நெருடல்களற்ற சுகம்

This entry is part [part not set] of 47 in the series 20040304_Issue

தேனருவி


கொடுத்தலில் காணும் சுகம் பெறுதலில் இருப்பதில்லை
உழுது விளைவித்த நெற்குவியல் தரும் நிறைவினிர்க்கோ எல்லையில்லை
உழைத்துச் சேர்த்த பணம் நம்மோடு தங்குவதில் வியப்புமில்லை
படிப்படியாய் மலையேறி உச்சி அடைந்த சுகம் வேறு வழி தருவதில்லை
நீந்திக் கரை சேர்ந்த நிறைவுதனை விசைப்படகு அளிப்பதில்லை
ஏறிப் பர்ித்த இளநீர் தீர்க்காத தாகமில்லை
தகுதி தரும் பதவிதனில் கேள்விகட்கு இடமில்லை
மழலை பேசும் மொழிதனிலே மாசுக்கு இடமில்லை
கள்ளமில்லா புன்னகை தரும் அழகு முகத்திற்கு வேறு ஏதுமில்லை
அன்பால் அமைந்த வாழ்க்கை தரும் சுகத்திற்கு அளவு ஏதுமில்லை
நெருடல்களற்ற சுகம் தரும் நிறைவு-
அனுபவித்துப் பார்த்தாலன்றி சொல்லித் தெரிவதில்லை!
-தேனருவி
****

Series Navigation