அஃறிணைகள்

This entry is part [part not set] of 46 in the series 20041021_Issue

பிச்சினிக்காடு இளங்கோ


தூக்கம் கலைகிறது
துக்கம் தொடர்கிறது

ராஜா சரியில்லையாம்
மந்திரி அறிவிப்பு

ராஜாவே இன்னும்
ராஜ்ஜியத்தை ஆளவில்லை

அதற்குள்
மந்திரிக்கு அவசரம்

ஆம்
சிங்கத்தின் கையில்
இன்னும் காடு வரவில்லை

சிங்கம் இன்னும்
காட்டை
ஆளவே இல்லை

ஒரு காட்டுக்காகத்தான்
சிங்கம்
கர்ஜித்து அடங்கியிருக்கிறது

அதற்குள் விலங்குகள்
விவரவாதிகளாகிவிட்டன

விவாதிக்கத் தொடங்கிவிட்டன

அந்தச் சிங்கம்
சிங்கமில்லையாம்

புதிய சந்ததேகம்
தோன்றியிருக்கின்றது

வாழவே இல்லை
என்பதும்
வாழ்க்கையே இல்லை
என்பதும்
விடியாத இருளின்
விளக்கங்கள்

அதற்குள்
அவசரங்கள்…
அவதாரங்கள்…

விடியலுக்குப்பின்
விசாரணையை வைத்துக்கொள்ள
விலங்குகளுக்கு உடன்பாடில்லை

அஃறிணைகள் என்பதை
அழகாக நிரூபிக்கின்றன
அவசரப்பட்டு….

துக்கம் தொடர்கிறது
தூக்கம் கலைகிறது

—-
ilango@stamford.com.sg

Series Navigation

பிச்சினிக்காடு இளங்கோ

பிச்சினிக்காடு இளங்கோ