அளபெடை

This entry is part [part not set] of 41 in the series 20030904_Issue

நெப்போலியன், சிங்கப்பூர்


நீ + நான்
என்ற கணிதமும்
நாங்கள் = அவர்கள்அவைகள்
எனும் அறிவியலும்
எவரால் ?
எப்பொழுது ?
சொல்லச் சொல்லும்
வரலாறும்
உருண்டை தட்டை
பூமத்திய பூச்சிய
புவியியலும்
கிறுக்காய்
எழுதப் பழக்கிய
அளபெடை மொழியும்
கசடறக் கற்றதால்
மட்டுமே
வருவதில்லை
என் கவிதை…

——-நெப்போலியன்
சிங்கப்பூர்

kavingarnepolian@yahoo.com.sg

Series Navigation

நெப்போலியன்

நெப்போலியன்