மலர்வனம்
வெண்ணிலா இரயிலில் தூங்கிக் கொண்டே இருந்தாள் அப்போது சட்டென்று ஒரே சத்தம் என்ன வென்று பார்த்தால் பக்கத்தில் கல்லூரி மாணவர்கள் கூட்டம் ஒரே சிரிப்பும் கும்மாளமுமாக இருந்தது. அதில் ஒரு சில ஜோடிகளாக இருந்தனர். இதைப் பார்த்ததும் அவள் கல்லூரி நினைவுகள் அவளுக்கு நினைவுக்கு வந்தது. கல்லூரி வகுப்பரையில் அமைதியான பெண்ணாக இருந்தாள் வெண்ணிலா, அவளுக்கு தன்னுடன் படித்த ஜெயா மட்டும் தான் தோழி அதுவும் வேறு துறையில் இருந்தாள். இதுவே அவளுக்கு மிகப் பெரிய வருத்தம். எந்த விசியமாக இருந்தாலும் தன் தோழி ஜெயாவிடன் சொல்லாமல் இருக்க மாட்டாள். ஒரு நாள் ஜெயா கல்லூரிக்கு வரவில்லை. வெண்ணிலாவிற்கு ஒரே பதட்டம் அவள் என்னிடம் சொல்லாமல் லீவு போடமாட்டாளே. வீட்டிற்கு போன் செய்து பார்த்தும் அவங்க அம்மா வீட்டில் இல்லை என்று சென்றார்களே. என்ன ஆச்சு அவளுக்கு என்று மனம் பதட்டத்துடன் இருந்தது. வெண்ணிலாவிற்கு தூக்கம் வரவில்லை. அவளை கல்லூரியில் பார்த்தால் தான் திருப்தியாக இருக்கும். வெண்ணிலா வகுப்பறைக்கு செல்லாமல் ஜெயாவின் வகுப்பறைக்கு சென்று பார்த்தாள் பரிக் கொடுத்தார்ப் போல் தலையை தொங்கப் போட்டுக் கொண்டு இருந்தாள். அவள் அருகில் சென்றாள் வெண்ணி, ஏய் ஜெய் என்ன ஆச்சு உனக்கு, இப்படி இருக்க, வெண்ணி உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும். என்ன டா என்றதும் தன் பையில் இருந்த ஒரு தாளை எடுத்தாள். வெண்ணி இதை படி டா எனக்கு பயமாக இருக்கு டா என்று கண்ணில் இருந்து அழுகை அருவி போல் கோட்டியது. சரி வா நம்ம இங்கு இருக்க வேண்டாம். வேறு இடத்திற்கு செல்லலாம். உடனே அங்கிருந்து கிளம்பிவிட்டோம் இருவரும். அந்த கடிதத்தை பிரித்தவுடன் காதல் கடிதம் வெண்ணிலாவிற்கு பகிர் என்று இருந்தது. எந்த ராஸ்கல் இது. இதை தான் வாங்க போய் இருந்தாயா நீ. சும்ம இருடி, என்று சிரித்தால் ஆ இப்போது தான் சிரிக்கிறாய். சரி டா என்று செல்லமாக, நீ எதற்கு கவலை படாதே, அவன் யார் உனக்கு தெரிந்தவனா. இல்ல டா அப்போ எப்படி! நான் கம்பியூட்டர் கால்ஸ்க்கு போரேன் இல்லா அங்கு படிக்கிறான். ஓ… ஐ.. சீ பையன் எப்படி நல்லா இருப்பானா என்றாள். சும்மா இரு டா நா ரொம்ப சீரிசாக பேசுரேன். ஓகே இன்று எப்படியும் அவன் உன்னை பார்க்க கல்லூரிக்கு வருவான் என்று நினைக்கிறேன். எப்படி சொல்லுற உன் காதல் கடிதத்தை பார்த்தால் தெரிகிறது. பயபடாமல் வகுப்பரைக்கு செல். அவள் சென்றவுடன் சிறிது நேரம் கழித்து ஒரு ஆட்டோ என் அருகில் வந்து நின்றது. அதில் இருந்த ஒருவன் இரங்கி என்னை நோக்கி வந்தான். நீங்க தான் வெண்ணிலாவா என்றான் சார் நீங்க யாருனு சொல்லுங்க. என்ன வெண்ணிலா இப்படி கேட்டுவிட்டாங்க….. உங்க தோழி சொல்லவில்லையா……………. ஓ அந்த ஆசாமி நீ தானா. என்றேன். நீங்க யாருனு தெரியாம உங்களுக்கு மரியாதை கொடுத்துவிட்டேன். இங்க பாருடா இனிமேல் அவள் பின்னாடி போன அவ்வளவு தான்….. இந்த மாதிரி