கை

This entry is part [part not set] of 44 in the series 20110403_Issue

ப மதியழகன்


நீங்கள் சந்தித்ததுண்டா
அந்த ஒரு கையை
இரவில் பூட்டைத் திறப்பதும்
பெண்களை பாலியல் பலாத்காரத்திற்கு
உள்ளாக்குவதும்
டாஸ்மாக்கில் மதுபாட்டில்களைத்
திறப்பதும்
குழந்தைகளை வன்கொடுமைக்கு
ஆளாக்குவதும்
மனைவி மீது மண்ணெண்ணெய்
ஊற்றுவதும்
கூலிக்காக முகம் தெரியாத
நபர் மீது கத்தியை இறக்குவதும்
செய்ய வேண்டிய கடமைக்கு
லஞ்சம் கேட்பதும்
ஊழல் பணத்தை
வெளிநாட்டு வங்கியில்
பதுக்கி வைப்பதும்
பணத்தை கறந்துவிட்டு
பதுங்கி விடுவதும்
போலித்தனமான சிநேகத்துடன்
உங்கள் கரங்களைக்
குலுக்கும் கைகள்
இவைகளாவும் இருக்கலாம்.

Series Navigation

ப.மதியழகன்

ப.மதியழகன்