சமகால உளவியல் ஆய்வுகள் குறித்து

This entry is part [part not set] of 26 in the series 20011015_Issue

ராம் மகாலிங்கத்துடன் யமுனா ராஜேந்திரன் உரையாடல்


ராம் மகாலிங்கம் அமெரிக்க மிச்சிகன் பல்கலைக் கழகத்தின் உளவியல் துறையில் துனைப்பேராசிரியராக இருக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த ராம் இரண்டாயிரமாமாண்டு பின்பகுதி மாதமொன் றில் தமிழகத்துக்குச் சென்றுவிட்டு அமெரிக்கா திரும்பும் வழியில் இலண் டனில் சில நாட்கள் தங்கியிருந்த வேளையில் ஈஸ்ட்ஹாமில் எனது அறையில் வைத்து இவ்வுரையாடல் பதிவு செய்யப்பட்டது. அறுபத்தியைந்து நிமிடங்களிலான இந்த உரையாடலில் சமகால உளவியல் ஆய்வுப் போக்குகள் வன்முறை குறித்த உளவியல் ஆய்வுகள் உயிர்க்கூற்றியிலுக்கும் உளவியலுக்கும் இருக்கிற தொடர்புகள் குழந்தைகளின் உளவியலில் பாலியல் வேறுபாடுகள் ஜாதியக் கருத்துக்களின் உருவாக்கம் ஜாதிய நீக்கம் புலம்பெயர்ந்த தமிழர்களின் உளவியல் சிக்கல்கள் போன்றவை தொடர்பான தனது ஆய்வுகள் குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதோடு பொதுவாக மனிதர்களின் சமூக வளர்ச்சிப்பயணத்தில் உளவியல் ஆய்வுகளின் பங்கு என்ன என்பதைக் குறித்தும் தனது அனுபவங்களை முன்வைக்கிறார். பெருமளவு ஆங்கிலத்திலேயே நடைபெற்ற இ

வரையாடலை உரையாடலின் லயம் கருதி அப்படியே தந்திருக்கிறேன். உச்சரிப்பு புரிந்து கொள்வதில் பிரச்சினையாக இருக்க்கூடிய இடங்களில் ஆங்கில மொழிச் சொற்களை அடைப்புக்குறிக்குள் கொடுத்திருக்கிறேன். இந்த உரையாடலை விசேஷமாக நான் திண்ணை வலைத்தளத்தில் மட்டுமே பிரசுரிக்க நினைத்தேன். வலைத்தளத்தில் பிரவேசிகக்கூடியவர்கள் சிரமமேற்கொண்டு விஷயங்களைப் புரிந்து கொள்கிற குறைந்தபட்ச விஷயப் படிப்புக் கொண்டவர்களாக இருப்பார்கள் என்பதுதான் காரணம். இவ்வரையாடலின் மொழி நடை சாதாரண வாசகனுக்கு பிரச்சினைக்குரியது என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆயினும் இயல்பான உரையாடலின் சொற்களை எதேச்சையாக மாற்ற என் மனம் இடம் தரவில்லை. உரையாடிய ராமுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளும் இச்சந்தர்ப்பத்தில் அநியாயமான கால தாமதமாக உரையாடலை எழுத்தில் கொண்டு வர நேர்ந்ததற்காக அவரிடம் பகிரங்கமாக மன்னிப்பையும் கோரிக்கொள்கிறேன் : யமுனா ராஜேந்திரன்.

யரா : ஒருமனிதனுடைய உளவியல் என்னனென்ன மாதிரியான காரணிகளால் உருவாகிறது-இன்றைய உளவியல் ஆய்வுப் போக்குகள் என்ன மாதிரியில் இருக்குது ?

ராம் : பலவிதமான முறைகள் பற்றி யோசித்திருக்கிறார்கள். பிராய்டியர்கள் ஆரம்பக் குழந்தைப்பருவதத்திலிருந்து பின் வரும் பல்வேறு கட்டங்களில் அவர்களின் அனுபவங்கள் எவ்வாறு அவர்களது நடத்தைகளைப் பாதிக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். வந்து நியுராலஜி அல்லது ப்ஸைக்கோ பேத்தாலஜி பற்றியதாக விபரீதமான மனப்போக்குகள் எவ்வாறு உருவாகுங்கிறதப் பத்திச் செல்லியிருக்காங்க. அதனடைய தொடர்ச்சியாக உள்மன ஆய்வுகள் எல்லாம் வந்தது, பெரும்பாலனவங்க இந்த ஒரு கோட்பாட்டத்தான் மனித உளவியல் பத்திப் பேசும் போது சொல்ற்ாங்க.. தற்காலத்துல பிராய்டை அடியெர்ற்றிய ஆய்வுகள் ரொம்பக் கம்மி. ஆனா வேறு வேறு முறைகள் இருக்குது.

ஓரு மனிதனுடைய நெறி பண்பாடு பர்சனாலிட்டில எப்படி சமூகக் கோட்பாடுகள் பயன்படுது அபபடிங்கற ஆய்வுகள் இருக்குது. வைகாட்ஸ்க்கி என்று ஒரு ரஸ்யன் ஸைக்காலஜிஸ்ட் இருந்தார் . அவர் ஒரு மார்க்ஸிஸ்ட். அவருடைய கோட்பாடு என்னன்னா சமூகச் சூழல் வந்து எப்படி குழந்தைகளைப் பாதிக்குது. அதிலிருந்து எப்படி அவங்க பெரியவங்க ஆகறாங்க என்கிறதப் பத்தி அவர் ஆய்வு செய்து கொண்டிருந்தார். அவருடைய சிந்தனைகள் முழுமையடைகிறதற்கு முன்பாகவே நாற்பது வயதிலேயே டி.பி.வந்து அவர் இறந்துட்டார். மிகயீல் பக்தினுடைய சமகாலத்தவர் அவர். ஸ்டாலின் பீரியட்ல அவர் போனதுக்கப்பறம் அவருடய வொர்க்ஸஜஸ் எல்லாம் எங்கயோ மறச்சு வெச்சிட்டாங்க. சமீப காலத்தலதான் அருடைய ஆய்வுகள் மொழியாக்கம் பெற்று வெளியாகிக் கொண்டிருக்குது. எப்படி ஒரு குறிப்பிட்ட சூழல் நம்ம மன உணர்ச்சீல பங்கு வகிக்குது அப்படான்னு அவர் பார்க்கறார்.

கார் ஜேன்னு ஒரு சுவிஸ் ஸைக்காலஜிஸ்ட. அவருடைய சிந்தனைகள் வந்து பெரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கு அவர் என்ன சொல்றாருன்னா : பல்வேறு பருவங்கள்ள குழந்தைகள் வள்ச்சியடைந்து ஒவ்வொரு கட்டத்துக்கும் போகும் போது புதுப்புது வளர்ச்சிகள் நமது சிந்தனைகளல்ல மாற்றத்தைக் காண்பிக்குது என்கிறது தான் அவருடைய பார்வை- உடலில இந்த வளர்ச்சிக் கட்டங்கள்ல ஏற்படற மாற்றத்தக்கும் சிந்தனையில் ஏற்படற மாற்றத்துக்கும் ஒரு இணைப்பைக் காண்பிக்கறாரு அவர். அவர் வந்து ஒரு ஸ்டரக்சுரல் ஸைக்காலஜிஸ்ட். சமூக அமைப்பும் உடலியல் ரீதியான அமைப்பும் எப்பிடி இன்டர் ஆக்ட் பண்ணுதுன்னு அவர் காண்பிக்கிறார்.

