நூல் வெளீயிடு

This entry is part [part not set] of 50 in the series 20040902_Issue

வீரமணி இளங்கோவன்


நீங்கள் வெளியிட்ட நூல்களில்
விலைபோகிறீர்கள்
உங்கள் வெளியீடு காணாத நூல்களே
விலைமதிப்பற்றவை

துரதிஷ்டவசமாய்…
உங்கள் நூல்களை எடைபோடும் தராசுகள்
உங்களையும் அமரவைத்தே
அவற்றை எடைபோடுகின்றன

நீங்கள் இலகுவானவராய் இருக்கிறபட்சத்தில்
உங்கள் கனமான நூல்களுக்கும்
இங்கே குறைந்த எடைதான்

உங்கள் நூல்களை
நீங்கள் அட்டை ஆடையால் அலங்கரிக்கிறீர்கள்
உங்கள் நூல்களோ
உங்களை நிர்வாணப்படுத்துகின்றன

இங்கே
எல்லா நிர்வாணங்களும்
வணங்கப்பட்டுவிடுவதில்லை

சிலவற்றுக்கு கைகூப்புகிறோம்
பலவற்றுக்கும் கல்லடியே மிஞ்சுகிறது

வீரமணி இளங்கோவன்

veeramanielango@hotmail.com

Series Navigation