ஒரு திக்குவாயனின் காதல் வெண்பாக்கள்

This entry is part [part not set] of 26 in the series 20020525_Issue

அனந்த்


எ..என்பேர் இளங்கோ இளவயசு தொட்டே
உ..உன்மேல் வ..வச்சேன் உ..உசிரு – என்னை
ம..மக்குன்னு மட்டும் நெனைக்காதே கொஞ்சம்
தி..திக்குவாய் அவ்வளவு தான்.

திக்குவாய் என்றாலும் தீங்கனியே என்னுள்ளம்
கக்குகின்ற காதல் கடற்பெருக்கை – மிக்க
அழகுதமிழ்ப் பாவில் அமைத்தளிப்பேன் இன்னும்
பழகுதற் கேது பயம் ?

கிட்டே வருங்கால் கிளுகிளுப்பு பூந்தளிர்க்கை
பட்டவுடன் மேனி படபடப்பு – வட்டவிழி
வெட்டில் வெடவெடப்பு என்கண்ணே! என்கண்ணே
பட்டுவிடும் நீதள்ளிப் போ!

நேற்றுந்தான் கண்டேன் நிலவை நெகிழவில்லை

காற்றுந்தான் என்றும்போல் காற்றிற்று – மாற்றமின்று

ஏன்வந்த தென்ற புதிரவிழ்க்க என்மனத்தில்

தேன்பாய்ச்சிச் சென்றவளைக் கேள்

Series Navigation

அனந்த்

அனந்த்