சருகுகள்
ராம்ப்ரசாத்

ஒரு முடிவற்ற பாதையில்
சீராக பயணிக்கும் காலத்தின்
வெவ்வேறு மைல்கற்களில்
தொடங்கி விடுகிறது
நிகழ்வுகளுக்கான காரணங்கள்…
காலத்தின் பாதைகளில்
பயணிக்கும் நிகழ்வுகள்
என்றோ எப்போதோ
சந்தித்துக்கொள்ளவே செய்கின்றன…
அறியாமல்…
கானல் நீரில்
மறைந்து போகும்
தொடர்புகள் கவனிக்கப்படாமல்
கிடக்கின்றன பாதையெங்கும்
காய்ந்த சருகுகளாய்…
அனிச்சை செயலாய்
அதன்மீதே பதிகின்றன
கால்தடங்கள் எப்போதும்…
கவனிக்கப்படாத சருகுகளால்
பயணங்களே பிரதானமாகி
விடுகின்றன…
வழக்கம்போல்…