அதுக்கப்பறம் கம்ப்யூட்டர் ஸைன்ஸ் வருது. ஹியுமன் கம்ப்யூட்டர் பிரைன். ஏப்படி நாம வளர்றம் என்கிறது- எப்பிடி இன்பர்மேசன் பிராஸஸ் பன்றம் அப்பிடான்னு பார்க்க வேண்டியிருக்குது. செய்திய எப்பிடிப் புரிஞ்சிக்கிறம். புரிஞ்சிக்கறக்கு எப்பிடி பிரைன் ஸ்டரக்சர் இருக்குது -எப்பிடி சொல்லப்படகிறது- சொல்லப்படும் போது என்ன மனநிலை ரொம்ப ஸ்டரஸ்ஸா இருக்கீங்க அல்லது ரொம்ப எகஸைட்டடா இருக்ககீங்க.அதுக்குத் தகுந்தா மாதிரி பதிவாகுது-அந்தச் செய்திய தொடர்ந்து எலாப்ரேட் பண்ணுறதுக்கு என்னென்ன பிரச்சினைகள் சங்கடங்கள்- எப்பிடி அத சுலபமாக எடுக்கிறது என்கிறதப் பத்தியெல்லாம் பேசறார் அவர். ஒரு உதாரணம் வந்து ஆர்ட்டிபிஸியல் இன்டலிஜென்ஸ்- செஸ் பிளே புரகிராம்ஸ் எல்லாம் அப்பிடியானதுதான். அதாவது எப்பிடி நீங்க பாடம் சொல்லித்தர்ரீங்க. பாடத்த எபிபிடி ஆர்கனைஸ் பன்றீங்க. அதிலிருந்து எப்பிடி லேர்னிங்க பெசிலிடேட் பண்ணமுடியும் என்கறது. பெரிய அளவில இந்த மாதிரி ஆராய்ச்சிகள் இருக்குது. இதிலிருந்து எந்தெந்த விஷயங்கள் நமக்குப பிறக்கும்போதே சேர்ந்து இருக்கிற சக்திகள்- நேட்டிவிஸ்ட்ன்னு சொல்லுவாங்க- இதல வந்து மொழிகளப் பத்தின நோம் சாம்ஸ்க்கியினுடைய சிந்தனைகள் இருக்குது. பொறக்கும் போதே பல மொழிகளப் பேசற சக்தியோடதான நாம பொறக்கறோம் என்கிறார் அவர். அந்தச் சக்திகள் வெளிப்படுவதற்கு குறைந்த பட்சம் நமது சூழல் அதுல நம்ம ஈடுபாடு- அதிலிருந்து என்னென்ன விஷயங்கள் இந்நேட்(innate). அப்படான்னு பாக்கறாங்க. இதுல ஒரு சிக்கல் என்ன்ன்னா அந்த இன்னேட்டா இருக்கற எல்லாமே ஜெனடிக் அப்படின்னு வந்துரும். இது வந்து ஒரு மிஸ் கன்ஸப்சன். சாம்ஸ்க்கி சொல்ற மாதிரி பிறக்கும்போதே விஷயங்களச் செய்யமுடாயும்னா எல்லோராலேயும் எல்லாக் குழந்தைகளும் இங்கிலீஸ் பேசமுடியும். ஆனா பேச முடியலீன்னா என்ன காரணம். இதிலிருந்து சமூக வேறுபாடுகள் இருக்குதுதான- அத நியாயப்பத்துறதுக்கு இந்தக் கோட்பாடு உபயோகமாகலாம். அதாவது கவர்ன்மென்ட் செய்யக்கூடிய எந்தவிதமான முயற்சிகளும் முடியாதவங்களெ முடியறமாதிரி உருவாக்கவே முடியாது- கறுப்பர்கள் ஆசியர்கள் உடனே படிக்க முடியாதவங்க- அப்படான்னு கன்ஸர்வேடிவ் ஆகவும் இன்டர்ப்ரட் பண்ணலாம். குழந்தைகள் பிறக்கும்  போதே என்னென்ன சக்திகளோட பிற்க்கறாங்கன்னு நாங்க ஆராய்ச்சி பண்ணோம். குழந்தைகள் பொறக்கும்போது எவ்வளவு ஏர்லியா எல்லாத்தையும் தெரிஞ்சிக்கிறாங்க அப்படான்னு ஆராய்ச்சி பண்ணம். ஓரு ஆராய்ச்சீல என்ன தெரிஞ்சதுன்னா 12 மாசத்துக்குள்ள உறுதியாக எண்ணிக்கை பற்றிய சிந்தனை- ஒன்னையும் ஒன்னையும் கூட்னா ரெண்டு- ரெண்டும் ஒன்னும் முணு இந்த மாதிரி பேசிக் நியூமரேஸன் பத்த்ி அவங்களக்குத் தெரிய வந்துருது. எல்லா அரித் மெடிக் ரூல்ஸ் நாலட்ஜூம் அல்ல. ஆனா எண்ண்ிக்கை பத்திய சிந்தனை தெரியுது. பேஸிக் ஐடியா ஆப் காஸாலிடி (causality) பேஸிக் ைடியா ஆப் ஹியுமன் லவ் எல்லாம் அவங்களுக்குத் தெரியுது. அது வந்து ஒரு மிகப்பெரிய பிரேக் த்ரு.

குழந்தைகளைச் சிலபேர் ஒரு வெற்றுச் சிலேட்டு என்கிற மாதிரிப் பார்க்கறாங்க. நாங்க சமூகச் சூழலாலே எப்பிடியும்மாத்தலாம்னு நெனக்கிறாங்க. இது வந்து ஒரு எக்ஸ்ட்ரீம் வெர்ஸன் ஆப் ரேடிகலிஸம். ஒரு வகையில ஸ்டாலினிஸம். ஸ்டாலின் அப்படித்தான் சொன்னாரு. வேறு வகையில சொன்னா சோஷியல் இன்புட் இல்லாம பயாலஜி மட்டும் இருகக்கப்போறதில்ல. இன்பார்ன(ைெ-டிழசெ. பயாலஜிகள் டிபரென்ஸ்ஸையும் வலியுறுத்தறது- அது ஒரு வகையில் சில மக்களை அப்பிடியே மாற்றமில்லாம வச்சிருக்கச் செய்யும். ஸைக்காலஜிங்கிறது ஒரு மோட் ஆப் டிராவலிங் -ஏ லாங் வே இன் டிபரண்ட் டைரக்ஸன்ஸ். இப்ப கல்ச்சர் பத்தி நிறயப் பேசப்படுது. போஸ்ட் மாடர்னிசம் கல்ச்சர் பிராப்ளமெடிக் என்கிறது. கல்ச்சர் ஈஸ் நாட் ஏன் என்டிடி. கல்ச்சருங்கறது இன்டர் ஏக்சன்லதா இருக்குது. அது நாள் ஆக ஆக மாறிக்கிட்டேதான் இருக்குது. பார்ட்டிசிபேர்ட் பண்றதன் மூலம் அது மாறி உங்களையும் மாத்தும். இது மாதிரியெல்லாம் கோட்பாடுகள் வருது. கல்ச்சரும் சமூகமும் ஒரு மனிதன எந்த அளவு பாதிக்குது. அதுனுடய எபக்ட் நம்மடைய எமோஷனல் டெவலப்மென்ட்ல என்ன மாதிரி இருக்குது. இதையெல்லாம் எப்பிடி மாத்தறது—.

யுரா : நீங்க வைகாட்ஸ்க்கியப்பத்திச் சொன்னீங்க. எரிக் பிராம் மாதிரி இருக்கிறவங்க மார்க்சியத்தினுடைய பொருளியல் சார்ந்த சமூகப் பரிமானத்தையும் பிராய்டியத்தினுடைய பாலியல்பு சார்ந்த பரிமானத்தையும் எடுத்துக் கொண்டு மனிதனது உளவியல விளக்கறதுக்காக இரண்டுக்கும் இடையிலான இணைவ முயற்சி பண்ணியிருக்காங்க. இன்னும் இப்ப சமகாலத்தில லக்கான் மாதிரியானவங்க ஸஸூரினுடைய மொழி ஆய்வுகள கருவியாக எடுத்துக் கொண்டு மனிதனுடைய உளவியல் அடுக்குகளினுடைய சப்டிலிட்டிய வெளிக் கொண்டுவர அந்த ஆய்வு முறையப் பயனபடுத்தறாங்க. இம்மாதிரியான வளர்ச்சிகள நீங்க என்ன மாதிரிப் பார்க்கறீங்க ?

ராம் : இம்மாதரியான விஷயங்கள் கல்ச்சுரல் ஸ்டடாஸ் கிரிட்டிகல் தியரி அப்பறம் ஆந்த்ரபாலஜி போன்ற துறைகள்ளதான் அதிகமா பேசப்படுது. ஸைக்காலஜி பீல்டுல இவங்களப் பத்தி யாரும் தியரைஸ் பண்றதெல்லாம் கிடையாது.அனலிடிகல் ஸைக்காலஜிஸ்ட் என்னன்ன்னா ஸைக்காலஜி ஸயன்டிபிக்கா இருக்கணும்- எம்பைரிக்கலா இருக்கணும்னு சொல்றாங்க. இதயெல்லாம் டெஸ்ட் பண்ணி டூப்ளிகேட் பண்ணமுடியுமா அப்படான்னு கேட்கறாங்க. இந்தத் தியரியெல்லாம் ஸப்டில்லா இருக்கறப்ப-லகானயோ எரிக் பிராமயோ படிச்சிட்டு- இவங்க நேரேட்டிவ்ஸ்ஸையல்லாம் படிச்சிட்டு மக்களுடைய வாழ்ககைய டெக்ஸ் பேஸ் ரிசர்ச் பண்றாங்கிள்ளயா அவங்கதான் யூஸ் பண்றாங்க. டிஸ்ஸாடர்ஸலயும்  மற்ற விஷயங்களையும் டால் பண்றதக்கு இதனுடைய லிமிட்டேசன்ஸ் எல்லாம் ரொம்பக் கம்மி.

