தந்தை பெரியார் எழுதிய குசேலன் விமர்சனம்

This entry is part [part not set] of 45 in the series 20080814_Issue

புதியமாதவி, மும்பை


குசேலன் பற்றி நிறைய விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
என்ன தான் சொல்லுங்க..

குசேலன் பற்றி எத்தனைப் பேர் விமர்சனம் எழுதினாலும்
ஏற்கனவே தந்தை பெரியார் எழுதிய குசேலன் விமர்சனம்
மாதிரி “நச்”சுனு இருக்காது!!.

அய்யா கேள்வி கேட்காத வரை கண்ணபிரான் – குசேலன் கதை ரொம்பவே
வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. பாடப்புத்தகத்தில் வாத்தியார் சொல்லிக்கொடுக்கும்
போதும் சரி, சினிமா காட்சியாக பார்க்கும் போதும் சரி, அய்யா இது பற்றி எழுதியிருந்ததை
வாசிக்கும் முன்புவரை இந்த மாதிரி ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்றே யாருக்கும்
தோன்றவில்லை.
27 பிள்ளைகள் பெற்றவன் குசேலன். அவன் பிச்சை எடுக்க வந்திருப்பது மோசடி
என்றார். ஒரு ஆண்டுக்கு ஒரு பிள்ளை என்று கணக்கு வைத்துப் பார்த்தாலும்
20 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் 7 பிள்ளைகள் இருக்க வேண்டும். தோளுக்கு மேல்
வளர்ந்த 7 பிள்ளைகளைத் தடிமாடு மாதிரி வளர்த்திருக்கும் குடும்பத்தில் ஒருவர் பிச்சை
எடுக்கிறார் என்றால் அந்தக் குடும்பத்து யோக்யதை என்ன?”
என்று கேட்டார் பாருங்கள்..

புதியமாதவி, மும்பை


puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை