டார்வின் தினம்

This entry is part [part not set] of 45 in the series 20030302_Issue

மண்ணாந்தை


மரங்களில் தாவி
பின் நிலத்தில் காலூன்றி
என்றோ பிரிந்த உறவுகள்,
அவற்றுடன்
மரபணுக்களின் மூலக்கூறிழைகளால்
இணைபட்ட
அக்கணத்தில்
பிரபஞ்ச மையத்தில்
பிணைக்கும்
பொம்மலாட்ட கயிறுகள்
அறுந்தொழிந்த
அற்புதத்தில்
பிரபஞ்ச மூலையில்
சிறு நீல துகளொன்றில்
யுகங்களாய் வளர்ந்த
உயிர் விருட்ச கிளையொன்று
அதில் மலர்ந்த மலரொன்றாய் மானுடம்
மரமறியும், தனையறியும்,
பிரபஞ்ச ரகசியங்கள் அனைத்தையுமறியத்
துடிக்கும்
தன்னுணர்வு எனும் மணம்தான்
தான் பெற்ற கதையறியும்.
பீகிளின் பயணம் முதல்
மூலக்கூறதன் அமைப்பு வரை
கதையறியும் அனுபவம்
தந்த மன இதழ்களுக்கு
மானுடம் கூறும்
நன்றிக்கொரு திருநாள்
டார்வின் தினம்

மண்ணாந்தை
infidel_hindu@rediffmail.com

Series Navigation