திரைகள்

This entry is part [part not set] of 45 in the series 20110227_Issue

மீராவாணி


என் எழுத்துக்கள்
செதுக்கப் பட்டிருக்கலாம்
என சொல்லப்படுவதாகவும்
எப்போதும் சேகரிக்கப் படுவதாகவும்
செய்திகள் வந்துக்கொண்டிருக்கின்றன.
சமையங்களில் அவை ….
மன இறுக்கத்தினால் நசுக்கப்படுவதையும்
தற்கொலை செய்துக் கொள்வதையும்
யாரும் அறியா வண்ணம்
திணரும் சுவாசத்திற்குள்
புதைந்துக்கொள்ள நேருகிறது.
கடலைப் பற்றி எழுதும் போது
நான் உப்பாகியதை….,
மழையைக் கொண்டு
வருகையில் குளிரில் நடுங்கியதை..
கல்லில் அன்பை ஊற்றெடுக்க
செய்கையில் போராளியாகிப்போவதை
யாரேனும் பிரதி எடுத்து விடுவார்களோ
என பயப்பட வேண்டியுள்ளது.
இருப்பினும் என்னிடமிருந்து
உதிர்கின்ற
பெரும் மூச்சுகள்…
சேமிக்கப்படுகின்றன_
விரல்கள் அசைகையில்
கலவுப்போகும் இதயங்களுக்காகவும்
விரிகின்ற விழிகளில் துளிர்கின்ற
கண்ணீர்த்துளிகளுக்காகவும்!
-மீராவாணி

Series Navigation