பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் நூற்றாண்டு விழா அழைப்பிதழ்

This entry is part [part not set] of 35 in the series 20100905_Issue

மு.இளங்கோவன்அன்புடையீர்,வணக்கம்.

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியரும் குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, பரிபாடல், பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட சங்கப்பனுவல்களுக்கு உரை வரைந்த பேரறிஞருமான மேலைப்பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் அவர்களின் (05.09.1909 – 03.01.1972) நூற்றாண்டு விழா அவர் பிறந்த ஊரான மேலைப் பெருமழையில் நடைபெற உள்ளது. அனைவரும் வருகை தந்து புலவர் பெருமானின் புகழ்வாழ்க்கையை நினைவுகூர வேண்டுகிறோம்.

தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து அறிஞர்கள் வருகை தந்து உரையாற்ற உள்ளனர். நிகழ்ச்சிக்குப் பெருமழைப் பெருநிலக்கிழார் அரங்கசாமியார் அவர்கள் தலைமை தாங்கவும், ஒப்பந்தக்காரர் திரு.சி.சிவபுண்ணியம் அவர்கள் வரவேற்புரையாற்றவும், நாகைப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஏ.கே.எசு.விசயன் அவர்கள் பெருமழைப்புலவரின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்துப் புலவரின் சிறப்புகளை எடுத்துரைக்கவும் இசைந்துள்ளனர்.

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. உலகநாதன், ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் மா.கல்யாணசுந்தரம், முத்துப்பேட்டை ஒன்றியச் செயலாளர் ந.உ.சிவசாமி, மேலைப்பெருமழையின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சோ.இராசமாணிக்கம் ஆகியோர் முன்னிலையில் நூற்றாண்டுவிழா மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது.

திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.இரா. முத்துக்குமாரசாமி அவர்கள் கலந்து கொண்டு புலவர் பெருமானின் உரைச் சிறப்புகளை நினைவுகூர இசைந்துள்ளார்கள். முனைவர் மு.இளமுருகன், (தமிழ்ப்பேராசிரியர், த.உ.ம. கலைக் கல்லூரி,தஞ்சாவூர்,), முனைவர் அரங்க.சுப்பையா,(தமிழ்ப்பேராசிரியர் (பணிநிறைவு), தஞ்சாவூர்),புலவர் உதயை மு.வீரையன்,சென்னை, முனைவர் ஒப்பிலா.மதிவாணன் (இயக்குநர், பதிப்புத்துறை,சென்னைப்பல்கலைக்கழகம்)பேராசிரியர் சு.தமிழ்வேலு, (அ.வ. கல்லூரி, மன்னம்பந்தல்,மயிலாடுதுறை) முனைவர் நா.தனராசன்,(தமிழ்த்துறைத் தலைவர், திரு.வி.க.அரசு கலைக்கல்லூரி,திருவாரூர்), புலவர் நாச்சிகுளத்தார்(பெருமழைப்புலவரின் மாணவர்), திரு.நாகை எழில்கோ,(தமிழாசிரியர்,தென்னம்புலம்), முனைவர் மு.இளங்கோவன் (பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி,புதுச்சேரி),ஆகியோர் கலந்துகொண்டு பெருமழைப்புலவரின் நிலைத்த புகழை நினைவு கூர உள்ளனர்.

பெருமழைப்புலவரின் தலைமகனார் சோ.பசுபதி அவர்கள் நன்றியுரையாற்றுவார்.

இடம்: அம்மன் திருமண அரங்கம், மேலைப்பெருமழை(திருத்துறைப்பூண்டி வட்டம், திருவாரூர் மாவட்டம்)
நாள்: 05.09.2010,ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 4.00 -முதல் இரவு 7.00 மணி வரை

அனைவரும் வருக!

– விழாக்குழுவினர்

செய்தி: மு.இளங்கோவன்
புதுச்சேரி
muelangovan@gmail.com

படத்துடன் அழைப்பிதழ் காண கீழ்வரும் இணைப்பைச்சொடுக்கவும்
http://muelangovan.blogspot.com/2010/09/blog-post_02.html


முனைவர் மு.இளங்கோவன்
Dr.Mu.Elangovan
Assistant Professor of Tamil
Bharathidasan Govt.college For women
Puducherry-605 003,India
E.Mail : muelangovan@gmail.com
blog: http://muelangovan.blogspot.com
cell: +91 9442029053

Series Navigation

முனைவர் மு.இளங்கோவன்

முனைவர் மு.இளங்கோவன்