This entry is in the series 20101017_Issue

சித்ரா சிவக்குமார்


அன்புடையீர்

தமிழ் பண்பாட்டுக் கழகம், ஹாங்காங், அக்டோபர் 10ஆம் தேதி, இலக்கிய இன்பம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. சென்னையிலிருந்து இலக்கியச் சுடர் த. இராமலிங்கம் சிறப்புப் பேச்சாளராக வந்திருந்தார்.
நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் திருமதி சுகந்தி, வரவேற்புரையாற்றி, சிறப்பு விருந்தினரை சபையோருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். இராமலிங்கம் அவர்கள் நடைமுறை வாழ்க்கையில் இலக்கியத்தின் பயன்கள் பற்றி சிறப்பாக உரையாற்றினார். அவர் சாதாரண மக்களின் உரையாடல்களில் எப்படி இலக்கிய நயத்தைக் காணலாம் என்பதையும் திருக்குறள், கம்பராமாயணம் காட்டும் வாழ்க்கை நெறிகளை பின்பற்றினால் என்ன நன்மை என்பதையும் பல சிறு சிறு கதைகள் மூலம் விளக்கிய விதம் அனைவரது பாராட்டையும் பெற்றது. தமிழ் தாத்தா யூனூஸ் முகம்மது அவர்கள் இறுதியில் நன்றி கூறி, பேச்சாளரின் பேச்சினை பாராட்டிப் பேசி நிகழ்ச்சியினை நிறைவு செய்தார்.




Series Navigation