This entry is in the series 20040729_Issue

அனந்த்


நேராய் நிலையிலே நின்றபின் காலூன்றி
ஓரோர் அடியும் அசைவும் ஒருமித்துச்
சீராய் உடல்வளைத்துச் சுற்றி விரைவின்றிப்
பாரதத்தின் யோகியர்தாம் பார்த்தஉடல் சக்கிரத்துள்
சாருகின்ற சூக்குமங்கள் தம்மை எழுப்பியிந்தப்
பாரும் வெளியும் பரந்தபெரும் சக்தித்தீ
யாருள்ளும் யாங்குமுள்ள பாங்குணர்ந்து மூச்சிழுக்கப்
பேரமைதி நெஞ்சில் பிறப்பதைச் சீனத்து
வீரர்க்குப் போதித்த வெற்றிமுறை* ‘தைச்சீ ‘எனப்
பேரொன்றைப் பெற்ற(து) அறி.
—-
*தைச்சீ = Tai-chi (Supreme Force); இந்திய யோக முறையை ஒட்டிய
சீனத்து உடற்பயிற்சி முறை.

Series Navigation