தற்காலக் காதல்

This entry is part [part not set] of 37 in the series 20020310_Issue

எஸ். வைதேஹி.


சூன்யமாய் கிடக்குது உலகம்
சிந்திக்கத் திறனேயின்றி காமம் தலைக்கேறிக் கொண்டிருக்கிறது.
உடல் அனத்திக் குளிர
மனம் ஒதுங்க நினைக்கிறது.
பதறிப் பதறி செயல்கள் சாத்தியமற்று கிடக்கின்றன.
உணர்ச்சியற்ற கட்டையாய் அழும் நான்.

* * *

நரம்பை முறுக்கி உன்னுள் கொடுத்து
எதைப் பெற்றுக் கொண்டேன் ?
ரண்டிரண்டாய் தெரியும் எல்லாம் கண்களுக்கு
மயங்கி தவித்து வார்த்தை மறந்து
ஈனஸ்வரமாய் போகும்;
பாதை மறந்து தவறி நடக்கையில்
மனம்
மெல்ல
உசுப்பி
எழுப்பும்.

* * *

Series Navigation

எஸ். வைதேஹி.

எஸ். வைதேஹி.