யரா   எம்பைரிஸிஸத்த நீங்க ஸயன்டிபிக் அப்படான்னு சொல்றீங்க இல்லையா- அதனுடைய ப்ரீ கன்சீவ்டு லிமிட்டேசனோட எப்படி அத நாம ஸயன்டிபிக் அப்படான்னு சொல்லமுடியும் ? சில விஷயங்கள ரிசர்ச் பண்றதக்கு ஒரு மெதடாலஜி வேணும். ஒரு கொஸ்ஸனேர்(questionaire) என்று வப்பமே- கொஸ்ஸனேரிலிருந்த நாம சில முடிவுகளுக்க வந்து சேரலாம். ஆனா அந்தக் கொஸ்ஸனேருக்கும் கேள்விகள ச்சூஸ் பண்ணும் போது இந்தப் ப்ரீ கன்சப்ஸன்ஸ் இருக்கத்தானெ செய்யுது – இதுவும் ஐடியலாஜிகலி மோட்டிவேட்டடா இருக்குந்தானே-

ராம் : அதையெல்லாம் ஸைக்காலஜிஸ்ட் ஒப்பபக் கொள்றாங்க. ஏன்னா நீங்க போறப்பவே ஒரு தியரி டெஸ்ட் பண்ணத்தான் போறீங்க. அதத்தான் டெஸ்ட் பண்னேன் அது வொர்க் அவுட் ஆகல அப்படான்னு ஒத்துக் கொளளக்கூடிய திராணி இருக்கணும். அதே சமயததுதல இந்தக் கல்ச்சுரல் ஸ்டடாஸூக்கும் ஸைக்காலஜிக்கும் இடையிலான ஒரு ஆரோக்கியமான ரிலேஷன்ஸிப்பும் இல்ல. ஸைக்காலஜிஸ்ட் வந்து நிறைய சோதனைகள் நடத்தி அவங்க வேற மெத்தாட்ஸ் யூஸ் பண்றாங்க. கல்ச்சரல் ஸ்டடாஸ் அப்ரோச் எல்லாமே ரிடக்ஸனிஸ்ட் அப்படான்னு சொல்லி அவங்க ரிஜக்ட் பண்ணீர்ராங்க. அவங்க வந்து ஒரு ஸ்டடிய ஒருத்தர்தான் செய்ய முடியும். அதே ஸ்டடிய இன்னொருத்தர் கூட ரிபீட் பண்ணமுடியாது அப்படாங்கறாங்க.

யரா : இப்ப என்னென்னா இன்டர் டிசிப்ளினரி ஸட்டிடாசினுடைய தேவைகள் அதிகரிச்சுட்டு வருது. இப்ப ஒரு துறையில நடக்கிற ஒரு விஷயத்த புரிஞ்சுகொள்றதுக்கு அந்தத் துறை சார்ந்து பிற துறைகள்ல நடக்கிற விஷயங்களைப் பத்தித் தெரிந்சு கொள்ள வேண்டியிருக்குது. உதாரணமா நிங்க சொன்னீங்க- ஒருத்தருடைய உளவியல் பிராய்டியன் அடிப்படையில ரிப்லக்சிவா வர்ற விஷயங்கள வச்ச டிபைன் பண்ணலாம். இன்னொரு வகையில எக்கனாமிக் ஆஸ்பெக்ட வச்சு டிபைன் பண்ணலாம். இப்ப இந்த ஹியுமன் ஜெனோம் புராஜெக்ட் வந்த பிறகு ஜெனடிக்கலா நாம பாத்தா சரி மனிசன நாங்க டிபைன் பண்ணலாம் என்கிறாங்க- ஆகவே நாங்க இப்ப எந்தத்துறை ஆய்வுகள எடுத்துட்டாலும் நாங்க பிலாஸபி உளவியல் ஜெனடிக்ஸ் அப்படான்னு இன்டர்டிசிப்ளினரியாத் தெரிஞ்சுகொள்ள வேண்டியிலுக்கு.இந்தச் சூழலல்ல ஒரு துறையில இருக்கிறவங்க இன்னொரு துறைக்காரர ரிடக்ஸனிஸ்ட்னு சொல்றது மனிதமுழுமையப் பத்திப் புரிஞ்சு கொள்ற முயற்சியில ஒரு தடையா இருக்கும் போல இருக்குது—

ராம் : நீங்க சொல்றது முக்கியமான விஷயம3 இது ஒரு உலகளாவிய பிர்ச்சினையா இருக்குது. இமிக்ரேஷன் அப்படான்னா இன்டர் டிசிப்ளினரியாத்தான் புரிஞ்சு கொள்ள முடியும். கல்சுரல் ஹிஸ்ட்ரி போஸ்ட் கலோனியல் தியரி போன்ற விஷயங்களும் தெரியனும். ட்ூரோமாவ என்ன மாதிரி சுச்சுவேஷன்ல வச்சுபுரிஞ்சுக்கிறதுன்னு தெரியணும3 இது வந்து ஒரு பெரிய காம்ப்ளக்ஸ் இஸ்யூ. இந்த வகையில இன்டர் டிசிப்ளினரி அப்ரோச்சங்கறது கட்டாயம் தேவைப்படுது. அது மாதிரிப் பன்றவங்களுக்க நிறைய ரிஸ்க்கும் இருக்குது. உங்கள ஒரு பீல்டல எஸ்ட்டாப்ளிஸ் பண்ணீட்டுத்தான் இன்டர் டிசிப்ளினரி அப்ரோச் பண்ணணுங்கற மாதிரி இருக்குது. இன்டர் டிசிப்ளினரி வேணுங்கற கருத்து வந்து இப்ப எல்லாராலுயம் ஒருமிச்சு பேசப்பட்டு வருது. ஸைக்காலஜிஸ்ட் சோசியாலஜிஸ்ட் ஹிஸ்ட்டாரியன்ஸ் இவங்கள்லாம் ஒத்துழைச்சு ஒரு பிரச்சனயப் படிக்கனும் அப்படாங்கறது உணரப்பட்டு வருது.நெருங்கி வற்றரதுக்கு நிறையத் தடைகள் இருக்குது. காரணம் அவங்கவங்க தத்தமது துறை சார்ந்து லிமிடேஷனடசோட டெரிடோரியலாத்தான் செயல்படறாங்க. இன்னும் அடுத்த பத்தாண்டுகள்ல இன்டர் டிசிப்ளினரி அப்ரோச்தான் பெரிய டாபிக்கா இருக்கப்போகுது.

யுரா : நோம் சாம்ஸ்க்கி வந்த ஒரு மேத்தமடிகல் கான்பரன்ஸ்ல போய் பேசப்போன விஷயம் கேள்விப்பட்டன். சோம்ஸ்க்கி லிங்விஸ்ட்டா இருந்தாலும் கூட தான் பேசப் போற விஷயத்தில நாலட்க இருந்ததனால அவர் அங்கிகரிக்கப்பட்டார்ன்னு கேள்விப்பட்டன். இது ரொம்ப முக்கியமுன்னு படுது. கொஞ்ச நாளக்கி முன்னாடி லண்டனிலிருந்து வருகிற இன்டிபெண்டண்ட தினசரிப்பத்திரிக்கையில ஒரு சின்ன கட்டங்கட்டுன செய்தி ஒன்னு பார்த்தன். சாம்ஸ்க்கி இதுவரையிலுமான தன்னுடைய லிங்விஸ்டிக் வொர்க்க வந்து டிஸ்கார்ட் பண்ணீட்டாருங்கறததான் அந்தச் செய்தி. இன்டர்நெட்ல ரொம்ப விவரம் தேடிப் பார்த்தேன். ரொம்ப நண்பர்கள் கிட்ட கேட்டுப்பாரத்தேன் அதக் கன்பார்ம் பண்ணமுடியல. ஆனா அவருடைய லிங்கவிஸ்டிக் வொர்க்குக்கும் அவருடைய பொலிடிகல் வொர்க்குக்கும் எந்தவிதமான இணக்கமும் இல்லைங்கறதும் எனக்குள்ள உறுத்திக்கிட்டே இருக்குது–

ராம் : நீங்க சொல்ற லிங் விஸ்டிக் மற்றது அரசியல் தொடர்பா அவர்கிட்ட இருக்கிற கோட்பாட்டு அளவலான முரண்பாட்ட அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார். மேனுபாக்சரிங் கன்ஸன்ட் வீடாயோவில அவர் அதச் சொல்லியிருக்கிறார்.

