உருளை சலாட்(டூசல்டார்பர்) – சுவிட்சர்லாந்து
Published July 29, 2004 • By
சுமதி
சுமதி

தேவையான பொருட்கள்
வேகவைத்த உருளைகிழங்கு – 250கிராம்
குடமிளகாய் – 1
வெள்ளரி – பாதி
பெரிய வெங்காயம் – 1
கடுகு – 1 தேக்கரண்டி
கிரீம் – 4 தேக்கரண்டி
வினிகர் – 2 தேக்கரண்டி
சர்க்கரை – 1 தேக்கரண்டி
உப்பு – சிறிது
மிளகுத்தூள் – சிறிது
செய்முறை
(1) உருளைகிழங்குகளை சிறு துண்டுகளாக்கவும்.
(2) குடமிளகாய், வெள்ளரி, வெங்காயம் – பொடியாக நறுக்கவும்
(3) மீதமுள்ள பொருட்களை ஒரு பாத்திரத்தில் இட்டு நன்கு கலக்கவும்.
(4) பின்பு எல்லாவற்றையும் சேர்ந்து கலக்கவும்.
1-2 நபர்கள் உண்ணலாம்.
—-
sumathi_radha@yahoo.com