This entry is in the series 20101128_Issue

கலாசுரன்


சோகத்தின் நீரோடைகள்
உறைந்து போகின்ற
ஆனந்தத்தின்
பனிக்காலம் ஒன்றில்…..

வேறு நினைப்புகள் புகாது
மனம் மகிழ்ந்து
ரசிக்கையில் ….

முடிவிழந்த சில
பெருமூச்சுகளின்
சோர்பு….

தன் மதிப்பை
இழந்து தொடர்கிறதோ ?
என மனம் வினவத்
தொடங்க …..

மகிழ்ச்சியின் சுடும்
முத்தங்கள்
அதை ஒருமுறைகூட
புண்படுத்தி ரசிக்கிறது ….

அதன் பின் மனதின்
ஓரங்களில் ஒதுங்கும்
காயங்களைத்
துளைத்து ….

வலிக்கச் செய்யும்
வார்த்தைகளைத்
தொகுத்துவிட்டு ….

அவைகளை
உடைத்தெறியும்
கணநேரத்து நகைப்பின்..

ஒற்றைத் தீக்கீற்று
மௌனத்தில் உருகி
வழிகிறது…..!

அதன் தொடர்ச்சியாக
மேகப்போர்வையைக்
கிழித்து உள்வரும் வெயில் …

இன்னுமொரு
வேனலைத்
துவக்கிவிட்டு…

பரிசளிப்பதென்னவோ ?
குளிரும்
பனித்துளிக்குப் பதிலாக
விழிகளின் சுடும்
வியர்வை…..!

——————-

Series Navigation