எத்தனை பேர் இருக்கிருங்க. அவள் ஒன்றும் அரியாத பெண்….. சரி வெண்ணிலா உங்க பதில் தான் அவங்க பதிலுனு சொன்னாங்க அதனால் தான் உங்களிடம் பேச வந்தேன். இதோட அவளை மறந்துவிடுங்க….. இப்படி சொன்னா எப்படிங்க…….. ம் அப்படி தான் என்றேன். … இங்க பாருங்க வெண்ணிலா அவளை நான் காதலித்து காட்டுகிறேன். என்றேன் போடா போ………. அது எல்லாம் முடியாது. காதலைப் பற்றி உங்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன். அத்தான் இப்படி பேசிக் கொண்டு இருக்கீங்க. நான் அவளை காதலித்தே திருவேன் என்று சவால் விட்டு சென்றான். மறு நாள் காலையில் ஜெயா அந்த பையனுடன் பைக்கிள் வந்து இரங்கினாள். வெண்ணிலாவிற்கு இதயம் பல மடங்கு துடித்தது என்ன டா இது நான் நேற்று அப்படி பேசினேன். இன்று நீ இப்படி வந்து நிற்கிறாய் என்று அவளை பார்த்து கேட்டாள். அவள் அருகில் இருந்த அவன் என்ன வெண்ணிலா ஐஸ்வாட்டர் வேண்டுமா……….. என்று கிண்டலாக கேட்டுவிட்டு சென்றுவிட்டான். ஜெய் உன்னுடன் பேசமாட்டேன் கல்லூரிக்கு இன்னும் வரவில்லை என்று நான் பதட்டத்துடன் இருந்தால் நீ அவனுடன் வருகிறாயே…. அவன் நான் இல்லை என்றால் விஷம் சாப்பிடுவிடுவேன் என்று பயமுறுத்தினான். ஓ அது தான் மயங்கிவிட்டாயா அவனிடம். .. ஜெய் வேண்டாம் டா இந்த காதல்…….. எல்லாம் மாயமாக மாறிவிடும் சொல்லுவதை கேள் என்றேன்……. சில நாட்கள் அவளிடம் பேசவே இல்லை…….. வருத்தமாக இருந்தது. இப்படி இருக்காளே……….. வெண்ணிலாவும் காதல் வளையில் சிக்கிக் கொண்டாள். இருவரும் ஒரு கோவிலில் சந்தித்துக் கொண்டனர். நானும் அவளை பார்த்து மிகவும் சந்தோசப்பட்டேன். எப்படி இருக்க இந்த நிலையில் இருந்தது அவர்களின் நட்பு. அந்த கோவிலில் பார்த்தவுடன் அவர்கள் நட்பு புதுப்பித்தது.. ஏன்னென்றால் இருவரும் தன் காதலுடன் வந்தனர். இருவரை அறிமுகப்படுத்திக் கொண்டனர். கல்லூரி படிப்பு முடிந்தது சில நாட்கள் கழித்து ஜெயா என்னை தேடி வந்தாள்….. வெண்ணி நான் ஏமாந்து விட்டேன். அவள் எனக்கு செவ்வாய் தோஷம் என்று தெரிந்து அவன்ி என்னை விட்டு வேறு ஒரு பெண்ணை திருமண செய்துக் கொண்டான். வெண்ணிலாவிற்கும் இதோ நிலைமை தான் என்று ஜெயாவிற்கு தெரியாது. இதை வேறு சொல்லி அவளை புண்படுத்த வேண்டுமா என்று நினைத்து அவளுக்கு ஆறுதல் சொல்ல முடியவில்லையென்றாலும் சில வார்த்தைகள் ஆறுதலாக சொன்னாள். வெண்ணிலா தன் மனதிலேயே எல்லாவற்றையும் வைத்துக் கொண்டாள் அவளால் அவனை மறக்க முடியவில்லை. இந்த ஆண்களோ இப்படி தானோ என்று தனக்குளே சொல்லிக் கொண்டாள். வெண்ணிலாவின் நிலைமை மிக மோசமாக இருந்தது. அதனால் அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் அந்த ஊரைவிட்டு வேறு ஊருக்கு சென்றனர். அப்போதுதான் வெண்ணிலா அந்த மேகக் கூட்டம் சேர்ந்து மறைந்து மழை பெய்து கொண்டிருந்தது. அந்த மேகக் கூட்டத்தைப் போன்று அவர்கள் இருவரின் காதலும் மாயமாக மறைந்து அவர்களின் கண்ணீரைப் போல் மழையாய் பெய்தது.
