உடலும் பிரபஞ்சமும் -தாந்திாீக கோட்பாடு பற்றி சில குறிப்புகள்

This entry is part [part not set] of 42 in the series 20030615_Issue

எச்.பீர்முஹமது


உடலில் இருப்பது பிரபஞ்சத்தில் இருக்கிறது. பிரபஞ்சத்தில் இருப்பது உடலில் இருக்கிறது. இப்பிரபஞ்சத்தின் நுண்ணியக்கந்தான் மனித உடல். உடலாக இருப்பது, உடலாக மிதப்பது, உடலாக உணர்வது இம்மூன்றும ;பிரபஞ்சத்தின் இயக்க தளத்தை பிரதிப்பலிக்கன்றன.

மனித உடல் பற்றிய அறிவின் தொடக்கங்களோடு விாிந்து செல்வது தாந்திரீக கோட்பாடு. தாந்திாீகம் என்ற வார்த்தைக்கு தன் இனவிருத்தி செய்தல் என்று அர்த்தம். இந்த வார்த்தை¢கு பலர் பல விதமாக அர்த்தங்களை வெளிப்படுத்தினாலும் இன விருத்தி அர்த்தமே முன்னணி இந்திய தத்துவவியலாளர்களால் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. பிராதன இந்தியாவில் வேதாந்த மரபு இருந்து வந்தது. வேதங்களை வடிவமைத்தவர்கள் ாிஷிகள். ாிஷி மூலம் என்பது அறியப்படாத ஒன்று.

வேதாந்தம் ஆண்மைய தத்துவமாகவே இருந்தது. இதற்கு மாறாக பெண்ணை மையப்படுத்திய விவசாய சமூக அடிப்படையை கொண்டதே தாந்திாீகம். இவர்களின் கருத்துபடி விவசாயம் என்பதே பெண்ணின் கண்டுபடிப்பு தான். பெண்ணின் வளமை என்பது விவசாய வளத்தை பிரதிபலிக்கும். பிரகிருதி என்பது பெண் படைப்பின் அடிப்படை மாறாக புருஷ என்பது ஆண்படைப்பின் அடிப்படை. இந்நிலையில் பிரபஞ்ச உருவாக்கத்திற்கு மூலகாரணம் பெண் தான். புராதன கூட்டு சமூகத்தில் அல்லது இனக்குழு சமூகத்தில் பெண் தான் முன்னிலை வகித்தாள். காட்டுமிராண்டி காலக்கட்டத்தின் பயிர்த்தொழில் வெளிப்பாடே மந்திரம். மந்திரத்தின் ஒவ்வொரு உச்சாிப்பும் ஒரு தூண்டலை குறித்தது. சீன தாவோக்களை பொறுத்த அளவில் மந்திரதன்மை பெண்களுக்கு உாியதாகும். பெண் தெய்வங்களே சமூகத்தில் முன்னிலை வகித்தன. பெண்ணின் உச்சாிப்பும், அதன் நுண்ணலையும் இயற்கையின் இயல்பான வளர்ச்சி போக்காகும். விவசாயம் சார்ந்த மந்திர சடங்குகளே தாந்தாீகர்கள் முக்கிய வழிபாடு முறைமை. பெண் மையவாதத்தின் படி பெண்ணின் எல்லாவித அகவய,புறவய செயலாக்கங்கள் புனிதப்படுத்தப்பட்டன. இம்முறையில் பெண்ணின் ஒவ்வொரு உறுப்புமே புனிதத்தின் குறியீடு தான். புனிதத்தின் யைப்பகுதியாக யோனி கருதப்பட்டது. யோனியானது நிலத்தின் வளத்தன்மையோடு இணைத்து கூறப்பட்டது. பெண்ணின் மாதவிடாய் இரத்தம் பயிாிடுதலில் ஒரு முக்கிய அம்சம். சாந்தல் இனமக்கள் தங்கள் நிலத்தை உழும் போது வயலில் ஒரு கல்லை நாட்டி அதில் பெண்ணின் இரத்தத்தை பூசி பயிாிடுதலை ஆரம்பிப்பார்கள். இம்மாதிாியான சடங்குகள் ஆசாாியங்கள் என்று அழைக்கப்பட்டன. ஆசாாியங்கள் அல்லது இயல்பான மத சடங்குகளை குறித்தது. ஆசாாியங்கள் வேத, வைணவ, சைவ, தட்சிணா, வாமா, சித்தானா, கெளலா என்னும் ஏழு வகையில் பிாிக்கப்படுகின்றன. ஆசாாியத்தின் இந்த ஏழு மரபானது வாமாச்சாாியம், தட்சிணாச்சாாியம் என்ற இரு பெரும் பிாிவாக அறியப்படகிறது. ஒவ்வொருவரும் பிறப்பின் அடிப்படையில் தட்சிணாச்சாாியரே. பின்னர் அவர்கள் வமாச்சாாியராக மாறுகின்றனர். வாமம் என்பது பாலியல் நடவடிக்கை. இந்நடவடிக்கை பஞ்ச மகரங்கள் என்னும் கலப்பு செயல்பாடுகளோடு குறிக்கப்படுகிறது. 1.மீன் 2.முதிரை 3.மாமிசம் 4. மது 5. மைதுனம் இந்த ஐந்து விதமான நடவடிக்கைகளுக்கு உாியவர் வாமாச்சாாியர்கள். புராதன இனக்குழுக்களில் அநேக குழுக்களின் செயல்பாடு மேற்கண்டவாறு அமைந்திருந்தது. அவர்கள் பாலியல் சேர்க்கையின் போது மது அருந்தினர். மாமிசம் உட்கொண்டனர். சில இனக்குழுக்களில் திருமணத்தின் போதே அவர்களுக்கு மது வழங்கப்பட்டது. கிறஸ்தவ திருமணங்களில் இன்றும் கூட உறவின் அடையாளமாக ஒயின் வழங்கப்படுகிறது. வாமாச்சாாியர்களுக்கு மாறாக தட்சிணாச்சாாியர்கள் மேற்கண்ட பஞ்ச மகரங்களுக்கு உட்படவில்லை. அவர்களின் வழிபாட்டு சடங்குகள் இதனை தவிர்த்த ஒன்றாக விளங்கின. வேதாச்சாாியர், வைணவர், சைவர் ஆகியோர் இந்த பட்டியலில் உட்படுவர்.

