னார்.
எனது மனைவி
என்று மீண்டும்
சொன்னேன்
அதிர்ச்சியில் ஆய்வாளர்.
இளமையாய்
இருக்கும் உணர்வில்
மனைவிக்கு மகிழ்ச்சி
வயதாகிவிட்ட உணர்வில்
வலி எனக்கு.
gmunis@rediffmail.co