சுதந்திர தினம்.
பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை.

பாரதம் பார்த்த ரத்தம்
தியாகிகள் பட்ட கஷ்டம்
காந்தியம் செய்த யுத்தம்
கடைசியில் வெற்றி பெற்றோம்.
ஊனமாய் இருந்த நாடு
ஊமையாய் வாழ்ந்த மக்கள்
கல்லாக இருந்த கடவுள்
கடையில் வெற்றியின் வடிவில்.
வெள்ளையன் விளையாடிப் பார்த்தான் -பின்
விளைவு தெரியாது சிரித்தான் – நம்
வீரம் தெரிந்தபின் வேர்த்தான்
வெட்க்கமில்லாமல் தோன்றான்.
என் தாய்த்திருநாடே உனக்கு என் வணக்கம்
நீ கொடுத்தது இந்த நல்லுறக்கம்
மறவேன் என் உயிர் உள்ளவரைக்கும்
உயிர் போனாலும் இம்மண்ணிலேதான் அடக்கம்.
பா.ஸ்ரீராம்
மயிலாடுதுறை.
balageethan@rediffmail.com