தாந்திாீகர்கள் விவசாய செயல்பாடுகள் தவிர மருத்துவ, வேதிய, உலோகவியல் செயல்பாடுகளிலும் ஈடுபட்டனர். மருத்துவத்தில் மனித நரம்புகளை சிகிச்சை முறைக்கு அடிப்படையாக வைத்தனர். வேதியல் முறையில் பாதரசம், காந்தம், இரும்பு, மைகா, வெள்ளி, தங்கம் போன்றவை அவர்களின் அடிப்படையாக இருந்தது. இம்முறையில் அவர்கள் ஒரு உலோகத்தை மற்றொரு உலோகமாக மாற்றினர். இது ரசவாதம் எனப்பட்டது. இந்த கலைஞூர்கள் சித்தர்கள் எனப்பட்டனர். தமிழில் இவர்கள் மொத்தம் பதினெட்டு பேர். முதல் சித்தர் போகர். இவாின் பூர்வீகம் சீனா என்று அறிகப்படுகிறது.

சித்தர்களின் ரசவாதம் கனிமங்களை எடுத்துக்கொண்டது. இது ரசரத்னசாமுச்சயம் என்று அழைக்கப்பட்டது. கனிமங்களின் மருத்துவ குணம், மற்றும் அதன் இயல்பாக்கம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து ரசம், உபரசம், ரத்னம் மற்றும் லோகம் என பிாிக்கப்படுகின்றது. ரசம் என்பது பாதரசத்தை அடிப்படையாக கொண்டது. மைகா, மாக்னீசியம், துத்தநாகம், தாமிரம் போன்றவை இதன் துணை காரணங்கள். கந்தகம், அலுமினியம், சிவப்பு ஆக்ஸைடுபோன்றவை உபரசங்களாகும். வைரம், வைடூாியம், புஷ்பம், புஷ்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, பவளம் ஆகியவை ரத்னங்களாகும். இரும்பு, தங்கம், வெள்ளி, காாீயம், பித்தளை ஆகியவை உலோகங்களாகும். ரசவாத மற்றும் மருத்துவ நூல்களில் தாந்திாீக ரசவாதிகளின் பெயர்கள் சிதறிக் கிடக்கின்றன. ஒவ்வொரு சிதறலும் ஒவ்வொரு வெளியை பிரதிநிதித்துவம் செய்கிறது. இவர்களின் உலோகமாற்று வழிமுறை பாதரசத்தை மையப்படுத்தியது. இம்முறையை பயன்படுத்தி தாமிரத்தை தங்கமாக மாற்றினர். இவர்கள் இதற்காக சுருக்கல் முறையை பின்பற்றினார்கள். இதன் தலைசிறந்த கலைஞூர் நாகர்ஜுனர். இவாின் பெயர் தாந்திாீக இலக்கியங்களில் சிதறி கிடக்கிறது. பெளத்த வஜ்ராயன பிாிவை சேர்ந்த இவாின் காலம் எட்டாம் நூற்றாண்டு. பாலபத்ரா, பிரம்மஜோதி, காகாநந்தநாதர், மந்தனபைரவா,சுவாச்சந்தபைரவா, வியாதி ஆகியோர் மற்ற ரசவாத சித்தர்கள் அவர். ரசவாதிகளில் பலர் சங்கராச்சாாியாாின் அத்வைதத்தை எதிர்த்தனர். முழுமுதல் பிரம்மம் என்ற ஒன்று இல்லை. உலகமே எதார்த்தம் தான் என்றனர். பாம்பு கயிறாவதையும், கயிறு பாம்பாவதையும் நிரூபிக்க முடியாது. அவை அனுபவபூர்வமான நடைமுறைக்கு அப்பாற்பட்டவை. சித்தர்கள் இக்கோட்பாடு மூலம் எதிர் அத்வைதிகளாக அறியப்பட்டார்கள்.