யரா : ஜெனடிக்கல் ரிசர்ச் வந்து உளவியல் ஆய்வுகள எப்படிப் பாதிக்கும்னு நினைக்கிறீங்க. ஏன்னா அந்த ஆய்வுகள் இப்ப மனுஷனையே உருவர்க்குகிற முயற்சிகள்ல இருக்குது- ஆடு குளோனிங்-மனிசனுடைய அவயவங்கள் மற்றது இதயம் குளோனிங் பன்றது அதுக்கப்பறம் இப்ப மனிசனையே குளோனிங் பன்ற ரிசர்ச் எல்லாம் நடந்துகொண்டிருக்குது—

ராம் : ஜெனடிக்ஸ நான் வந்து எம்பஸைஸ் பண்றதில்ல. ஆனா ஜெனடிக்ஸ் பத்தி பீப்பிள் என்ன பலீவ் பண்றாங்கன்னு சொல்லலாம். ஜெனடிக்ஸ் பத்தின ரிர்போரட்டெல்லாம் பாத்தீங்கன்னா ரொம்ப கேசுவலா ரிப்போர்ட் பணணியிருப்பாங்க. இப் யு ஸே சம்திங் ஈஸ் ஜெனடிக் இட் டெஸ்ஸின்ட் மீன் இட் கேனாட் பீ சேஞ்ச்டு. ஒரு ஜெனிஸிஸ்ட்கிட்ட கேட்டாங்கன்னா ஜீன்ஸ் என்விரான்மென்ட் அப்படாங்கற டைகாட்டமியே பால்ஸ் அப்படான்னு சொல்லுவாங்க. சூழலும் ஜீன்சும் சேர்ந்துதான் இருக்குது. ஜீன்ஸ் வந்து வாக்குவம்ல(vaccum) இருந்து வரல. அதனால அந்த இன்டராக்ஸன் கான்ஸ்டன்ட்டா நடந்து கொண்டுதான் இருக்குது.

யரா : இந்தக் கேள்வி என்க்கேன் முக்கியமா படுதுன்னு பார்தீங்கன்னா- இப்ப நியூ நாஸிஸ் வந்து இனநிற வித்தியாசம் இயற்கையிலயே இருக்குது .அதனால அத மாத்த முடியாது என்கிறாங்க. இதயே இந்தியச் சூழல்ல பாத்தீங்கன்னா- பிராமின் நான் பிராமின்- தலித் நான் தலித்- பிராமணணன் திருந்தவே மாட்டான்னு பெரியாரிஸ்ட்டுகள் மட்டுமல்ல மார்க்ஸிஸ்ட்டுகளும் கூட சொல்லக் கேட்டிருக்கிறன்  இது ஒரு வகை பயலாஜிகல் டிட்டர்மினிசம்- ஒரு வகை ஜெனடிக் பன்டமென்டலிசம் என்று தோணுகிறது. இது மாதிரி தலித் வாழ்நிலையக்கூட பயலாஜிகல் டிட்டர்மினிசத்த வச்சு பிராமணன் அவனுடைய ஒடுக்குமுறய டிபண்ட் பண்ணலாம்..

ராம் : இது ஒரு முக்கியமான கேள்வி .நீங்க சொல்றது சரி. ஏன்னா ஜெனட்டிக்கல் ரிசர்ச்சினுடைய ஏர்லி ஆரிஜன்ஸ பார்த்தீங்கன்னா எவ்ஜனிஸ்(Eugenics) மூவ்மென்ட்டல்லாம் அதனோட லிங்க பண்ணியிருக்கும். அந்த மூவ்மென்ட்ல இருந்தவங்க எல்லாம் ரேசியல் டிஸ்பாரிட்டிய ஜஸ்டிபை பன்றதுக்கு இத யூஸ் பண்ணியிருக்காங்க. அதனால ஜினோம் புராஜக்ட் பத்தியெல்லாம் கன்ஸர்ன்டு பயாலஜிஸ்ட்டுகளெல்லாம் இருக்காங்க. டாமினன்ட் குரூப்சோட கேரகட் ரிஸ்டிக்ச இத வச்சு ஜஸ்டிபை பண்ணலாம். அதே மாதிரி சபார்டினேட் குரூப்சும் தங்க நிலையை இத வச்சு டிபைன் பண்ணலாம். முதல்ல அடையாளத்துக்கு இரத்தம் ஒரு மெட்டாபரா இருந்தது.. அதே இப்ப ஜெனடிக்சா மாறிடும். ஜெனடிக் பொட்டன்சியல் என்கிறது.-இட் ஈஸ் எ பராஸஸ். உங்ககிட்ட இது இருக்கு இது இல்ல அப்பிடாங்கற மாதிரி இல்ல. இட்டாஸ் கான்ஸ்டன்ட்லி சேஞ்ச்சிங் ஜீன் அன்ட் எனடவிரான்மன்டல் இன்டர்ஏக்சன். ஜெனடிக்ச வந்து தபபான முறையில ஹேண்டில் பன்றதினால எக்சிஸ்டிங் ரிலேசன்சிப்ஸ் எல்லாம் பிரச்சினைக்கு உளளாகுது. ஜேனடிக்ஸங்கிறத ஸயின்டிஸ்ட் எப்படிச் சொல்றாங்க-இத மக்கள் எப்பிடிப் புரிங்சிக்கிறாங்க-இதுக்கான இடைவெளி நிறய இருக்கிறது. அப்பறம் ஐடியாலஜி. இந்த பைன்டிங்ஸ்வந்து சப் ஆர்டினேட் குரூப்பும் யூஸ் பணணலாம். டாமினன்ட் குரூப்பும் யூஸ் பண்ணலாம். அடுத்தது ரிப்போர்ட்டிங். இத வந்து சரியான ரிப்போரட் பணணாம இருககாங்க.வெள்ளை கறுப்பினத்துக்கிடையில ரிசோர்சஸ் இடைவெளி நிறைய இருக்கு. கறுப்புமக்கள் வந்து கூட என்விரான்மென்டலிஸ்ட்டுகளாக இருக்கிறதும் ஒர காரணம். ஆகவே எப்படி கண்டுபிடிப்புகள ரிப்போரட் பண்றாங்க எக்ஸ்பர்ட்டுங்க என்ன சொல்றாங்க-மக்கள் இதச் சரியா புரிஞ்சிக்கிறாஙகளா. இத எக்சிஸ்டிங் சிஸ்டத்த பாதுகாக்க பயன்படத்தறாங்களா. சமூக மாற்றத்துக்குப் பயன்படுத்தறாங்களா என்கிறதையெல்ாம் நாங்க பாக்கவேணும். நாங்க இதையெல்லாம் தியரைஸ் பண்ணிக் கொள்ள வேணும். எந்த ஒரு ஜீனும் கான்டக்ஸ்ட் இல்லாம தனித்து இருக்கவே முடியாது. இந்த டிபேட்டையயெலலாம் தாண்டி நாம ஹியுமன் டிரெடிசனப்பத்தி யோசிக்கனும். அப்பதான் ஹியுமன் ஜெனோம் புரொஜக்ட் எல்லாம் வருது. நாம இதையலெ¢லாம் தியரைஸ் பண்ணாம விட்டமுன்னு வச்சுக்குங்க இட்வில் பி இன் எ ராங் பீப்பிள்ஸ் ஹேன்ட்.

யரா: இன்னொன்று இப்ப வந்து செக்ஸ் வந்து நாம பேசிக் இன்ஸ்டிங்க்ட என்று சொல்றம். இப்ப வந்து அரசியல் உரையாடல்கள்ல வன்முறை வந்து ஒரு அடிப்படையான இடம் வகிக்குது. வுரலாறு வன்முறையினாலதான் கட்டப்படுது என்று சொல்லப்படுது-நிறைய புரட்சிகர அரசியல் இயக்கங்கள்ல இத நியாயப்படுத்துது- ஆணுக்கும் பெண்ணுக்குமான இணைவிழைச்சு ஒரு முக்கியமான அம்சமாக இருக்கிறமாதிரி- சமூகமாற்றத்தில் அதிகாரத்தைத் தக்கவைக்கிறதில வன்முறைங்கறது ஒரு அடிப்படை உணர்ச்சி என்கிற மாதிரி விவாதங்கள் முன்வைக்கப்படுது. இன்னும் வன்முறை சார்ந்த சாகச உணர்ச்சி மனிதுனுடைய இயல்பகளில் ஒன்று என்கிற மாதிரியும் சொல்லப்படுது. ஆகவே வன்முறை வந்து மனிசனுக்கு நேச்சுரலி இன்ஹெரிட்டட்ன்னு நினக்கிறீங்களா ?

