சுற்றுச்சூழல் அழிவால் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பவளப்பாறைகள் அழிவை எதிர்நோக்குகின்றன.

This entry is part [part not set] of 47 in the series 20040304_Issue

Great Barrier Reef Faces Major Coral Destruction


ஆஸ்திரேலியாவின் கிரேப் பாரியர் ரீஃப் என்றழைக்கப்படும் *** தன்னுடைய பவளப்பாறை மூடியை 2050ஆம் வருடத்துக்குள் இழந்துவிடும் என்றும், உலகத்தின் மிகப்பெரிய பவளப்பாறை அமைப்பான இது 2100க்குள் உலக வெப்பமாதல் காரணமாக முழுவதும் அழிந்துவிடும் என்றும் சென்ற சனிக்கிழமை அன்று வெளியான ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது.

குவீன்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் கடல் ஆராய்ச்சி மையம் உலக வனப்பாதுகாப்பு இயற்கை பாதுகாப்பு அமைப்பால் (Worldwide Fund for Nature) கேட்டுக்கொண்டபடி இந்த ஆராய்ச்சியை நடத்தியது. உலகம் வெப்பமாதல் காரணமாக இந்த பவளப்பாறை அமைப்பு முழுவதும் அழிவதை நிறுத்தமுடியாது என்றும், எந்த ஒரு முயற்சியை எடுத்தாலும் அதனால் பயன் ஏதும் இராது என்றும் இந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

‘மிகமோசமான சூழ்நிலையை இருக்கும் என்று கணக்கிட்டால், இந்த பவளப்பாறை அமைப்பு 2100ஆம் வருடத்தில் முழுவதுமாக அழிந்துவிடும். மீண்டும் இந்த இடத்தில் பவளப்பாறை அமைப்பை உருவாக்குவது இன்னும் 200 அல்லது 500 வருடங்களுக்கு முடியாத காரியம் ‘ என்றும் இந்த அறிவிப்பு தெரிவிக்கிறது.

‘Only if global average temperature change is kept to below two degrees Celsius can the Reef have any chance of recovering from the predicted damage, ‘ the report said.

இந்த பவளப்பாறை அமைப்பு உலகத்தின் மிகப்பெரிய உயிருள்ள பவளப்பாறை அமைப்பாகும். இது சுமார் 2000 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த பவளப்பாறை அமைப்பு ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு கடற்கரையில் வடக்கிருந்து தெற்காக ஓடுகிறது. ‘உலக வெப்ப அளவு இரண்டு டிகிரி செல்ஸியஸ் குறைந்தால் மட்டுமே இந்த பவளப்பாறை அமைப்பை வரப்போகும் இந்த அழிவிலிருந்து காக்க முடியும் ‘ என்று இந்த அறிக்கை கூறுகிறது.

பவளங்கள் மிகவும் குறுகிய தட்பவெப்ப வீச்சுக்குள்ளேயே வாழக்கூடியவை. ஒரு டிகிரி செல்ஸியஸ் அதிகரித்தாலும் இவற்றின் வாழ்வு அழிவை நெருங்கிவிடும்.

1988இல் தண்ணீரின் வெப்பம் ஒரு டிகிரி அதிகரித்ததால், மிகவும் மோசமான விளைவாக பவளங்கள் தங்கள் நிறங்களை இழந்தன. அதிக வெப்பமுள்ள தண்ணீர் இந்த பவளங்களிலிருந்து அல்கேவை அழித்தது. இந்த அல்கே எனக்கூறப்படும் நுண்ணுயிரிகள் இந்த பவளங்களில் வாழ்வதால்தான் பவளங்களுக்கு செந்நிறம் வருகிறது. இந்த அல்கே இதில் வாழவில்லை எனில் பவளங்கள் அழிந்து இந்த பவளப்பாறை அமைப்பு நொறுங்கிவிடும். 1998இல் சுமார் 16 சதவீத உலக பவளங்கள் அழிந்தன. அதற்குக் காரணம் சுமார் 46 சதவீத இந்தியப் பெருங்கடல் பவளங்கள் அழிந்ததினாலேயே.

அறிவியலாளர்கள் இந்த நூற்றாண்டில் 2 லிருந்து 6 டிகிரி செல்சியஸ் வரைக்கும் உலகத்தின் சராசரி தட்பவெப்பம் உயரும் என்று கணக்கிட்டு இருக்கிறார்கள்.

இந்த பவளங்கள் இந்த 2 டிகிரி செல்ஸியஸை தாங்கும் என்பதற்கான எந்தவிதமான உத்திரவாதமும் இல்லை ‘ என்று இந்த ஆஸ்திரேலிய அறிக்கை தெரிவிக்கிறது. 1998இல் சந்தித்த நிலைமையை விட மோசமான நிலைமையையே 2100இல் இந்த பவளப்பாறைகள் சந்திக்கும் எனவும், உலகளாவிய ரீதியில் பவளப்பாறைகள் அழிவு 1998ஐ விட அதிகமாக இருக்கும் எனவும் இந்த அறிக்கை கூறுகிறது.

‘இந்த பவளப்பாறை கூட்டம் திடாரென்று மறைந்துவிடாது, பவளங்கள் போய்விட்டாலும், கடல்பாசி இந்த இடத்தை ஆக்கிரமிக்கும் ‘ என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.

மிக அதிகமாக இந்தப் பகுதியில் மீன் பிடிப்பதும், கடற்கரையோரமாக இருக்கும் விவசாயப் பண்ணைகளிலிருந்து வரும் அசுத்தமும் இந்த பவளப்பாறைகளை அதிக அளவில் பாதிப்பதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது. இந்த பவளப்பாறை அழிவால், ஆஸ்திரேலிய பொருளாதாரத்துக்கு சுமார் 62 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படும் என்றும், 2020க்குள் சுமார் 12000 பேர் வேலையிழப்பார்கள் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.

—-

Series Navigation

Great Barrier Reef Faces Major Coral Destruction

Great Barrier Reef Faces Major Coral Destruction