கடிதம் – மார்ச் 3,2004

This entry is part [part not set] of 47 in the series 20040304_Issue

வரதன்


அன்புள்ள வை.கோ அவர்களுக்கு,

ஞாபகம் இருக்கும் நீங்கள் அமெரிக்காவில் உணர்ச்சி புயலாய் கர்ஜித்தது.

ஏதோ பிரளயம் நடக்கும் உங்கள் கைது என நீங்கள் நினைத்திருக்கலாம். ஆனால் நடந்தது யாவரும் அறிந்ததே. காரணம்.. ?

சும்மா தம்மாதுண்டு கை பிடித்தது போல் வந்த போதே, வீரமாத்திலகம் டப்பிங்கில் ஊளையிட்டு உலகத்தையே தாங்கள் கொண்ட தொலைக்காட்சி கொண்டு டென்ஷன் செய்து காரியத்தைச் சாதித்த போது, உங்கள் சிறைச்சாலை வாசத்திற்கு என்ன செய்தது… ?

வந்து பார்த்ததோடு சரி. அதுவும் தன் மருமகன் மறைவு உங்களுக்கு சாதகமாய் இருந்திடக் கூடாது எனும் காரிய தந்திரம்.

வாஜ்பாயி ஏதோ அந்நியர் போலும், சோனியா திராவிட வழிவந்த தலைவி போலும் சிலர் உங்களுக்கு கோவாலு என அழைத்துக் கடிதம் போடலாம். அதிலும் நீங்களே விழுந்து விழுந்து சிரித்திருக்கக் கூடிய ‘ம.தி.மு.க வும் – தி.மு.க ‘ வும் மாறி மாறி ஆள வேண்டும் என்பது.

நீங்கள் எடுத்த முடிவின் காரணங்கள் எதுவாக இருக்கும்… ?

1. உங்களின் கட்சி சார்ந்த மூத்த தலைவர்கள் டிக்கெட் கிடைக்காத காரணம் கொண்டு தி.மு.க பக்கம் தாவி விடக் கூடாது.. என்று நினைக்கிறார்கள்.

உண்மைக் காரணம்.. ?

அதற்கு முன் திரு.கருணாநிதி அடித்த விக்கெட் பார்ப்போமா.. ?

– திரு.மாறனின் மாற்றாக இன்று திரு.தயாநிதி மாறன்.

– தனக்கு மாற்றாக திரு.சடாலின் ( வேறொன்றுமில்லை.. தூயத் தமிழ் )

திமுக ஒரு கட்டுக் குடும்ப இயக்கமாகத் தொடர இவை.

இதில் ஒரே தொந்தரவு என அறியப்படுபவர் நீங்கள் மட்டுமே.

அதனால் தான் நீங்கள் உள்ளே இருந்ததை கண்டு கொள்ளவே இல்லை திமுக.

ஆனால் உங்கள் முடிவின் காரணம்.. ?

உங்கள் முடிவு திரு.கருணாநிதியை இப்போது கலவரப் படுத்தி இருக்கும்.

கிராமம் கிராமமாகப் போங்கள். தொண்டர்களை சந்தியுங்கள்.

நாளை திரு.கருணாநிதி காலத்திற்குப் பின் வரும் வெற்றிடம் உங்களால் நிச்சயமாக நிரப்ப முடியும். அதற்கு விருதுநகர் மாநாடே சாட்சி.

உலகத் தமிழர்களுக்கெல்லாம் உங்கள் மேல் மரியாதை உண்டு. உங்களை மீண்டும் மேடையில் பார்த்த போது ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

உலகத் தமிழர்களின் தலைவர் என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்பவர் போலல்லாமல், உண்மையிலேயே உங்களுக்கு அந்த தகுதியும் தரமும் உண்டு.

திமுக-வில் திரு.கருணாநிதி குடும்பத்தினாரால் வஞ்சிக்கப்பட்ட லட்சபோ லட்சம் தொண்டர்கள் உங்கள் பின் தொடர்வர்.

மக்களுக்கும், திரு.சடாலினின் கடந்த கால வரலாறு மறக்கவில்லை.

நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.

பின் என்ன திமுக இடம் உங்களால் நிரப்பப்படும்.

அப்போது, அதிமுக ஒரு வேளை காங்கிரஸீடன் கூட்டு வைத்தால், நீங்கள் பா.ஜா.கா-வுடன் கூட்டணி வைப்பீர்கள்.

அப்போது சிலர் வேண்டுமானால் ‘ கோவலு ‘ -என கவிதை பொழியலாம்.

ஆனால் நாங்கள் கண்டுக்க மாட்டோம். காரணம் முத்தமிழ் அறிஞர், கலைமாமணி திரு.கவுண்டமனி சொன்னது போல்,

‘அரசியலில் இதில்லாம் சகஜமப்பா..!!! ‘

***

Series Navigation

வரதன்

வரதன்