அன்புடன்…

This entry is part [part not set] of 39 in the series 20080605_Issue

தாஜ்



மதிப்பிற்குரிய சுஜாதாவின் மறைவையொட்டி அஞ்சலி செய்யும் முகமாக நான் எழுதிய கட்டுரையில் சுஜாதாவிடம் ‘கற்றதும் பெற்றதும் ஏராளம்’ என ஆரம்பித்து, அவரது கல்யாண குணங்கள் , அவருக்கும் எனக்குமான தொடர்பின் நினைவலை என சிலவற்றைப் பதிவு செய்திருந்தேன். அதையும் வெறும் பாராட்டுகளால் மட்டுல்லாமல், வெட்டியும் ஒட்டியும் அடியோட்டமான விமர்சனப் பார்வையோடே எழுதியிருந்தேன். அவரது ஆன்மீகம் சார்ந்த குணத்தைக் குறிப்பிட எண்ணிய நான், ‘திருக்குர் ஆனும் நானும்’ என்று முன்பு அவர் எழுதிய கட்டுரை ஒன்றை அதன் பொருட்டு பதிவேற்றினேன்.

‘எல்லா மதங்களைப்பற்றியும், வேதங்களைப்பற்றியும் நன்கு அறிந்தவர் அவரென்றாலும், திருக்குர்ஆன்-ஐ விமர்சன நோக்கில் பார்க்காமல், அதில் காணும் நல்லவைகளை நல்லவிதமாகவும் சொல்லி இருக்கிறார்’ என்கிற குறிப்புடனேயே வாசகர்களின் பார்வைக்கு வைத்திருந்தேன். இருந்தும், நண்பர்களின் கேள்விகளில் சிக்கிக் கொண்டு விட்டேன்! இன்னொரு பார்வையில், நண்பர்களின் கடிதங்கள் ரசனைக்குரியதாக இருக்க, ரசிக்கவும் ரசித்தேன்.
நன்றி!
– தாஜ்


satajdeen@gmail.com

Series Navigation

அன்புடன்…..

This entry is part [part not set] of 27 in the series 20070712_Issue

தாஜ்


உயிர்…
தறித்தவர்களுக்கெல்லாம்
சுவாசமட்டுமல்ல
தேவைகளின் தொடர் நீளம்.
இன்றைய கணக்கில்
நித்தம் உயிர் பேணும்
உன் கடிதமும் இல்லை.

நாம் அறியா நொடிகளில்
கூறுகளின் வழியே
பொசுக்கும் உஷ்ணம்
இருத்தலுக்கோர் சோதனை.
காலமும்
கால்பட்ட நிலமும் அப்படி!

கொண்ட சூட்டிற்கு
களிம்பிட்டுக் கொள்ளும்
விசனத்தில்
தவறவிட்ட நட்சத்திரச்
சங்கதிகள் ஏராளாம்.
உன்னில்… எனக்கான
கடிதங்களையும் சேர்த்து.

என் யூகங்கள்
பொய்க்குமெனில் உன்
பொதுப்பார்வைக்கு நான்
நகர்த்தப் பட்டிருக்கக்கூடும்
உடைந்த சிற்பமாய்
வற்றிய நதியாய்
காய்ந்த மரமாய்
அல்லது….
இன்னொருவன் என்கிற
ஸ்தானம்!

தவிர,
கடிதமெழுதும் மொழி
உனக்கு மறந்துவிட்டதென
நினைக்கவும்
சாத்தியமேது?

**********
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com

Series Navigation