திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

லாவண்யா கவிதைகள்

அவள் ஒவ்வொரு முறை சிக்னலில் நிற்கும்போதும் அவள் வருவாள் கையில் ஒரு நசுங்கின பாத்திரம், கறுப்பேறின புடவை என்ன வைத்திருப்பாள் அதனுள் என்று தொியாத அந்த பை அவள் தினமும் வருவாள் மறுத்தால் பேசாமல்…

துடிப்பான சிறகுகள்

மனுபாரதி காற்றில் ஓர் அரங்கம். அங்கே.... கால் பாவாமல் நிற்கும் ஒரு வித்தை. நம்பமுடியவில்லை. கண்ணுக்குத் தெரியாத கயிறொன்றைப் பிடித்திருக்கிறாயோ ? - என் ஐயமனத்தில் ஒரு கேள்வி. 'நாங்கள் இருக்கிறோம், இருக்கிறோம். '…

என் கண்ணம்மா

வ.ஐ.ச.ஜெயபாலன் பாலைநடுவினிலே மனம் வற்றி- உயிர்ப் பம்பரம்ஓய்கையிலே வாழும்கனவு என கண்முன்னே வளர்ந்தசிறு நதியே தோழமையின் பெருக்கில் எனது துயர்கள்கரைந்ததடி வாழத்துடிக்குதடி கண்ணம்மா என் வார்த்தைகள் காவியமாய் கூதிர் இருட்போர்வை விலக்கிக் குவலயம் கண்…

கலப்பினம்

லாங்ஸ்டன் ஹ்யூ என் அப்பா ஒரு கிழட்டு வெள்ளையன், என் அம்மாக் கிழமோ கறுப்பு, எப்போதேனும் என் கிழ அப்பனைத் திட்டியிருந்தால் என் வசையைத் திரும்ப வாங்கிக் கொள்கிறேன் எப்போதேனும் என் கறுப்பு அம்மாக்…

நதியோடுபேசுதல்.

வ.ஐ.ச.ஜெயபாலன் ஏன் அழுதாய் தாமிரபரணி. என் தாய்மொழியின் கருவறையே. தமிழ்நாட்டின்மேகலையே. முகிலூர்ந்து தென்பொதிகைமீதிறங்கி பாண்டியர்கள் பசிதீர்க்கஓடிவரும் பச்சைவயல்த் தேவதையே. அன்னியர்முன் இந்தியகல்வேலி எல்லாம் தலை சாய்ந்த கரிநாளில் நிமிர்ந்தஉன் நெல்வேலி இன்று உள் வீட்டுள்…

கே ஆர் அய்யங்காரின் கவிதைகள்

அக்கா தங்கை... 'என் அகத்துக்காரர் சிட்டி பேங்க் ' 'என் அகத்துக்காரர் க்ாிண்ட்லேஸ் பேங்க் ' 'என் அகத்துக்காரர் மேனேஜர் ' 'என் அகத்துக்காரர் உதவி வைஸ் ப்ரசிடெண்ட் ' 'என் பையன் டான்பாஸ்கோ…

கடத்தல் கவிதை

நிக்கி ஜியோவானிகடத்தப் பட்டதுண்டா கவிஞனால் நீ நான் கவியென்றால் உன்னைக் கடத்துவேன் என் சந்தங்களில் , எதுகையில் அடைப்பேன் உன்னை ஜோன்ஸ் கடற்கரைக்கு அழைத்துப் போவேன் அல்லது கோனித் தீவிற்கு அல்லது என் வீட்டுக்கே…

ரேவதியின் கவிதைகள்

1.உஷ்ணம் வானையே குடித்த பின்னும் உஷ்ணமாய் புகைகிறது பூமி பாரம் தாங்காத காளையின் ஊமை அழுகை உமிழ்நீர்க் கோலமாகிறது மண்ணில் அரைப் பாவாடைச் சிறுமி கையேந்தி இரந்து நிற்கிறது இதயங்களை குழாயில் அலகுசெருகி அண்ணாந்து…

பழுப்பு நிற அணில்

ஹம்பெர்ட் வுல்ஃப் ஒரு சின்ன பழுப்புக் காபிப் பாத்திரம் போல உட்கார்ந்திருந்தது அணில். மோசமான பிராணி மரங்களைத் தின்பதாகட்டும் தன் கரும் பழுப்பு உறவுகளை விழுங்குவதாகட்டும். காவல்காரன் அப்படியல்ல -அணிலைச் சுட்டவன் - கிறுஸ்தவன்…

வாருங்கள் கவிதையால் கடத்தப் படுவோம்.

என்னைப் பற்றி நான் நினைத்தால் மாயா ஏஞ்சலெள என்னைப் பற்றி நான் நினைத்தால் சிரிப்பில் செத்தே போவேன் போல். என் வாழ்ககையே ஒரு பெரும் கேலிக் கூத்து நடனம் என்றபடி வெறுமே நடந்தது போல…