அமெரிக்கா இயந்திர போர்வீரனை உருவாக்க முனைகிறது

This entry is part [part not set] of 30 in the series 20020414_Issue


எதிர்கால போர்வீரன், பெரும் கட்டடங்களை எளிதில் தாண்டக்கூடியவனாக்வும், தன்னுடைய புண்களைதானே குணப்படுத்திக்கொள்பவனாகவும், எதிரே வரும் துப்பாக்கிக் குண்டுகளின் பாதையிலிருந்து எளிதில் விலகிக்கொள்பவனாகவும், நினைத்த நேரத்தில் கண்ணுக்குத் தெரியாதவனாகவும் ஆகும் திறமை படைத்தவனாக இருப்பான்.

இதெல்லாம் அமெரிக்க ராணுவம் தன்னுடைய எதிர்கால இயந்திர போர்வீரனுக்குத் தேவையான குணங்கள் எனப் பட்டியல் போட்டு, இவைகளைச் செய்ய மசாசூசெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜிக்கு கொடுத்திருக்கும் திட்டங்கள்.

50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொண்டு உருவாகும் மையம் Institute for Soldier Nanotechnologies (ISN). என்று அழைக்கப்படும்.

இந்த அமைப்புக்கு இருக்கும் குறிக்கோள்கள் பல. போர்வீரனை கண்ணுக்குத் தெரியாதவனாக ஆக்கும் உடைகள். போர்வீரனது கால்கள் உடைந்துவிட்டால், உடை உடனேயே கால் உடைந்தால் போடும் கட்டுபோல இறுகும் துணி ஆகியவை.

வெற்றிகொள்ள முடியாத நூற்றுக்கணக்கான போர்வீரர்கள் இவ்வாறு எதிரே வரும்போது எதிராளியின் மனத்தில் எப்படிப்பட்ட மனநிலையை தோற்றுவிக்க முடியும் என சிந்தித்துப்பாருங்கள்.

உடலின் மேல் நண்டுகளுக்கு இருப்பதுபோன்ற வெளிப்புற எலும்புக்கூட்டையும் உருவாக்கத் திட்டமிட்டு இருக்கிறது. இது எந்த துப்பாக்கிக் குண்டுகளையும் தாங்கும். இது தகுந்த நேரத்தில் ஆயுதமாகவும் பயன்படுத்தப்படலாம்.

செருப்புகளில் சக்தியோடு கூடிய ஆயுதங்களை வைத்து, எளிதாக வெகு தூரம் ஓடவும், அமானுஷ்ய சக்தியை கொண்டு எதிராளியைத் தாக்கவும் இவை பயன்படும்.

பழங்கால சங்கிலி சட்டை போல, நவீன மூலக்கூறு அறிவியலின் துணையோடு நவீன கவசத்தை இந்த மையம் உருவாக்க இருக்கிறது.

இப்படிப்பட்ட எதிர்கால போர்வீரன், தன்னை எளிதில் காப்பாற்றிக்கொள்வது மட்டுமல்ல, எதிராளிக்கு மிகுந்த ஆபத்தையும் விளைவிப்பான் என்று கூறுகிறா ஐ.எஸ்.என் பேராசிரிய நெட் தாமஸ்.

ஐ.எஸ்.என் மையத்தில் சுமார் 150 பேர்கள் வேலை செய்வார்கள். 35 எம்.ஐ.டி பேராசிரியர்கள், 80 முதுகலை மாணவர்கள், இன்னும் ராணுவத்தின் முக்கிய நிபுணர்கள் ஆகியோர்.

ஆராய்ச்சி 6 முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்தும்

*எதிராளியின் ஆயுதத்தை அடையாளப்படுத்துதல்

*ஆயுதத்துக்கு எதிரான பாதுகாப்பை உருவாக்குதல், (புல்லட் புரூஃப் உடையாக உடை மாறுவது)

*கண்ணுக்கு தெரியாமல் மறைதல்

*அதிக சக்தியுடன் போர்வீரன் செயலாற்ற உதவுதல்

*காயம்பட்டதும் அங்கேயே அப்போதே நிவாரணம் வழங்குதல்

*போர்வீரன் எடுத்துச்செல்லும் எடை 45 பவுண்டுகள் என ஆக்குதல்,( இன்று சுமார் 145 பவுண்டு எடையை தூக்கிக்கொண்டு ஒரு ராணுவ வீரன் நடக்கிறான்)

ஏற்கெனவே எம்.ஐ.டி முன்பு ராணுவத்துக்கு பலவகையில் போர்க்காலங்களில் உதவி வந்துள்ளது.

இரண்டாம் உலகப்போரின் போது, எதிரே வரும் விமானங்களைக் கண்டுபிடிக்க ராடார் அமைப்பை இதுதான் உருவாக்கியது.

பனிப்போரின் போது, ராக்கெட் குண்டுகளான மிஸ்ஸைல்ஸ்களுக்கு வழிகாட்டும் அமைப்புக்களை உருவாக்கித்தந்தது.

எம்.ஐடியில் இப்போது உருவாக்கப்படும் பல விஷயங்கள் இன்னும் பத்தாண்டுகளுக்கு வெளியே வராது.

Series Navigation