காற்றாடி

This entry is part [part not set] of 49 in the series 20030724_Issue

புஷ்பா கிறிஸ்ரி


படிகள் இல்லை
மாடிகள் இல்லை
கட்டிடங்கள் இல்லை
மொட்டை மாடிகள் இல்லை
நீர்த்தேக்க வெளியரங்கில்
பறக்கிறது காற்றாடி

அந்தக் காற்றாடி
காற்றில் ஆடி ஆடிப்
பறந்தது
காற்றின் வேகத்துடன்
மேலே மேலே
பறந்தது
காற்று இழுத்தது
வேகமாய் இழுத்தது
அறுந்தது கயிறு
அந்த வட்டாரமெங்கும்
அறுந்த காட்டாடிகளின்
கெட்டியான(நைலான்) கயிறு
அறுபட்டு அநாதைகளான
காற்றாடிகளின் கதைகளை
மெளனாமாய்ச் சொல்லி நின்றது

மாயக் கரம் தான்
அந்த மனிதனுக்கு
குடித்த சுருட்டை
ஒருமுறை இழுத்து
மீண்டும் வைத்து விட்டு
மூங்கிலை வளைத்து
சமப்ங்கில் எடுத்து
மெல்லிய காகிதத்தில்
எத்தனை காற்றாடிகள்..
அடுக்கடுக்காய்ச் செய்து
அடுக்கிக் குவிக்கின்றான்

காற்றின் வேகத்தில்
காற்றோடு பறந்து போன
காற்றாடிகளை
கோட்டை விட்ட
சின்னச் சிறுவரின்
மூச்சுக் காற்று
இன்னும் சூடாகிட.
வேகமாய் நடக்கிறது
சின்னச் சமூகம்..
அந்த மாய மனிதனின்
காற்றாடி வியாபாரம்
தொடர்கிறது
வாழ்க்கை முழுவதுமாய்..

புஷ்பா கிறிஸ்ரி
pushpa_christy@yahoo.com

Series Navigation