தமிழ நம்பி அவர்கள் எழுதியுள்ள கவிதைக்கு ஓர் பின்னூட்டம்

This entry is part [part not set] of 34 in the series 20101107_Issue

நந்திதா


சொல்லக் கொதிக்கு தையா நெஞ்சம் –இதில்
சோர்ந்துடன் வீழ்ந்திட மாட்டோம்
வெல்லும் வகை ஒன்று தேர்ந்து – உலகம்
வியந்திடத் தமிழினம் புவியினில் ஓங்கும்
நஞ்சைக் கொடுத்தாலும் உண்போம்- அந்த
நமனைக் காலால் உதைத்தவன் அருளால்
நெஞ்சுக்குக் கீழிறங்காது – எம்கண்
நெருப்பினைக் கக்குதல் நானிலம் காணும்
சிங்க மனையவர் எம் வீரர் – இன்று
தேசம் இழந்தனர் ஆயினும் ஓர்நாள்
வங்கப் புலியெனப் பாய்ந்து – எமக்கு
வளமான தேசத்தை நன்றே சமைப்பார்
உயிரின் விலை தன்னை அறிவோம் – அதனை
உதறியோர் எத்தனை பேரென்றும் அறிவோம்
செயிறறு ஆட்சி புரிந்து – எங்கள்
செந்தமிழ் வீரத்தை உலகிற்குச் சொல்வோம்

என்றும் மாறா அன்புடன்
நந்திதா

Series Navigation