ஒத்திகை

This entry is part [part not set] of 46 in the series 20041021_Issue

அருண்பிரசாத்


விரும்பிய முகம் காட்டும்
மனித ஆடிகளில்
தீர்ந்து வரும் ரசம்.

ஒப்பனை தீற்றிய
முகச்சுருக்கங்களில்
மறைந்து மிளிரும்
வலியின் நிறங்கள்.

அரிதில் உபயோகப்படும்
மேடையின் கால்களை
சோதித்தறிதல் நலம்.

அருண்பிரசாத்
everminnal@yahoo.com

Series Navigation

அருண்பிரசாத்

அருண்பிரசாத்