ராம் : எவல்யூஸனரி கைகாலஜிஸ்ட் வந்து இத சம்பந்தமா நிறைய ஸ்டடி பண்ணியிருக்காங்க. அவங்க வந்து அக்ரசன்(aggression) வந்து ஒனனும் மாற்ற முடியாததோ குறைக்க முடியாததோ அப்பிடான்னு நினைக்கயில்ல. நான்-அக்ரசிவ் சொஸைட்டாஸ் சம்பந்தமான ஸ்டடாசும் இருக்குது. நாங்க் வந்து நேச்சர வந்து ஒரு கன்வீனியன்டான லேபிளா யூஸ் பண்றம். நம்முடைய நடவடிக்கைக்கைக மேல நமககு எந்த கன்ட்ரொலும் இல்ல என்கிற மாதிரியான ஒரு அவதானிப்பு இருக்கு. அக்ரசனுக்கு பல காரணங்கள் இருக்குது. ஓன்று ஸ்டிரஸ் வரலாம்.அத ஒரு டெக் னிக்கா பாவிக்கலாம்3. இதயெல்லாத்தையும் இன்டர்வின் பண்ணலாம். மெடிகேசன் மூலம் செய்யலாம். கவுன்சலிங் மூலம் செய்யலாம். இன்டர் பர்ஸனல் லெவல்ல குடும்பங்கள்ல டேட்டிங்ல வன்முறை இருக்கிறதுக்கு பல தாக்கங்கள் இருக்குங்கறதுக்கு எவடேன்ஸஸ் இருக்குது. வன்முறை வந்து ஒரு கோட்பாடுன்னு உள்வாங்கிட்டாங்கன்னா அதத்தா பாவிப்பீங்க. இன்னும் வன்முறைக்கு உள்ளாகறவரும் இந்தக் கோட்பாட்ட உள்வாஙகீட்டாருன்னாஅவரும் அப்படித்தான் நம்புவாரு. இந்தச் சூழல்ல வளர்ற குழந்தைக இந்த விஷயங்களை ஐடியலைஸ் பண்ணிக்கும். மாரல் பிரின்ஸ்பிளாகவும் எடுத்துக்கும். இப்படி ஒரு நச்சு வளையாமா இந்தக் கோட்பாடு சுத்தீட்டு இருக்குது. ஆகவே ஜனநாயக ரீதயா நாம முரண்பாடுகளைத்தீரத்துக் கொள்ளவோ அல்லது வாதிட்டு தீர்த்  க் கொள்வதற்கான ஒரு கல்ச்சர உருவாக்கிறதறதுலதான் இப்ப ஸைக்காலஜிஸ்ட்டுக அக்கறை செலுத்தறாங்க.உள்குடும்ப ஜனநாயகம்னு இதச் சொல்லாம். பேசித் தீர்வு காண்றதுக்கான காலாச்சாரம் உருவாக்கற படசத்த்ில வயலன்ஸ் ஒரு பிர்ச்சனயா இருக்காது.

யரா: வயலன்ஸ் சம்பந்தமான இந்த அரசியல் உரையாடலப் பாக்கும் போது பெனான் வந்து ஸெல்ப் டினயல் (self denial) வன்முறைக்கான ஒரு காரணம்னு சொல்றார். ஏப்ப அல்ஜீரியன்னு ஒரு அடையாளம் எதிரியினால கட்டமைக்கப்பட்டுட்டதுன்னா இயல்பாக பிரெஞ்சு அடையாளத்தக்  கட்டமைச்சுக்கிறவன் அல்ஜீரியன பயாலிஜிகல்ா பிசிக்கலா பொலிடிக்கலா அவங்க பிரசன்ஸஸ டினை பன்றான். இந்த செல்ப் டினயல்க்கு எதிராதான் தவிர்க்க முடியாத உளவியல் சாரந்த் உடல் சார்ந்த வன்முறை வருதுங்கறார் பெனான்..

ராம் : இது வந்து ஒரு வகையான இன்டர்பிரடேஷன். இப்ப பாத்தீங்கன்னா மல்ட்டிபிள் ஐடன்டிட்டி என்கறது ஒரு முக்கியமான டாபிக்ககா இருக்குது. போஸ்ட் கலோனியல் ஸ்டிடாஸ்ல பாத்தம்னா திணிக்கப்பட்ட ஐடன்டிடி வயலன்க்கு கொண்டு போற பிரச்சன பேசப்படுது. அதற்கான சாத்தியம் நிறைய இருக்கு. இன்னும் இப்படியான வயலன்ஸ் மூலம் தங்களுடைய ஏஜன்சிய எஸ்டாபிளிஸ் பண்ணிருக்காங்க. சக்ஸஸ்புல்லான சிலர் ரெண்டு ஐடன்டியையும் பிரச்சினையில்ல்ாம கடந்து போறதுனால எந்த ஐடன்டிடியும் இல்லாம இருக்காங்க. இடைப்பட்ட   நிலை என்னென்னா இப்படிப்பட்ட திணிக்கப்பட்ட அடையாளஙகள்.வந்து ஒரு ஐடண்டிடிகிரைசிஸ்ஸ உருவாக்குவது. ஐடன்டிடி கிரைஸிஸ்ஸ புரிஞ்சிட்டு அவனுடைய சைக்கலாஜிகல் டெவலபமென்ட்டையும் கனக்ட் பண்ணிப் பார்க்கவேணும். இந்த மாதிரி சோசலாஜிகல் ஸ்டடாஸ்தான் இருக்குது. சைக்கலாஜிகல் ஸடடாஸ் எதுவும் வரல்ல.

யரா : இந்த வயலன்ஸ் சம்பந்தமான விஷயங்கள ஸடடி பன்றது ஒரு பக்கம். ஆனா விரும்பறமோ விரும்பல்லயோ வன்முறை இருக்குது. வன்முறை தங்க மேல திணிக்கப்படறதால அதுக்கு எதிரா வ்னமுறை பாவிக்க வேண்டியிருக்கிற ஓரு பிரச்சின இருக்குது. ஓரு குறிப்பிட்ட கட்டம் வரைக்கும் அரசியல்ரீதியான வன்முறைய வாழ்முறையா ஏற்றுக்கொண்ட்டு ஓரு கட்டத்துக்குப் பின்னாடி சுமுகமான ஒரு காலத்தில வன்முறை உண்ர்வில்லாமவாழுமுடியும்கறது அரிசயல் வன்முறை சம்பந்தமான விவாதங்கள்ல ஒரு அம்சம். ோவியத் யூனியன் அனுபவத்திலிருந்து பின் புரட்சிகர சமூகங்கள் வரை இந்த விவாதம் முன்வைக்கப்படுகிறது. இப்படியான வன்முறை தொடர்ந்து உளவியல்ல ஏற்படுத்தற தாக்கம் சம்பந்தமான ஆய்வுகள் இருக்கா ?

ராம் : இது வரைக்கும் சைக்காலஜியில இது சம்பந்தமான ஸடடாஸ் இல்ல. ஆனா ஒரு வன்முறைச் சூழல்ல அந்தக் கலாச்சாரததுல வாழ்ந்து அதனுடைய கோட்பாடுகள் அதற்கென்றிருக்கிற மாரல் பிரின்சிபிளுக்கள்ள இருந்த ஒருத்தர் அதிலிருந்து மீறி வருவது ரொமப கஸ்டம். அந்தக் கலாச்சாரத்துக்கள்ளதான் நீங்க சோசலைஸ் பண்ணி ஆகனும். அந்த இயக்கங்கள்ல்ல ஜனநாயக ரீதியான கல்ச்சர் இருக்கா உள்ஜனநாயகம் இருக்கா இரண்டு இன்டலக்சுவல்ஸ் வந்து என்ன மாதிரி கம்யூனிகேட் பண்றாங்க என்கிற இதையயெல் லாம் பொறுத்துத்தான் மாற்றம்  சாத்தியமாஎனகற விஷயத்தச்சொல்லமுடியும்.பாலஸ்தீன இயக்கத்த எடுத்துக்கங்க அதில பொலிடிகல் விங் இருக்.இன்னொன்னு பைட் பண்ணுது.இந்த மாதிரியான கம்யூனிகேசன் உள்ள ஒர சூழல வந்து உருவாக்கியிருக்கனும். இதுவந்து முக்கியம்.சிஸ்டமெடிக்கா இது பற்றி எந்த விதமான ஸ்டடாசும் இல்ல. ஹிஸ்ட்டாரியன்சும் ஸைக்காலஜிஸ்ட்டும் சேர்ந்து இது சமபந்தமா ஆய்வுகள் செய்யவேணும்.

