This entry is in the series 20040701_Issue

நூர்ஜஹான் சுலைமான், சிங்கப்பூர்


பல லட்சம் செலவில்
அரண்மனைப் போல்
கட்டிய புதுவீட்டில்
கட்டிலில் படுத்தபடி
கூரையெங்கும்
கூறுகட்டப் பட்டிருக்கிற
மரப் பலகைகளைப்
பார்க்கிற போது
மனதைப் பிசைகிறது….
இந்த
ஒற்றை இல்லத்தை
உருவாக்குவதற்காக
வெட்டப்பட்ட
மரங்களிலிருந்து
கலைக்கப் பட்டவை
எத்தனைப் பறவைகளின்
இருப்பிடங்களோ ?

Series Navigation