இடைவெளி

This entry is part [part not set] of 35 in the series 20090806_Issue

செல்வராஜ் ஜெகதீசன்நீண்ட
இடைவெளிக்குப்
பின்
எழுதிய
கடித
மொன்றில்
பெரிதும்
மாறிப்
போயிருந்தது
கையெழுத்து
இவனைப்
போலவே.

o
jagee70@gmail.com

Series Navigation

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

இடைவெளி

This entry is part [part not set] of 33 in the series 20090212_Issue

ரா. கணேஷ்அப்பா….!
இரவு தூக்கத்தில்
என்
இரண்டு கால்களையும்
இடுப்பில்
சுமந்திருக்கிறீர்கள்

நீங்கள்
கூர் செய்த
பென்சில்கள்
இன்னும்
என் நினைவில்
எழுதிக்கொண்டு
இருக்கின்றன

என் பா£ட்ஷை
நேரங்களில்
நீங்களல்லவா
என் விடிகாலை
அலாரம்

உங்கள்
உள்ளங்கை சூட்டிலும்
கைவிரல் ஜவ்வுகளிலும்
என் இளவயது
அச்சங்கள்
தொலைந்து
போயிருக்கின்றன

நான் சைக்கிள்
சவா¡¢ பழக
நீங்கள்
வேலைக்கு
விடுமுறை சவா¡¢

பிரதி மாதம்
முதல் தேதி
நீங்கள்
வாங்கி வரும்
ஜாங்கி¡¢
நெஞ்சில்
இன்னமும்
ஜீராவாய்
ஒழுகிக் கொண்டு
இருக்கிறது

எங்கு பிசகினோம் ?
யார் கண் திருஷ்டி ?

இமைக்கும் கண்ணுக்கும்
இடையில்
கள்ளி வேலி
எப்படி ?

என் இடுப்பில்
வேட்டி ஏறியதும்
உங்கள் பாசம்
ஏன்
அம்மணமாயிற்று ?

நான் கட்டிய
காதல் கோட்டை
நம் உறவிற்கு
பிரமிடாய்
போனதேன் ?

ஒரே வீட்டில்
இரண்டு
முகாம்களிட்டு
வாழ்கிறோம்

நம் வீட்டில்
வசதிகள்
வளர்பிறையாய்

சூ¡¢யனாய்
ஒளிர்ந்த
நம் உறவோ…
கிரகணமாய்
தேய்ந்து கொண்டு

நீங்கள்
பேசத் தயாராயில்லை
எனக்கோ
பேசத் திராணியில்லை
வருந்த மட்டும்
செய்வதால்
வி¡¢ந்து போன
உறவு
உதடுகளாய் ஒட்டுமா என்ன ?

– ரா. கணேஷ்
சென்னை

Series Navigation

ரா.கணேஷ்

ரா.கணேஷ்