யுரா: இலக்கியத்கும் உளவியலுக்குமான உறவு பத்தி கொஞ்சம் பார்க்கலாம். தாஸ்தயாவ்ஸ் கியினுடைய படைப்புகள எடுத்துட்டம்னாஅவருடைய பாத்திரப்படைப்புக்கள் எல்லாமே உளவில் ரீதியில்தான் டெவலப் அகியிருக்காங்க. அவங்க நடவடிக்கைகள் மேல பெரும்பாலான பாத்திரங்களுக்கு தீர்மானகரமான எந்த விதமான பிடிப்பும் அவருடைய பாத்திரங்களுக்கு இருக்கிறதில்ல. கரமசோவ் பிரதர்ஸ் எடுத்துட்டாலும் சரி கிரைம் அன்ட் பன்ிஸ்மென்ட எடுத்துட்டாலும சரி அவர்கள் இப்படித்தான் இயங்குவாங்கன்னு நாங்க எந்தக் காரெக்டரையுமே பிரடிக்ட் பண்ணமுடியாது. இப்பிடி இலக்கியம் வந்து மனித உளவியலப் புரிந்து கொள்கிறதுல எப்பிடி உதவியிருககிறதுன்னு உங்களுடைய ஆங்கில தமிழ் இலக்கிய அனுபவத்திலிருந்து சொல்லமுடியுமா ?

ராம்: பிராய்டானுடைய ஆயவுகள்ல இல்க்கியத்தினுடைய தாக்கம் நிறைய இருக்கு. தாஸ்தயாவ்ஸ்க்கியப்பத்தி அவர் கோட் பன்றார். அது சில இன்டர்பரடேஷன்ஸ்தான் கெடக்குமேயொழிய. ஸைக்காலஜி ஆஸ் ஏ டிசிப்ளின் அதுக்கென்று தனி டிசிப்ளினும் இஸ்யூவும் இருக்கிறது. இருபதாம் நுாற்றாண்டுனுடைய ஆரம்பத் தில இலக்கியம் நிறைய பாதிப்பகள ஏற்படுத்த்ிருக்கு. இப்ப இன்டர்பிரடிவ் ஸடடாஸ்னு ஒரு பகுதி இருக்கு.இதுல ஹியுமன் ஆக்சன் என்று நிறையப் படிக்கிறாங்க. இன்டர்பரடிவ் ஸ்டடாஸ்ல ப்ராங்கல்னு ஒருத்தர் இருக்காரு. ஜேரோம் ப்ருனர் இருக்காரு. இவங்க ச்சூஸ் பன்ற ரைட்டர்ஸ் வந்து தஸ்தாயவ்ஸ்கில இருந்து காப்கா டோனி மோரிசன் வரைக்கும்இவங்க எடுத்துட்டு பேசறாங்க.ஆட்டோபயகிராப் மெமரின்னு ஒரு புது துறையே வந்திருக்கு. அதுல முக்கியமான இன்ட்ரஸ்டிங்கான வொர்க் வந்து எப்பிடி ஸ்மல்ல(smell) வச்சு வாழ்க்கையினுடைய பல நினைவுகள் நமக்கு வருது அப்படான்னு பார்க்கறாங்க.இப்படி லிட்டரேச்சருக்கும் சைக்கலாஜிக்கும் இடையில ஒரு ஆரோக்கியமான தொடர்பு வந்திருக்கு. தமிழ்ல நகுலன் லாச.ரா புதமைப்பித்தன் போன்றவங்க ஸ்ட்ரீம் ஆப் கான்ஷியஸ்னஸ் என்கிற அளவ்ல எழதியீருக்காங்க. தாஸ்தயாவ்ஸ்க்கி மாதிரி எழுத முயற்சிகள் இருக்கு. உளவியல் சம்பந்தமான டெக்ஸ்டுகளே இன்னும் மொழிபெயர்க்க்ப்பட்டு அறீமுகப்படுத்தப்படாத சூழல்ல உளவியலினுடைய கோட்பாட்டுத்தாக்கத்துக்கு இன்ஸ்டிட்யூஸனல் ச்ப்போரட் இல்லாத சூழல்ல இதனுடைய தாக்கத்தை அத்ிகம் எதிர்பார்க்கறது கஸ்டம்.

யரா: நீங்கவந்து இப்ப என்ன புராஜக்ட ெசுஞ்சிட்டு இருக்கீங்க ?

ராம் : என்னுடைய புராஜக்ட் வற்து ஜென்டர் சைக்கலாஜியப்பத்தியது. குழந்தைக வந்து எப்படி ஜெனடர் பத்தி புரிஞ்சிக்கறாங்கா- ஆணுண்ணா இபபிடிதா நடந்துக்கவாங்க-பெண்ணுணா இப்பிடித்தான் நடந்துக்குவாங்க- அத எப்ப புரிஞ்சிக்கறாங்க-எந்த மாதிரிச் சூழல்ல அதப்புரிஞ்சிக்கறாங்க என்கிறதப் பத்தி ஆராய்ச்சி பண்றன். வெவ்வேறு வயசு காலத்துல எப்படிச் சிந்திக்கிறாங்க. தமிழ்நாடடிலயும் அமெரிக்காவில சிலிக்கன் வேலில இருக்கிற தமிழர்களுக்கிடையிலும் இந்த ஆய்வச்செய்யறன். தமிழ் நாட்டில தஞ்சாவூர் மன்னார்குடி மதுரை மெட்ராஸ் ஏரியாவுல செய்யறன். ஓரே எடத்துல சிட்டால மட்டும் செய்யாம கொஞ்ச உள்ள ரூரல் ஏரயாவிலயும் செய்யறன். பொண்ணுங்க வந்து ஆண் வந்து பெண் மாதிரி நடந்துக்கலாம். ஆனா பெண் வந்து பெண்ணாத்தா இருககவேணும்னு நினைக்கிறாங்க. அந்த இயல்ப வந்து ரொம்ப பெர்ஸனலைஸ் பன்றாங்க. இந்த பிலீப் வந்து ஒரு சாதாரணமான கெயின்ஸ்ல இருந்து ஒரு ஐடியலாஜிகல்.மெமன்டமா வருது. வென் தெய் பி கம் ஓல்டர். அதுதான் வந்து என்னடைய பேசிக் ஆர்க்யூமன்ட். ஆணுக்கொரு நியதி பெண்ணுககொரு நியதி. இந்த நியதி அஞ்சாறு வயசிலயே வந்திருது. அது பூதாகரமா பெருகீட்டே வந்து ஒரு கோட்பாடாமாறி நம்முடைய மாரல் யுனிவர்ஸையே டிபைன் பண்ணுது. இது வந்து முதல் ப்ராஜகட் ரெண்டாவது புராஜக்ட்ல பவர்ங்கற விஷயம் நம்ம எப்படி அபக்ட் பண்ணுதுண்ணு பார்க்கறன். அத எக்ஸ்பரி மென்டலா பார்க்கனும். மற்றது ஸ்டரக்சுரலா பார்க்கனும். ஸ்டரக்சுரலா பாரக்கறதுங்கறது மேல் ஜாதிக்காரங்க கீழ் ஜாதிக்கரங்க என்கற பிரிவனையெப்பத்தி- உதாரணமா மேல்ஜாதிக்காரங்க. காஸ்ட்டுங்கறது பயலாஜிகலா நாங்க பிறந்தப்ப வருதா. அது நடையமுறை பழக்க வழக்கங்கள்ல வருதா- அதாவது காஸ்ட்டுங்கற் ஐடன்டிடி சோசலி கன்ஸ்டரக்டடா என்கிறது கேள்வி.

இந்தக் கேள்வி கேட்கறப்ப பிராமின்ஸ் என்ன சொன்னாாங்கன்னா காஸ்ட்டுங்கறது அடிப்படையில வருது. இயற்கையிலயே பயாலாஜிகலா வருது. ஆனா தலித்என்ன சொன்னாங்கன்னா தி ஹிஸ்ட்டாரிகல். ஆனா சமூகத்தால் கட்டப்பட்டது. ஆனர் சமூகத்தால் கட்டப்பட்டாலும் மாற்றமுடியாதது. ஓரு சமயத்தல அது வந்திருச்சின்னா மாற்றமுடியாதது.சாதி சம்பந்தமான ரெண்டுவிதமான அணுகுமுறைகள். அது மாத்த முடியாது என்கற ஐடியா ரெண்டு பேருக்கும் இருக்குது. டாமினனனட் குரூப்பும் சப் ஆர்டினேட் குரூப்பும் வேறு வேறு வகையில் பார்க்குது. ஓன்னு பயலாஜிகல் அபபடாங்குது. மற்றது சோசலி கன்ஸ்ரக்டட் பட் ஸ்டில் எஸ்ஸன்ஷியல்னு பார்க்குது. இட் ஈஸ் வெரி இன்ட்ரஸ்டிங் கன்ஸ்டர்க்ஷன். இது இயற்கையானது ஆகவே பயாலாஜிகல்என்கறது டாமினன்ட் குரூப் எவ்ஜினியன்சும் அப்படித்தானே இது இயற்கையானது. ஆகவே பயாலாஜிகல். இட் ஈஸ் நாட் பயலாஜிகல் பட் யு ஹேவ் இட். இட் இஸ் ஏ பொலிடிகல் மொபலைசேஷன். உதாரணமா தலித் ஐடன்டிடி அப்படான்னு சொல்றம். பயாலஜிகல் நோஷன் ஆப் கேஸ்ட் டு பி டிமாலிஸ்ட். அதே சமய்த்துல குடுக்கப்பட்ட அடையாளத்தப்பத்தி நாம பெருமைப்படனும். நாராயணப்பறையர் என்று போடும் போது இட் ஈஸ் ரியலி என்பவரிங். தட்ஸ் ஆல்ஸோ ஏன் ஆக்ட் ஆப் ரெசிஸ்டன்ஸ்.