malar_vanam@sify.com
- சோகல் கட்டுரையும், கறுப்பில் வெளியானதும் குறித்து
- யெளவனம்
- உள்வீடு
- கால் கொலுசு
- என்ன உலகமோ
- அண்டவெளி உயிர் மூலவிகளை ஆய்வு செய்த வானியல் விஞ்ஞானி ஃபிரெட் ஹாயில் (1915-2001)
- வயிற்றுப்போக்கு மூளை வளர்ச்சியைப் பாதிக்கிறது.
- ஸ்வாமி விவேகானந்தரும் அறிவியலும்
- கடிதங்கள் – டிசம்பர் 11,2003
- கடிதங்கள் – ஆங்கிலம் – டிசம்பர் 11,2003
- நாகூர் ரூமியை முன் வைத்து : பெண்கள், புத்தகங்கள், இஸ்லாம்
- ‘போலீஸ் தனது அடியாளாக இருக்கவேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது ‘
- ஒரு இந்துவின் பதில் – திரு.திருமாவளவனுக்கு
- மனித நல்லிணக்கம்.
- காபியிலும் ஆணாதிக்கம்
- கூட்டு வாழ்க்கை – ஒரு உதாரணம்
- வைர வியாபாரமும் வன்முறையும்
- வார பலன் – மனுஷாகாரம் மனிதன் ஆகாரம்
- சில எதிர்வினைகள்
- அன்புள்ள மனுஷ்யபுத்திரன்
- காங்கிரஸ் தோல்வி :ஓர் அலசல்
- முரசொலி மாறன்
- பின்நவீனத்துவ ‘டெஹல்கா’ :ரவி ஸ்ரீனிவாசிற்கு ஓர் எதிர்வினை
- எனக்குப் பிடித்த கதைகள் – 89- சொற்களுக்குப் பின்னியங்கும் ஆழ்மனம்- என்.கே.ரகுநாதனின் ‘நிலவிலே பேசுவோம் ‘
- பாரதி, மகாகவி: வரலாறு
- பாரதி நினைவு நாள்
- யானை பிழைத்த வேல்
- பிதாமகன்: பாலாவின் படங்களும் தனிநபர் வன்முறையும்
- பாம்புபற்றிய என் ஆறாவது கவிதை
- விடியும்! – (26)
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர்)
- வினைத்தொகை
- மேல் நாட்டு மோகம்
- அம்மண தேசம்
- காதல் மாயம்
- ரங்கநாதனுக்கு வந்த காதல் கடிதம்
- நட்பு
- கடவுள்கள் சொர்க்கத்தில்…..
- கண்ணீர்த்துளிகளும் கவிதைகளும்
- கொஞ்சம் தள்ளிப்போனால்
- தேர் நிலைக்கு வரும் நாள்
- தேர்க்கவிதை
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தாறு
- கங்கைகொண்டசோழபுரம்
- புதசுக்கிரயோகம்
- கவிதைகள்
- கவிதைகள்
- என் புத்திக்குள்
- அரவம்.
- காகம்.
- ஏ ! பாரதி
- ஆதாரம்
- கபிலர் பாறை
- நாளையும்…..அக்கறையாகவோர்………….. ?
- இணையம்