கரைதலின் திறவுகள்…
நெப்போலியன்,சிங்கப்பூர்

நிமிடங்களின்
தீர்வை
கரைக்காத
கண்ணாடிக்
குடுவையில்
நமக்கான
கரைதல்கள்
மேலும்
கீழும்
கொட்டியபடியே…
உன் கழித்தலில்
என் கூட்டலும்
கணக்கிடப்படும்
வேளைகளில்
நம் தசமம்
சரியென்றெண்ணி
தலையாட்டுகிறாய்…
வார்த்தைகளால்
நம் தலைகள்
சீவப்படும்
புரிதலின்றி!
காலம்
கண்ணாடிக்
குடுவைகளில் அல்ல…
கரைதல்களிலுமல்ல…
காத்தலின் திறவுகளில்.
—-
kavingarnepolian@yahoo.com.sg