யரா : ஒரு சைக்காலஜிஸ் ட்என்ற அளவில இந்தக் கேள்விய உங்ககிட்ட கேட்கமுடியுமா தெரியல்ல. ஆனா டா-காஸ்ட்டுங்கறது(னந-உயளவந)தான் முக்கியமான விஷயமாத் தோணுது. அது தான் ஒரு சிவிலைஸ்டான சொஸைட்டிக்கி நம்மளக் கொண்டு போகும். டா-காஸ்ட் வந்து என்ன மாதிரி உருவாகப் போகுது. காஸ்ட் ஆஸ் ஏன் இன்ஸ்டிடிட்யுஸன் அபாலிஸ் பண்றதன் மூலம் உருவாக்கலாம். அல்லது காஸ்ட் ஆஸ் எ பிரைடு(pride)ன்கிற மாதிரி- பிராமணனும் தன்ற காஸ்ட் பத்தி பெருமிதப்படலாம்-அதப்போல தலித்தும் பெருமைப்படலாம்-இப்பிடியான சூழல் மூலம் டா-காஸட் உருவாகப் போகுதா. ஏன்னாரெண்டு ஆப்ஷன்சும்இருக்குது. ரெண்டாவது அம்சம்தான் செயல்படுமுன்னா எகெய்ன தேர்வில் பி காஸ்ட் பர்எவர்.

ராம் : டா காஸ்ட் பன்றதுன்னா அப்பிடி எங்காவது தொடங்கமுடியுமா என்கிறது ஒரு பெரிய பிரச்சின. ஓரு நல்ல ஆல்டர் நேடிவ் எக்சாம்பிள் வந்து மல்டடி கல்ச்சுரலிஸம். என்னுடைய எடிட் பணண புக்ல இந்த விஷயந்தா டால் பண்ணம். கல்ச்சுரல் குருப்ஸ்க்கள்ள அவங்களுட ஐடன்டிடி. ரேஸ் பிளைன்ட் சொஸைட்டின்னு அமெரிக்காவுல சொல்வாங்க. ஒரு இனமற்ற சமூகம். ஓவ்வொருவருக்கும் வரலாறு இருக்கறதனால அடையாளங்கள் அங்கீகரிக்கப்பட்ட அடையாளங்கள் ஆகவேணும். இதனுடைய முக்கியத்துவம் ஒவ்வொரு ஜெனரேஷனுக்கும் வரலாறும். ஆங்கீகிர்ிக்கப்பட்ட அடையாளமா எப்படி அமையுது என்கறதபொறுத்துத்தான் இந்தக் குழுக்களப் பற்றிய அடையாளங்கள் எதகோலத்தில சொல்ல முடியும். மல்ட்டி கல்ச்சுரிஸம்  ஒரு நல்ல எக்ஸாம்பிள். யு டோன் ட் சிம்ப்ளி ரெகக்னைஸ் அதர்ஸ். ஆல்சோ ரிகக்னைஸ் ஒரிஜினல் கான்ட்ரிப்யுஸன்ஸ் ஹவ் எவர் இட் ஈஸ் பர்ட்டகுலரி போக்(folk) ட்ரெடிஸன் . தேயார் ஆல் நாலட்ஜ் சிஸ்டம்ஸ். அந்த டிரெடிசன் எல்லாமே நாலட்ஜ் சிஸ்ட்ம்ஸ். தேய்ஹாவ் டு பி லெஜிடிமைஸ்ட். அதே மாதிரி காஸ்ட் லொகேஷனஸ் எல்லாமே இலலெஜிடிமைஸ் டு(iilegitimized) பார்ம்ஸ்  ஆப் ட்ரெடிஸனல் நாலட்ஜ.. கிளாசிக் என்று சொல்கிற நாலட்ஜூக்கு இருக்கிற மரியாதை ட்ரெடிசனல் நாலட்ஜிக்கும் வந்திருச்சின்னா அந்த ரிகக்னிசனே எ பர்ஸ்ட் ஸ்டெப் டுவாரட்டஸ் எ சார்ட் ஆப் சொஸைட்டி. இந்த டைகாட்டமி கிரேட் ட்ரெடிசன் வெர்ஸஸ் லிட்டில் டிரெடிஸன் அதெல்லாம் வந்து இப்ப நாட் ப்ராப்ளமேடிக். காஸ்ட் ஸிஸ்டம் எல்லாமே ஒரு டிரெடிசனல் நாலட்க சிஸ்டம் அப்படான்னு நாம ரெகக்னைஸ் பணணம்னா தென் வி ரெகக்னைஸ் தெர் லெஜிடிமேட் பார்டடிசிபேஷன் இன் த கல்சுரல் புரொடக்ஷன். இப்ப நடந்துகொண்டிரக்கறது வந்து கன்டஸ்டிங் பீரியட். அது நடந்து கொண்டிருக்கிறது. ஒவ் வொரு இயக்கமும் தனித்தனி சங்கங்களா வந்திருக்கு. அந்தச் சங்கங்கள் என்ன பார்டடிசிபேசனுக்கு வரப்போகுது என்னமாதிரி சமூக மாற்றங்கள் வருது என்கிறதப் பொறத்து நிலம மாறும்

யரா : மற்றதென்னனா நீங்க இலங்கைத் தமிழர்களுக்கிடையில் கொஞ்சம் உளவியல் ஆய்வகள் செய்யறதா தனிப்பட்ட உரையாடல்ல சொன்னீங்க. என்ன விதமான ஆய்வுகள மேற் கொள்றிங்க. எந்த ஏியாவுல உங்களுடைய ஆய்வுகள மேற்கொண்டாங்க ?

ராம் : என்னுடைய ஆய்வினுடைய இன்னொருபகுதி வந்து புலம்பெயர்ந்தவர்கள். புலம்பெயர்நதவர்களுக்கு உளவியல் ரீதியலேஎன்னபிரச்சினைகள் வருகிறதுஎன்பது இந்த ஆய்வு. புலம் பெயர்ந்தவர்களப் பத்திப் படிக்கும் போது எந்தக் கலாசாரத்திலிருந்து வார்ராங்களோ-அந்த ஆய்வுகளப்படிச்சு இங்கிருக்கிற இமிக்ரண்ட்ஸ் எப்படி பிகேவ் பண்ணப்போறாங்கன்னு பார்க்கறாங்க. ஆனா கொஞ்ச நாள் கழிச்ச இங்க புலம் பெயர்ந்தவங்களுக்கும் அந்த நாட்டுக் காலாச்சாரத்துக்கும் இருக்கிற இடைவெளி – இதைப் பத்தி தியரைஸ் பண்ணும் போது இந்த இடம் பெயர்ந்தவர்களுடைய வாழ்ககை என்ன மாதிரி தனிச் சிக்கலோட இருக்கு-அந்தத் தனிச் சிக்கலப் புரிந்த கொள்றதுக்கு இடம் பெயர்நததற்கான காரணம்- எனன மாதிரி அகதிகளா வற்றாங்கள் வாலன்டரியா வற்றாஙகளா- வரும்போது என்ன மாதிரியான சிக்கல்களோட வர்றாங்க. என்ன ட்ரோமர்-என்ன மாதிரி கேம்ப்ஸ்ல இ திருக்காங்க-என்ன மாதிரி சிததிரவதைக்குஆட்பட்டிருக்காங்க-இதெல்லாம் அவங்க மனநிலய எப்பிடி பாதிக்குது- அது எப்படி அவங்களுடைய ஆண் பெண் உறவுகளப் பாதிக்குது- குடும்பத்திலிருக்கிற சிக்க்ல்கள்- குழந்தை வளர்ப்பு- பெற்றோர்கள எப்படி நடத்தறாங்க- இதையெல்லாத்தையும் போகஸ் பண்ணி நான் என்னுடைய ஆய்வைச் செய்யறன்.

