நீயும்–நானும்
நெப்போலியன்-சிங்கப்பூர்

படகின்
எதிரெதிர் விளிம்பில்
நீயும் நானும்
கிழிபட்ட நீர்ப்பரப்பில்
மூக்காட்டி
பின் தொடரும்
விறால் குஞ்சுகள்
நீல வெளியும்
நீல வழியும்
தூரக் கோட்டில்
தொலைவாய்… தொடர்வாய்…
நீர் மேல் எழுத்தாய்
நம் கவிதைகள்
மீன்கள் மேயவா ?
மீன்கள்
மேய
வா!
————-
kavingarnepolian@yahoo.com.sg