தாந்திாீகர்கள் ஒற்றை கடவுள் கோட்பாட்டை எதிர்த்தனர். முழுமுதல் கடவுள் என்று ஒன்றும் இல்லை. மனித உடலே கடவுளாகும். அதுதான் பிரபஞ்சத்தின் சாரம். இச்சை தான் படைப்பின் தூண்டல். இதன் நோக்கம் சாத்யம். சக்தி தான் படைப்பின் காரணி. இது அதன் விாிந்த வடிவத்தில் பிரகருதியாக, நிலமாக, உடலாக, யோனியாக, நாடியாக இருக்கின்றது. இவற்றின் ஒட்டு மொத்தமே சுய-விடுதலை. இது வெறும் ஆத்ம விடுதலையல்;ல. மாறாக பிரபஞ்சத்தின், உடலின் உடற்கட்டுகளின் விடுதலை. சக்தியானது பாலில் மிதக்கும் வெண்ணையை போன்றும், எாியும் தீயின் சுடர் போன்றும், இயங்கும் மற்றும் இயங்காத பொருட்களிலும் நனவிலும், நனவிலி நிலையிலும் நிலவுகிறது. இந்த நிலவியல் தான் சக்தியின் ஒத்திசைவு. இந்த ஒத்திசைவு தான் பிரபஞ்ச இயக்கத்தின் அடிப்படை நிலவு தேய்வதும் பின்வளர்வதும், சூாியன் மறைவதும் பின் மறைவதும் பின் உதிப்பதும் மழையும், வெயிலும் போன்ற பிரபஞ்ச முரணியக்கத்திற்கு இந்த ஒத்தசைவு தான் அடிப்படை. பிரபஞ்ச படைப்பின் மூல காரணியாக சக்தி இருக்கும் நிலையில், எதிாிணையாக புருஷம் அல்லது சிவம் இருக்கிறது. இந்த இரண்டின் சேர்க்கையாக, அதாவது நிலையான இருப்பாக ஆணும், இயங்கும் நிலையாக பெண்ணும் இணைந்து படைக்கின்றனர். செமிட்டிக் மதங்களான யூதர், கிறிஸ்தவர், இஸ்லாம் போன்றவற்றின் பிரபஞ்ச தோற்ற கருத்தானது விலக்கப்பட்ட கனியிலிருந்து ஆரம்பிக்கிறது. விலக்கப்பட்ட கனி என்பது படைப்பின் கருவி. ஆதாம்,ஏவாள் படைப்பின் மூலம். சாத்தான் படைப்பின் தூண்டல் (இச்சை). இம்மதங்களின் தோற்ற கருத்து தாந்திாீகத்தின் கோட்பாட்டோடு ஒத்து போகிறது. வித்தியாசம் என்னவென்றால் அவை ஆணை மையப்படுத்தி பேசுகின்றன. உடலில் இல்லாதது எதவுமே உலக்தில் இல்லை. பிரபஞ்ச நிகழ்வின் சாரமும் உடலியல் நிகழ்வின் சாரமும் ஒன்று தான்.