யரா : இது வரைக்கும் கொஞ்சம் இன்டரேக்ட் பண்ணியிருப்பீங்க. அதுல உங்களுடைய பைன்டிங்ஸ் என்ன மாதிரி இருந்தது. அவங்களுடைய குழந்தை வளர்ப்பு- சித்திரவதை அனுபவம்- அவரகள் எதிர் கொண்ட வன்முறை என்ன மாதிரி ரிப்ளக்ட் பண்ணுது. அவங்களுடைய செக்சுவல் லைப் – மறறது சுஸைட் ரேட் என்ன மாதிரியிருக்கிறது என்று சொல்வீங்களா ?

ராம் : என்னுடைய ஆய்வுகளுடைய பிரிலிமினெரி ஆஸ்பெக்ட்ல இருந்து சில விஷயங்கள உங்களுக்குச் சொல்றன். டோரான்டாவுல சுஸைட் ரே¢ அதிிகமா இருக்குது. தற்கொல பண்ணிக்கும போது சின்னச்சின்ன குழந்தைகளோடயெ தற்கொலை செஞ்சிக்கிறாங்க. ஆண் பெண் உறவுல பெரிய விரிசல் இருக்கு. பெண்களுக்க இரட்டைச் சுமைன்னு சொல்லாம். ஒன்னு வந்த அவங்க வந்து பண்ணபாட்டத் தாங்கிக் கொண்டு போறவங்களா பாரக்கப்படறாய்க. அதே சமயத்துல புதக்ி கலாச்சாரத்தில அவங்களுககான பாத்திரமும் மாறியிருக்கிறது. ஒன்னு வந்து வெளியில போயி வேல செய்ய வேண்டியிருக்கு குடும்பத்துக் காப்பாத்த வேண்டியிருக்கு. பழைய டிரெடிசனல் கடமைகளையும் செய்ய வேண்டியிருக்கு கொழந்தைகளக் காப்பாத்தி பருஷனுக்கு சாப்பாடு செஞ்சு அப்பறம் அவங்களும் வேலைக்குப் போகவேண்டியிருக்கு. அந்த மாதிரி ஒரு இரடடைச் சுமை இருக்கு. அது பற்றி அவங்க நிறைய பேசறாங்க. ஆண்கள் புரிஞ்சு கொள்ள வேணும்னு நினைக்கிறாங்க. பெண்களை அடித்தல் குழந்தைகளை அடித்தல் அதிகமாயிருக்கிறது. அவங்களுடைய வன்முறையின் தாக்கம் வந்து அவங்களுடைய மனநிலைய நெறயப் பாதிச் சி ககு. பல விஷயங்கள்ல வந்து இவங்க வன்முறைய வந்து சாதகமான ஆயுதமா உபயோகப்படுத்தறாங்க. இந்த மாதிரியான சூழலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் அதிகமாகப் பெணகள். பெண்களுக்கு நிறையத் துாக்கமில்லாமை அடிக்கடி களைபபு வற்றது இது மாதிரியான பிரச்சினைகள் நிறைய இருக்கது. ஆனா சண்டை வரும்போது ஹஸ்பெண்ட் என்ன சொல்றார்னா நீ சும்மா படுத்துட்டிருக்கேன்னு கேட்கறாங்க. சைக்கலாஜின்னால நமக்கு ஒரு ப்ரீ கன்சப்ஸன்ஸ் இருக்கு. சைக்காலஜின்னால பைத்தியத்துக்கான வைத்தியம் என்கிற மாதிரி. எலுமிச்சம் பழம் தேய்ச்சிக்குளிச்சா போதும் என்கிற அளவிலதான் சைக்காலஜி புரியப்பட்டிருக்கிறது. அதனால இவங்க டாக்டர்கள் போய் பாக்க முடியாம இருக்கு.

இன்னொரு சமூகத்த உறுத்தற விஷயம் என்னன்னா கம்ப்யூட்டர் சைன்ஸ் மெடிசன்ஸ் இதுக்குத்தான் குழந்தைகளை அனுப்ப முயற்சி செய்யறம். சோஷியல் சைன்ஸ் படிக்க நாம விருபப்பபடறதில்லை. இந்த மாதிரியான அவலத்துக்க ஒரு சமூகம் ஆளாகும்போது அதப் பதத்ி தியரைஸ் பண்ணியோ அவங்களுக்க உதவி செய்யறதுக்போக ஞட்கள் இல்லை டொராண்டோவில இரண்டு லட்சம் தமிழர்களக்கு சைக்காலஜிஸ்ட்டுன்னு பாத்தா மூனு பேரோ நாலு பேரோதான் இருக்கிறாங்க. இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா வன்மறை பல இடங்கள்ல தாக்கியிருக்கு. நிறைய குழந்தைகள அடிக்கிறாங்க. 80-85 கொழந்தைக வந்து கனடியன் கவர்மென்டோட பொறுப்பில இருக்குது. நான் வந்து முதல்ல என்னெ¢னன பிரச்சினக ங்கறத முதல்ல டர்குமென்ட் பண்ணீட்டு இருக்கிறன் .அபபுறம்தான்  இன்டர்வென்ஸன் பண்ணவேணும். மத்த இமிக்ரன்ஸோட கனடியன் நேஷனல் பாப்புலேஷனை ஒப்பிட்டுத்தான் நான் எனது விவரங்களைச் சொல்றன். இது சம்பந்தமா ஒரு கான்பரன்ஸ் நடந்தது. அதிலிருந்துதான் இந்த விவரங்களை நான் பெறக்கூடியதாக இருநதது. பெண்கள் தனியாக மகளிர் மட்டும்னு நிகழ்ச்சி நடத்தறாயங்க. அந்த நிகழ்ச்சில் பெண்களுக்கான பிர்ச்சினைக பத்தி பேசறாங்க. அதோடு குழந்தைகள எப்படி புதுக்கலாச்சாரத்துல பள்ளிக் கூடத்துக்கு அனுப்பறது அவங்களுக்க எந்த விஷயங்களச் சொல்லித்தற்றது என்கிற மாதிரி பிரச்சனைகளும் இருக்கு. இதில்லாம டொராணடோவில இந்தக் கேங்க்ஸ்- அடலசன்ஸ் ஸ்கூல் லெவல்ல அந்த வயலன்ஸ எலர்லாம் இருக்கு. ஓழங்கா படியாம நடக்கற அந்தப் பண்பாடுகள் எல்லாம் வந்து சேர்ந்திருக்கு. என்னவிதமா இந்தப்போக்குகளை மாற்றமுடியும். எவ்வாறு மாற்றினால் இவர்களது வாழ்ககை நல்லா இருக்கும் என்பது பற்றி ஆராய்ச்சி பண்ணிட்டிருககிறன3.

யரா : பொதுவாக மனிதனுடைய வளர்ச்சியில் அவனது மேம்பாடு கருதித்தான் சிறப்பு அறிவுத் துறைகள்ள ஆய்வுகள் என்கிறது நட்த்தப் பெறுகிறது. இவ்வகையில எந்த வகையில் உங்களுடைய உளவியல் துறை வந்து மனிதனுடைய மேம்பாட்டுக்கு உதவும்னு நீங்க நினைக்கிறீங்க ?

ராம் : நாங்கள் உளவியலாளர்கள்- ஏன் மனிதர்கள் இந்த மாதிரிச் செயல்படுகிறார்கள் எனச் சொல்லமுடியும். இந்தப் பிரச்சினைகள இப்பிடிப் பாரக்கலாம் இதற்காண காரணங்கள் இவ்வாறாக இருக்கலாம்னு சொல்லாம். ஆனா மாத்தறதற்கு நிறைய விஷயங்கள் சம்பந்தப்பட்டவங்க கையிலதான் இருக்கு. மனிதர்கள நாங்க மாற்ற முடியாது. மாறனுங்கற முனைப்பு வந்து குறிப்பிட்ட நபருக்குத்தான் இருக்கமுடியும். இந்த வகையில் குறிப்பிட்ட சூழல்ல மனிசர்கள் ஏன் இந்த மாதிரி பிகேவ் பண்றாஙக அபபடான்னு நாங்க சொல்லமுடியும். ஏன் வேற மாதிரி பிகேவ் பண்ணலே என்கறதப் பத்திச் சொல்லமுடியும். டையக்னோசிஸ் குடுக்கலாம். நல்ல மருந்துகள் இருகக்ிறது. சில வேளை விளக்கங்கள் குடுக்கமுடியும். இந்த மாதிரிச் செஞ்சால் இந்த மாதிரி மாற்றங்கள் உருவாக வாய்ப்புண்டு அப்படான்னு சொல்லமுடியும். அத எப்படி மக்கள் பயன்படுததப் போறாங்க இத மற்ற துறையினர் எப்பிடி பாரக்கப் போறாங்க என்கிறது ஒரு சுவாரஸ்யமான கேள்வி.

Series Navigation

யமுனா ராஜேந்திரன்

யமுனா ராஜேந்திரன்