சூழ்நிலைக்கைதி

This entry is part [part not set] of 35 in the series 20100905_Issue

ஷம்மி முத்துவேல்


சிந்தனைகள் சிறகு விரித்தது
சிகரங்களை நோக்கி
சுற்றிலும் எரிமலையின்
அனல்……

காற்றின் சுழற்சியிலும்
வெம்மை …..
வெதும்பியது மனம் ….
காலத்தடத்தில் வழிதெரியா வழிபோக்கர்கள்

கவைக்குஉதவா தர்க்கங்கள்
மேம்போக்கான புரிதல்கள்
ஆழமற்ற காதல்கள் …..
உள்ளுக்குள் மோதும் முரண்கள் ….

திரும்ப எத்தனித்த போது
சிறகொடிந்து போனது ….
இப்போது நானும்
இவர்களில் ஒருத்தி ..

ஷம்மி முத்துவேல்
சின்ன தாராபுரம் .
கரூர் மாவட்டம்

Series Navigation