தாந்திாீக கோட்பாடானது இந்திய தத்துவ மரபில் பைளத்தம், சாங்கியம், மீமாம்சம் போன்ற மற்ற மரபுகளின் மீதும் தாக்கல் செலுத்தியது. அம்மரபுகள் தாந்திாீகத்தை உள்வாங்கி கொண்டு தனதாக்கி கொண்டன. இந்நிலையில் தூய படைப்பாக்கம் என்பது ஆறு குணங்களை கொண்டது. அவை 1.ஞானம் 2. ஐஸ்வர்யம் 3. சக்தி 4. பாலம் 5. தேஜம் முந்தைய மூன்றும் விஷ்ரமபூமயா அல்லது ஓய்வு நிலை என்று அழைக்கப்படுகின்றன. பிந்தைய மூன்றும் ஸ்ரமபூமயா அல்லது செயல்முறை என்று அழைக்கப்படடுகின்றன. வியூக பிரபஞ்ச கோட்பாட்டின் படி ஆறு குணங்களும் மூன்று புனித வஸ்துக்களின் குறியீடு. அவை சங்கர்ஷனா, பிரத்யும்மா மற்றும் அனிருத்தா. இந்த கருத்தானது சாங்கிய – தாந்திாீகத்தின் பிரபஞ்ச பாிமாண கோட்பாட்டுடன் இணைத்து சொல்லப்படுகின்றது. படைப்பு நிலையில் சங்கர்ஷனரும், பிரகிருதியும் இணைந்து புத்தி அல்லது அறிவை உற்பத்தி செய்கின்றன. பிரத்யும்மானும் அறிவும் இணைந்து அகந்தை அல்லது ஈகோவை உற்பத்தி செய்கின்றன. ஈகோவும் அநிருத்தரும் இணைந்து பூதங்களை உற்பத்தி செய்கின்றன.

தாந்திாீகம் உடலை, அதன் செயல்பாட்டை நாடிகளின் அதிர்வுகள் மூலம் மதிப்பிடுகிறது. நாடிகளின் அதிர்வுகளானது மின்; காந்த அலைகளுக்கு ஒப்பானதாகும். உடல் ஏழு விதமான தாமரைகளால் ஆனது. இது சக்கரபீடம் என்று அழைக்கப்படுகின்றது. சுசும்னாவில் தொடங்கி ஸகஸ்ராவில் முடியும் இந்நாடியானது தியானத்தின் வழியாக அல்லது மூச்சின் ஒழுங்கமைப்பின் மூலம் இலக்கிடப்படுகின்து. மேற்கண்ட ஏழு நாடிகளும் தாந்திாீகத்தில் ஏழு மண்டலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு மண்டலமும் அதன் விாிவான அர்த்தத்தில் பெண்ணின் இனப்பெருக்க படிநிலைகளை குறிப்பிடுகின்றது. விவசாயத்தில் நிலத்தை பண்படுத்தல் தொடங்கி அறுவடையில் முடிவது மாதிாி தான் இதுவும்.

இந்திய தத்துவ மரபின் படி தாந்திாீகம் புராதன, இடைக்கால, நவீன சமூகத்தினாிடையே மிகுந்த தர்க்கத்தை உண்டுபண்ணியது. இந்த கோட்பாட்டின் நீட்சியாக வளர்ந்ததே சக்தி வழிபாடு. பெண் தெய்வங்களை காளி, துர்க்கை, அம்பிகை போன்றவை தாந்திாிகத்தின் பெண் தெய்வ தன்மையை குறிப்பிடுகின்றன. தாய்வழிபாடு சமூக மரபிலிருந்து தொடங்கிய தாந்திாீகம் இந்தியாவில் மட்டுமன்றி சீனா, திபத், பர்மா மற்றும் மேற்காசிய நாடுகள் பலவற்றிலும் பரவியிருக்கிறது. இந்தியாவில் மிகுந்த தர்க்கத்தை உண்டுபண்ணிய பெளத்தம் தாந்திாீக கோட்பாட்டின் தாக்கம் மூலம் மறு வடிவம் பெற்றது. எந்த ஒரு கோட்பாடுமே அதன் காலசக்கரத்தில் திசை மாறி செல்லும் இயல்புடையது என்பதற்கு தாந்திாீகம் ஓர் உதாரணம்.

peer13@asean-mail.com

Series Navigation

எச்.பீர்முஹமது

எச்.பீர்முஹமது